நலம் தரும் மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 12 Second

அறிவோமா?

அத்தி

* அத்தி இலையை அடிக்கடி உண்டு வந்தால் உதட்டுப்புண் ஆறும்.
* புரையோடிய புண், காயம் ஆற அத்திப்பால் தடவலாம்.
* அத்திப் பழம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் அடையும்.
* சாப்பாட்டுக்குப் பின் அத்தி விதைகளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் ஏற்படாது.
* அத்திப் பழம் தினமும் ஐந்து முறை சாப்பிட்டு வர நரம்புத்தளர்ச்சி நீங்கும்.

கீரையின் மருத்துவ குணங்கள்

* புதினா கீரை – நரம்பு வலுப்பெறும்.
* புளிச்சக் கீரை – மந்த நிலை நீங்கும்.
* சிறுகீரை – சிறுநீரகம் வலுவடையும்.
* தண்டுக்கீரை – பித்தம் தணியும்.
* பசலைக் கீரை – மூளை பலப்படும்.
* மணத்தக்காளி – இதயம் வலிமையாகும்.
* அகத்திக்கீரை – வயிற்றுப் புண் நீங்கும்.
* முருங்கைக் கீரை – நீரிழிவு நோய் குறையும்.
* அரைக் கீரை – நோய் எதிர்ப்பு சக்தி பெருகும்.
* முளைக்கீரை – ரத்தம் சுத்தமடையும்.
* சிவப்பு தண்டுக்கீரை – உடல் குளுமை பெறும்.
– எம்.செல்லையா, சாத்தூர்.

பாகற்காய்

* உணவுப் பையிலுள்ள பூச்சிகளை கொல்லும்.
* பசியைத் தூண்டும்.
* பித்தத்தைத் தணிக்கும்.
* தாய்ப்பால் சுரக்க இது உதவுகிறது.
* காய்ச்சல், இருமல், இரைப்பு, மூலம் போன்றவை சரியாகும்.
* ரத்தம் சுத்தப்படும்.
* சருமம் பளபளப்பாகும்.
* முற்றிய பாகற்காய் சர்க்கரை வியாதியைப் போக்குகிறது.
* உடலில் கட்டி, புண்கள் இருந்தால் அவற்றைப் போக்குகிறது.
* உடல் ஊட்டத்திற்கு இது சிறந்த டானிக்காகப் பயன்படுகிறது.
* உள்ளங்கால் எரிச்சலை கட்டுப்படுத்துகிறது.
* இது வயிற்றுப்போக்கை சரிப்படுத்துகிறது.

மணத்தக்காளி

* ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
* இருமல், காய்ச்சல் குறையும்.
* சர்க்கரைநோய், சிறுநீர் பிரச்னை சீராகும்.
* வாத நோய், வாயுக்கோளாறு அகலும்.
* தேன் கலந்து சாப்பிட்டால் உடல் பருக்கும்.
* இதயம் வலுப்பெறும்.
* ஈரல் நோய்களுக்கு நல்லது.
* உடல் தேறும்.
* சூடு தணியும்.
* நல்ல உறக்கம் தரும்.
* வயிற்றுப்பூச்சி வெளியேறும்.
* வாய்ப்புண், தொண்டைப்புண் ஆறும்.
* கை, கால் வலி குறையும்.
* கோழையை அகற்றும்.
* மலச்சிக்கல் சீராகும்.
* கண் பார்வை தெளிவடையும்.
* சருமப் பிரச்னைக் குறையும்.
* வயிற்றுவலி சீராகும்.
* ரத்த அழுத்தத்தைத் தணிக்கும்.

மிளகு

* மிளகு நஞ்சை முறிக்கும் பேராற்றலுடையது.
* நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.
* புற்றுநோய் செல்களை வளராமல் தடுக்கிறது.
* உணவு செரியாமை, மலச்சிக்கல் போன்றவற்றை வராமல் செய்கிறது.
* உடலில் கொழுப்பு செல்கள் குறைய உதவுகிறது.
* நரம்பு மண்டலம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்கிறது.
* மூட்டு வலி போன்ற எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாக உதவுகிறது.
* பல் சொத்தை, ஈறு வீக்கம், பல் வலி போன்றவற்றிற்கு சிறந்த மருந்து.

கற்றாழை

* நீர்க் கடுப்பு, நீர்த் தாரை எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், உடல் வெப்பம், உடல் காந்தல் போன்ற பாதிப்புகளுக்கு, இதனுடன் சமமான அளவில் பனங்கற்கண்டு சேர்த்து காலை, மாலை உண்டு வந்தால் உடல் உஷ்ணமும், எரிச்சலும் குறையும்.
* கண் எரிச்சலும், சிவந்த நிறமும் மறைந்து விடும்.
* நல்ல உறக்கம் வரும்.
* கண் பார்வை தெளிவு பெறும்.
* ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.
* இதன் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் சேர்த்து சாப்பிட குருதியும், சீதலமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.

(இது போல பயனுள்ள தகவல்கள், ஆளுமைகள் குறித்த விவரங்கள், உங்கள் சொந்த அனுபவம், சின்னச் சின்ன ஆலோசனைகள், உங்களை பாதித்த நிகழ்வுகள் என எதை வேண்டுமானாலும் வாசகர் பகுதிக்கு அனுப்பலாம். சிறந்தவை பிரசுரிக்கப்படும்.)

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைபாரத்தை போக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)
Next post பாராளுமன்றத்திலும் ஆட்டம் காட்டிய ”கொரோனா”!! (கட்டுரை)