சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் கட்டுக்கொடி!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 42 Second

நமக்கு அருகில், எளிதில் கிடைக்கும் மூலிகைகள், இல்லத்தில் அஞ்சறைப் பெட்டியில் உள்ள உணவுப்பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில், தோல் நோய்களை குணப்படுத்த கூடியதும், கழிச்சல், வெள்ளைப்போக்கு பிரச்னைகளை தீர்க்கவல்லதும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும் தன்மை கொண்டதும், உடலுக்கு பலம் தரக்கூடியதாகவும் விளங்கும் கட்டுக்கொடியின் நன்மைகள் குறித்து நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் காணலாம்.

சாலையோரங்களில், பனை மரங்களில் படர்வது கட்டுக்கொடி. இதன் இலை சாறு வீக்கத்தை வற்றச் செய்யும் தன்மை உடையதாக விளங்குகிறது. ரத்தப் பெருக்கை கட்ட கூடியதாகிறது. சீத பேதி, ரத்த பேதியை தணிக்க கூடியது. மூலத்துக்கு அற்புதமான மருந்தாகிறது. மூலக்கடுப்பு, எரிச்சலை தணிக்கும். மேல் பற்றாக போடும்போது தோல்நோய்களை போக்குகிறது. கட்டுக்கொடி இலைகளை பயன்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கட்டுக்கொடி இலைகள், வேப்பம் பூ. செய்முறை: பாத்திரத்தில் ஒரு டம்ளர் நீர் எடுக்கவும்.

இதில், அரை ஸ்பூன் அளவுக்கு காய வைத்த வேப்பம் பூ, சுத்தப்படுத்திய 5 முதல் 10 கட்டுக்கொடி இலைகள் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடித்துவர ரத்தம், சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவு குறையும். கட்டுக்கொடியை பயன்படுத்தி வெள்ளைப்படுதல், கழிச்சல், சீதக்கழிச்சலுக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: கட்டுக்கொடி இலைகள், சர்க்கரை.

செய்முறை: ஒரு பாத்திரத்தில் சிறிது நீர்விடவும். இதில், சர்க்கரை அல்லது கற்கண்டு பொடி, அரைத்து வைத்திருக்கும் கட்டுக்கொடி இலை பசை சேர்க்கவும். இவைகளை கலந்து வைத்திருந்தால் ஜெல்லி போன்று மாறும். இதை எடுத்து நெல்லிக்காய் அளவு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர வெள்ளைப்படுதல் பிரச்னை சரியாகும். கழிச்சல், சீதக்கழிச்சல் குணமாகும். நீரை கட்டக்கூடியதாக விளங்கும் கட்டுக்கொடி இலை சாறு பல்வேறு நன்மைகளை கொண்டது. கட்டுக்கொடி இலைகளை சர்க்கரை இல்லாமல் நீரில் கரைக்கும்போது வரக்கூடிய ஜெல்லியை தோல் நோய்களுக்கு மேல்பூச்சாக பயன்படுத்தலாம்.

இதை பூசினால் உள்ளங்கை, கால் எரிச்சல் பிரச்னைகள் சரியாகும். தோலில் நீர் கசிவுடன் ஏற்படும் அரிப்பு, தடிப்பு குணமாகும். வீக்கத்தை வற்றசெய்யும் தன்மை கொண்ட இது உள், வெளி மருந்தாகி நன்மை தருகிறது. உடல் தேற்றியாகவும், பலம் தரக் கூடியதாகவும் விளங்குகிறது. பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட கட்டுக்கொடியை பயன்படுத்தி நன்மை பெறலாம். குளிர்காலத்தில் ஏற்படும் கழுத்து வலி, கை கால் வலி, இடுப்பு வலியை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். தேவையான பொருட்கள்: உட்டாமணி, வேப்பெண்ணெய். செய்முறை: வேலியோரம், தோட்டத்தில் காணப்படும் உட்டாமணி இலையை எடுத்துக்கொள்ளவும். இதை வேப்பெண்ணெயுடன் சேர்த்து வதக்கி வலி இருக்கும் இடத்தில் ஒத்தடம் கொடுக்க வலி விலகிபோகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீடு தேடி வரும் பார்லர்கள்!! (மகளிர் பக்கம்)
Next post உடலுக்கு பலம் தரும் தினை!! (மருத்துவம்)