தொண்டை வலியை போக்கும் குரங்கு தோடு செடி!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 27 Second

நமக்கு அருகில் எளிதில் கிடைக்கும் மூலிகைகள், கடைசரக்குகள், இல்லத்தில் உள்ள உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், வீக்கம், நெறிக் கட்டியை போக்க கூடியதும், தொண்டை வலியை சரிசெய்யவல்லதும், தேள்கடி விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டதுமான குரங்கு தோடு செடியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.சாலை ஓரங்களில் அழகாக பூத்து காணப்படுவது குரங்கு தோடு செடி. இதற்கு தேள்கொடுக்கு காய் செடி என்ற பெயரும் உண்டு. தேள் கொடுக்கு போன்று இதன் காய்கள் இருக்கும். பல்வேறு நன்மைகளை கொண்ட குரங்கு தோடு செடி காய்ச்சலை போக்கும் மருந்தாக விளங்குகிறது.

காகாய் வலிப்பை குணப்படுத்துகிறது. வீக்கத்தை வற்ற செய்கிறது. வலியை போக்குகிறது.
குரங்கு தோடு இலைகளை பயன்படுத்தி தொண்டையில் ஏற்படும் வலி, அழற்சியை போக்கும் மருந்து தயாரிக்கலாம்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்துக் கொள்ளவும். இதில், குரங்கு தோடு செடியின் இலைகளை துண்டுகளாக்கி போட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி வாய் கொப்பளித்தால் தொண்டை வலி சரியாகும். தொண்டை புண், தொண்டையில் ஏற்படும் அழற்சி ஆகியவை குணமாகும். மேலும், தொண்டை கட்டு, தொண்டை கம்மல் போன்ற பிரச்னைகள் நீங்கும். குரலில் தெளிவு உண்டாகும்.

குரங்கு தோடு செடியின் வேரை பயன்படுத்தி தூக்கத்தை உண்டாக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: குரங்கு தோடு செடியின் வேர், கசகசா, பனங்கற்கண்டு, பால்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் நீர் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் 2 முதல் 5 கிராம் வரை குரங்கு தோடு செடியின் வேர், அரை ஸ்பூன் கசகசா, சிறிது பனங்கற்கண்டு சேர்க்கவும். இது, கொதித்த பின்னர் காய்ச்சிய பால் சேர்க்கவும். இதை வடிகட்டி இரவு தூங்கபோகும் முன்பு குடித்துவர நல்ல தூக்கம் வரும். நரம்புகள் பலப்படும். கை, கால்களில் ஏற்படும் வலி சரியாகும். தேள் கடிக்கு அற்புதமான மருந்தாக விளங்குகிறது. இந்த மருந்தை குடித்தால் தேள்கடி விஷம் முறியும்.

குரங்கு தோடு செடியின் இலைகளை பயன்படுத்தி வீக்கம், நெறிகட்டியை போக்கும் மேல் பூச்சு மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: குரங்கு தோடு இலை, விளக்கெண்ணெய்.செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது விளக்கெண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதில், குரங்கு தோடு இலை பசையை சேர்த்து வதக்கவும். இதை மேல்பூச்சாக பயன்படுத்தும்போது வீக்கம், நெறிகட்டிகள் சரியாகும். காசநோயினால் வரும் நெறிக்கட்டியை குணப்படுத்தும். கழுத்தில் ஏற்படும் வீக்கம் சரியாகும். வலி இல்லாமல் போகும்.சீத கழிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். இப்பிரச்னைக்கு மா இலை, நாவல் இலை ஆகியவை மருந்தாகிறது. மா துளிர் இலை, நாவல் துளிர் இலை ஆகியவற்றை அரைத்து மோரில் கலந்து குடித்தால் கழிச்சல் தணித்து ஆரோக்கியம் ஏற்படும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தோல் சுருக்கத்தை போக்கும் சோம்பு!! (மருத்துவம்)
Next post சிறந்த மணவாழ்க்கைக்கு சிறப்பான “டிப்ஸ்”!! (அவ்வப்போது கிளாமர்)