வெற்றிலையின் அற்புத மருத்துவ குணங்கள்..! (மருத்துவம்)

Read Time:6 Minute, 3 Second

வெற்றிலை… `Piper betle’’ என்ற தாவரவியல் பெயர்கொண்ட இதற்கு தாம்பூலம், நாகவல்லி, வேந்தன், திரையல் போன்ற பல பெயர் உண்டு. வெற்றிலையில், கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலை, சாதாரண வெற்றிலை போன்ற வகை உள்ளது. வெற்றிலையில் அதன் இலையும் வேரும் மருத்துவ பலன்களை தரக்கூடியவை. கொடி வகையை சேர்ந்த இது, இந்தியாவில் வெப்பமான இடங்களிலும் சதுப்பு நிலங்களிலும் வளரக்கூடியது.இதில், கால்சியம், இரும்புச்சத்து அதிகம் உள்ளன. வீரியம்மிக்க நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பினைல்புரோபின் (Phenylpropene) பொருள் உள்ளது. இது, உடலுக்கு உஷ்ணம் தரக்கூடியது.

* வெற்றிலை, உமிழ்நீரை பெருக்கும், பசியை உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், நாடி நரம்புகளை உரமாக்குவதுடன், காமத்தையும் தூண்டும். இது, இயற்கை தந்த அற்புதம்.

ஆகவே அளவோடு வெற்றிலை சாப்பிட்டுவந்தால், ஆண்மை குறைபாடு நீங்கும். வாய் துர்நாற்றத்தை போக்கும்.
* இலை சாற்றுடன் தேவையான அளவு நீர் மற்றும் பால் கலந்து பருகிவந்தால், சிறுநீர் நன்றாக பிரியும்.
* கடுகு எண்ணெயில் வெற்றிலையை போட்டு சூடுபடுத்தி ஒரு துணியில் வைத்து மார்பில் கட்டினால், மூச்சுத்திணறல் மற்றும் இருமல் கட்டுப்படும். இதன் இலை சாற்றுடன் கஸ்தூரி அல்லது கோரோசனை சேர்த்து, தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு உண்டான சளி, இருமல் போன்றவை குணமாகும்.

* வெற்றிலையை தீயில் வாட்டி, அதனுள் ஐந்து துளசி இலைகளை வைத்து, கசக்கி பிழிந்து சாறு எடுத்து, 10 மாத குழந்தைக்கு காலையும் மாலையும் 10 சொட்டு வீதம் கொடுத்து வந்தால் சளி, இருமல் குணமாகும். வெறும் இலையை தீயில் வாட்டி, மார்பில் பற்றுப் போட்டுவந்தால் சளி குறையும். விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் மற்றும் கீல்வாத கோளாறுகளுக்கு இதன் இலையை அரைத்து கட்டிவந்தால் கைமேல் பலன் கிடைக்கும்.

* கம்மாறு வெற்றிலைச்சாறு 15 மி.லி எடுத்து அதனுடன் வெந்நீர் கலந்து குடித்து வந்தால், வயிற்று உப்புசம், மந்தம், தலைவலி, நீரேற்றம், வயிற்றுவலி போன்றவை குணமாகும்.
* இலையில் ஆமணக்கு எண்ணெய் தடவி வாட்டி, கட்டிகளின் மேல் வைத்து கட்டினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியாகும். இதை இரவில் கட்டுவது நல்லது.

* கொழுந்து வெற்றிலையுடன் (ஒன்று) ஐந்து மிளகு சேர்த்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும். இதை தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 8 வாரம் சாப்பிட்டு வந்தால், இரைப்பை குடல்வலி, அசிடிட்டி, செரிமானம், மலச்சிக்கல் போன்றவை குணமாவதோடு மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுகள் வெளியேறி உடல் சுத்தமாகும்.
* மலச்சிக்கல் பிரச்னை தீர இதன் சாறு பலன் தரும். 30 மி.லி சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம் அல்லது வெற்றிலையை இடித்து இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, அந்த நீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மலச்சிக்கல் பிரச்னை தீரும்.

* குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் அதிகமாக சுரக்கவும், மார்பில் பால் கட்டுவதால் வரக்கூடிய வீக்கத்தை கரைக்கவும் வெறும் இலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்டினால் பலன் கிடைக்கும்.
* தேள் கடிப்பதால் ஏற்படக்கூடிய விஷத்தை முறிக்க இரண்டு இலையுடன் ஒன்பது மிளகு சேர்த்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். அத்துடன் தேங்காய்த்துண்டுகள் சிலவற்றையும் மென்று சாப்பிட்டால், கைமேல் பலன் கிடைக்கும். தேள் கடி மட்டுமல்ல, விஷப்பூச்சிகள் எதுவும் கடித்தால் இதேபோல செய்து, நோய் பாதிப்பிலிருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

* வெற்றிலை 4, வேப்பிலை ஒரு கைப்பிடி, அறுகம்புல் ஒரு கைப்பிடி எடுத்து சிறிது சிறிதாக நறுக்கி 500 மி.லி தண்ணீர்விட்டு, கொதிக்கவைத்து 150 மி.லி ஆக வற்றியதும் வடிகட்டி, தினமும் மூன்று வேளையும் உணவுக்கு முன்னர் 50 மி.லி குடித்துவந்தால்சர்க்கரையின் அளவு சீராகும்.
* வெற்றிலை போடுவதை, `தாம்பூலம் தரித்தல்’ என்பார்கள். தாம்பூலம் தரிப்பதால் பல நோய்களில் இருந்து நம்மை காத்துக்கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடல் உஷ்ணத்தை போக்கும் கரும்பு!! (மருத்துவம்)
Next post கவர்ச்சி தரும் நக அழகு!! (மகளிர் பக்கம்)