’20’ ஐ மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற ராஜபக்‌ஷக்கள் கையாண்ட உபாயங்கள்!! (கட்டுரை)

Read Time:21 Minute, 58 Second

கடந்த ஒரு தாசாப்தங்களுக்கும் மேலாக நாம் நாட்டில் நடந்த தேர்தல்கள் தொடர்பான முடிவுகளை தேர்தல் நடப்பதற்குப் பல வாரங்கள் முன்பே துள்ளியமாக சொல்லி வந்திருக்கின்றோம். அதே போன்று 20 தொடர்பான நீதி மன்றத்துக்கு ஓரிரு வழக்குகள் பதிவாகிக் கொண்டிருந்த நேரத்திலே இந்த வழக்குகள் ஆளும் தரப்புக்கு வாய்பாக அமையும் என்றும் அதில் சொல்லி இருந்தோம்.

அதே நேரம் கடந்த வாரம் எழுதி இருந்த கட்டுரையில் சிலர் 20 க்கு சர்வசன வாக்கெடுப்பு என்று பேசிய போது, இல்லை சில திருத்தங்களை விலக்கல்களைச் செய்து கொண்டால் 20 ஓகே என்று சொல்லி இருந்தோம். அப்படியான திருத்தங்கள் என்ன என்பதனைக்கூட சுட்டிக் காட்டி இருந்தோம். அது அச் சொட்டாக நடந்திருக்கின்றது. அதே நேரம் சுமந்திரன் போன்ற சிரேஸ்ட சட்டத்தரணிகள் போன்றவர்களும் சில ஆங்கில ஊடகங்களும் 20க்கு சர்வசன வாக்கெடுப்பு என்று சொல்லி இருந்ததும் நமது வாசகர்கள் அறிந்ததே. இந்த 20 தொடர்பான விடயத்தில் எமது விஞ்ஞான ரீதியிலான அரசியல் ஆய்வுகள் 100 சதவீதம் உறுதியாகி இருக்கின்றது.

20 என்ற இலக்கத்தை முதன்மைப்படுத்தி நாங்களும் நிறையவே கட்டுரைகளை வாசகர்களுக்குச் சொல்லி வந்திருக்கின்றறோம். மீண்டும் மீண்டும் அந்த இலக்கத்தை தலைப்பாகப் போட்டு கட்டுரை எழுதி எமக்கே போதும் போதும் என்றாகி விட்டது. அதனால் 20 தொடர்பான கதைகளுக்கு நாமும் முற்றுப் புள்ளி வைக்கலாம் என்று நினைக்கின்றோம். ஒரு நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு ஜனாதிபதிக்கு சில அதிகாரங்கள் இருக்க வேண்டும் தேவை என்ற வாதத்தில் ஒரு யதார்த்தமும் இருக்கின்றது என்று நாங்களும் ஒத்துக் கொண்டாலும், அது அட்டகாசம் மிக்க அதிகாரமாகவோ குடிகளை அடக்கி ஆள்வதற்கான சங்கிலியாகவோஇருப்பதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. 20 ஜனாதிபதிக்கு சலுகை பிரதமருக்கு சலுகை சகோதரன் பசிலுக்கு பாராளுமன்றக் கதவுகளைத் திறந்து கொடுப்பது என்பதற்கு அப்பால் குடும்பத்தை மன்னராட்சிக்கு இட்டுச் செல்கின்ற ஒரு திட்டம் தான் இதன் பின்னணி.

மாகாண சபைகள் நெடுங்காலமாக நாட்டில் நடக்காமல் இருக்கின்றது. அது பற்றி ஒரு வார்த்தை கூட இதில் இல்லை. ஒன்று அதனை வைக்கப் போகின்றோம் அல்லது இல்லாமல் செய்யப் போகின்றோம் என்று ஏதாவது ஒன்றை இந்த 20 சொல்லி அதற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்க வேண்டும். ஆனால் அது பற்றி இதில் ஏதுமே இல்லை எனவே உண்டு இல்லை என்றுதான் அதனைத் தொடர்ந்து வைத்திருக்க விரும்புகின்றார்கள். ஜனாதிபதியும் அவருக்கு நெருக்கமானவர்களும் மாகாண சபை விவகாரத்தில் ஆர்வம் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். அதற்கு கைவைத்தால் இந்தியாவின் எதிர்ப்பு ஆளாகவேண்டி வரும் என்பதால் இப்போது அந்த விடயத்தை கைவிட்டு தன்னலத்துக்குத் தேவையான விடயங்களை மட்டும் இப்போது நிறைவேற்றிக் கொள்ள முனைகின்றார்கள்.

தனிப்பட்ட ரீதியில் நமக்கும் புதிய ஜனாதிபதி எதையாவது நல்லகாரியங்கள் செய்வர் என்ற நம்பிக்கைகள் எமக்கும் நிறையவே இருந்தது. ஆனால் நகர்வுகளைப் பார்க்கின்ற போது அரசியல் ரீதியில் இராஜதந்திரங்களை அவரிடத்தில் காணவில்லை. மாறாக அடக்கு முறையில் நாட்டை நிருவாகிப்பதில்தான் அவருக்கு ஆர்வம் இருக்கின்றது என்பது போல் தெரிகின்றது. இது அவர் ஒரு இராணுவ அதிகாரி என்பதாலோ என்னவோ தெரியாது. இலங்கை போன்ற ஒரு நாடு பக்கத்து நாடுகளைப் பகைத்துக் கொண்டும் சர்வதேசத்துடன் மோதிக் கொண்டும் பயணிக்க முடியாது.

கடும் போக்கு பௌத்தர்களைத் திருப்திப் படுத்துகின்ற அரசியலை முன்னிருத்தி இன்னும் எத்தானை காலம் அரசியல் செய்யலாம் என்பது ஆட்சியாளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால் இப்போதே கடு போக்காளர்கூட அரசின் நடவடிக்கைகள் தீர்மனங்களுடன் முட்டி மோதுகின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. அவர்கள் அரசின் நடவடிக்கைகளை இப்போது பகிரங்கமாக எதிர்க்கின்றார்கள். எல்லே குனவங்ச தேரர், ஆனந்த முறுத்தெட்டுவே தேரர், பெல்லன்கல நலக்க தேரர் போன்றவர்கள் இந்த அரசங்கத்தை பதிவிக்குக் கொண்டு வருவதில் மகத்தான பங்களிப்பைச் செய்தவர்கள். ஆனால் இப்போது 20 உள்ள சில விடயங்களை அவர்கள் கடுமையாக எதிர்க்கின்றார்கள். தமக்கு அரசங்கங்களை அமைக்கவும் தெரியும் கவிழ்க்கவும் தெரியும் என்று ஆளும் தரப்புக்கு இப்போது எச்சரிக்கை கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பொதுத் தேர்தலுக்கு கூட்டணி அமைப்பதற்கு முன்னரே எதிரணியில் போட்டி போடுகின்ற சிறுபான்மையினர் குறிப்பாக முஸ்லிம்கள் பலர் தேர்தல் வெற்றிக்காகத்தான் சஜித் கூட்டணியில் இருக்கின்றார்கள். வாய்ப்பு வருகின்றபோது உண்ட வீட்டிற்கு இவர்களில் பலர் வஞ்சகம் செய்ய இருக்கின்றார்கள் என்பதை நாம் அடித்துச் சொல்லி இருந்தோம். அவர்களின் பலர் எம்முடன் முன்கூட்டியே தேர்தல் வெற்றிக்காகத்தான் நாம் அங்கே நிற்க்கின்றோம் என்று துனிவுடன் கூறியும் இருந்தார்கள். அவர்கள் பசிலுடன் தேர்தலுக்கு முன்பிருந்தே மிக நெருக்மான உறவில் இருந்தார்கள் இந்தக் கதைகளையும் நாம் அப்போது எழுத்தி இருந்தோம்.

வாய்ப்பு வருகின்ற போது இந்த பல்டி நடக்கும் என்றும் எமது கட்டுரையில் பல இடங்களில் அடிக்கடி சொல்லி இருந்தோம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்த அனைத்தப் பேரும் 20ல் பல்டி அடித்து விட்டார்கள் இதனை ஹக்கீம் அறிந்துதான் வைத்திருந்தார். ஒரு கட்டத்தில் மு.கா. தலைவர் தன்னிச்சையாக தான் 20க்கு எதிராக நீதி மன்றம் போய் இருக்கின்றார். கட்சி இதுவரை அது தொடர்பான தீர்மானங்களை எடுக்கவில்லை என்று மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ஹாபீஸ் நாசீர் கூறி இருந்தார். அவரது இந்தக் கூற்றுத் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஹக்கீம் கூறினார். இன்று வரை அப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை. இதன் பின்னரும் நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. அவர்கள் ஒட்டுமொத்தமாக அரசுக்கு ஆதரவாக வாக்களித்து விட்டார்கள். இதன் பின்னர் அவர்கள்தான் கட்சித் தலைவருக்கு எதிராக நடடிவக்கை எடுப்பார்கள் போலிருக்கின்றது.

ஒரு கட்டத்தில் மு.கா. தலைவர் ஆளும்தரப்பில் இருந்து தங்களுக்கு அழைப்பு வந்திருக்கின்றது என்று தெரிவித்தார் இந்த கருத்து பிழையானது. அழைப்பு வந்தது அவருக்கல்ல அவரது நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கே. எனவே தான் ஹக்கீமை வண்டியில் இருந்து இறக்கிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள். இதன் பின்னர் ஹக்கீம் நாம் முன்பொரு முறை சொன்னது போல ஏதாவது தெற்க்கில் ஒரு தொகுத்திக்கு சஜித் அணியின் அமைப்பாளராகத்தான் தொழிற்பட வரும் என்று நாம் நினைக்கின்றோம்.

ஹக்கீம். ரிசாட் ஆகியோரும் ஆளும் தரப்போடு ஒட்டிக் கொள்ள மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தாலும் அவர்களை உள்வாங்கிக் கொள்வதற்கு ஆளும் தரப்பு தயாராக இல்லை. இவர்களை எதிர்த்து மேடைகளில் பேசித்தான் ஆளும் தரப்பு தேர்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுக் கொண்டது. சிங்கள மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிக்க வேண்டுமானால் முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வை உச்ச நிலையில் வைத்திருக்க வேண்டும் என்ற தேவை ஆளும் தரப்புக்கு அப்போது இருந்தது. இதனால்தான் இன்று ஹக்கீமையும் ரிசாடையும் மெட்டுக்கள் அணி தீண்டாதவர்களாக வைத்திருக்கின்றது.

இந்த பல்டியிலுள்ள வேடிக்கை என்ன வென்றால் சஜித் அணியின் ஒரே தேசியப் பட்டியல் பெண் உறுப்பினரும் ஆளும் தரப்புக்கு ஆதரவாக கைதூக்கி சஜித்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கின்றார். முன்பு இவரது பெயரில்தான் இந்த தொலைபேசி கட்சி பதிவு செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்படத்தக்கது. இதனால் சஜித் அணியினர் அவருக்கு எதிராக கடும் கோபத்தில் இருக்கின்றார். மொத்தமாக சஜித் அணியில் இருந்த எட்டுப்பேர் ஆளும் தரப்புக்கு ஆதரவாக வாக்களித்திருக்கின்றார்கள். ஆனால் எதிரணியினரே ஆளும் தரப்பில் இருந்து 20க்கு எதிராக இருபது பேர் வாக்களிக்க இருப்பதாக கூவிக் கொண்டிருந்தார்கள். ஆனால் கதை தலைகீழாகப் போய் விட்டது.

சுதந்திர கட்சியினர் ஆளும்தரப்புக்கு அச்சுறுத்தல் கொடுத்துக் கொண்டிருந்தாலும் இறுதி நேரத்தில் 20க்கு ஆதரவாக கை தூக்கிவிட்டார்கள். ஆனால் மைத்திரி மட்டும் வாக்கொடுப்பு நேரத்தில் அங்கிருந்து ஸ்கெப்பாகி விட்டார். தமிழ் தரப்பினர் 20க்கு எதிரக தங்களது வாக்குகளைப் பதிவு செய்திருந்தார்கள் மலையத்தில் ஒருவர் மட்டும் ஆளும் தரப்புக்கு ஆதரவாக கைதூக்கி இருக்கின்றார். இதன் பின்னர் இவர்களுக்கு இதற்காக என்ன சலுகைகள் கிடைக்க இருக்கின்றது என்று பார்ப்போம்.

வாக்கெடுப்புக்கு ஒருநாளைக்கு முன் நம்முடன் தொடர்ப்பில் இருந்த சில முஸ்லிம் உறுப்பினர்கள் இதன் பின்னர் எப்போது எதிரணி பதவிக்கு வரப்போகின்றது என்பததை எவருக்கும் சொல்ல முடியாது குறைந்தது ஒரு 10 வருடத்துக்காவது இந்த அரசு பதவியில் இருக்கும். எமது மக்களுக்கு ஏதாவது சாதித்துக் கொள்வதற்காக நாம் ஆளும் தரப்பில் பேய்ச்சேருவது காலத்தினதும் சமூகத்தினதும் தேவை. ராஜபக்ஸாக்களுக்கு எதிராகக் கோசம் போட்டுத்தானே நீங்கள் அந்த அணியில் வெற்றி பெற்றிருக்கின்றீர்கள் இப்போது நீங்கள் அடுத்த பக்கம் பல்டி அடிக்கும் போது மக்களுக்கு ஒரு கோபம் வருமே என்று கேட்டதற்கு ஒரு சின்ன கோபத்தக்கு இடமிருக்கின்றது. ஆனால் நாள்பட அது சரியாகி விடும் என்று கூறுகின்றார்கள். மு.கா. தலைவரை தனிக்க விட்டு நீங்கள் அனைவரும் ஆளும்தரப்பில் போய் ஒட்டிக் கொள்ளப்போகின்றீர்களே என்றால்; அரசியல் என்றால் அப்படித்தான் காலம் போக அனேகமாக அவர்களும் நம்முடன் இணைந்து கொள்வார்கள் என்று குறப்பிட்டார் ஒருவர்.

மேலும் கடந்த வாரம் அதிரடியாகக் கைதான ரிசாட் நாடாளுமன்றம் அழைத்து வரப்படார் அவரது நாடாளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் அரசுடன் போய் சேர்ந்து விட்டார். இவருக்கும் பசிலுக்கம் மிக நெருக்கமான உறவுகள் கடந்த காலங்களில் இருந்து வருகின்றது. ஒரு முறை இசாக்கிடம் தம்பி நீதான் மாவட்டத்தில் உங்கள் அணியில் முதலாம் இடத்தில் வருவாய் என்றும் பசில் சொல்லி இருந்ததை நாம் ஒரு முறை பதிவு செய்து இருந்தாம். கம்மன்பில் நாங்களும் ஒரு கட்டத்தில் 35 நாள் மதுமாதவை ஒளித்து வைத்தோம் என்று நியாயப்படுத்தி பேசி சர்ச்சைக்கு ஆளானார்.

கடந்த 21, 22ம் திகதிகளில் மிகவும் பிசியாக இருந்த அரசியல்வாதி பசில் ராஜபக்ஸ அவர் இந்த 20க்குத் தேவையான எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள கடைசி நிமிடம் வரை எதிரணயில் இருந்து தமக்கு ஆதரவளிக்க இருக்கின்ற உறுப்பினர்களுடன் நெருக்கமான உறவில் இருந்து அவர்களுக்குத் தட்டிக் கொடுத்திருக்கின்றார். அதே நேரம் ஆளும் தரப்பில் முரன்டு பிடித்த பலரை ஜனாதிபதி நேரடியாகப் பேசி அவர்களை விவகாரங்களைக் கையாண்டு கொண்டிருந்தார்.

துவக்கத்தில் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுக் கொண்டிருந்த விஜேதாச ராஜபக்ஸ, விதுர விக்கிரம நாயக்க விமல் வாசு போன்றவர்கள் அதிரடியாக அடித்த அந்தர் பல்டி பெரும் ஆச்சர்யமாக இருக்கின்றது. சஜித் தரப்பில் இருந்த பலர் பல்டிக்குத் தாயாரக இருப்பது நமக்கு முன் கூட்டித் தெரிந்திருந்ததால் அது எமக்கு எந்த அதிர்சியையும் கொடுக்க வில்லை. ஆனால் 20க்குப் போர்க் கொடி பிடித்த ஆளும் தரப்பிலுள்ள பலர் வெள்ளைக் கொடியுடன் சரணாகதி அடைந்திருக்கின்றார்கள். நிச்சயமாக இந்த பல்டிகள் அனைத்திலும் நிறையவே கொடுக்கல்வாங்கள் வியாபார நலன்கள் சலுகைகள் இருக்கின்றன. எதிர்கலத்தில் இந்த பல்டிக்காரர்கள் பசில் ராஜபக்கஸவை குருவாகக் கொண்டு தமது அரசியலை முன்னெடுப்பார்கள்.

அதே நேரம் முஸ்லிம்கள் தரப்பில் ஆளும் தரப்பில் பலமான அணியொன்று அலிசப்ரி தலைமையில் உருவெடுக்கவும் நல்ல வாய்ப்புக்கள் இருக்கின்றன. இந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பல்டியில் நீதி அமைச்சர் அலிசப்ரியில் பங்களிப்பு நியாயமாக இருந்திருக்கின்றது என்பது நமக்கு நன்றாகவே தெரியும்.

தற்போது அரசியல் கள நிலவரங்களைப் பார்க்கின்ற போது சுதந்திரக் கட்சியை ராஜபக்ஸாக்கள் சுலபமாகக் கைப்பற்றி விட்டார்கள். என்றுதான் நாம் நினைக்கின்றோம். அந்த அணியில் நிமல் சிரிபால சிரிபால செல்வாக்கான மனிதராக இருப்பார். இவர் சுதந்திரக் கட்சியில் ராஜபக்ஸாக்களின் நலன்களைக் கவனிக்கின்ற ஒரு ஆளாக இருந்து வந்திருக்கின்றார் என்பது எமது கருத்து.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இறுதி நேர இரகசிய டீல்கள் கூட நடந்திருக்கின்ற என்று நமக்குத் தகவல்கள் கிடைத்திக்கின்றனஇ மிக விரைவில் பசில் நாடாளுமன்ற வருகைக்காக கதவு திறக்கப்பட்டு விட்டது. அந்த இடைவெளியை ஏற்படுத்த ஒரு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் தயாராக இருக்கின்றார் என்றும் இல்லை மற்றுமொரு பெரும்பான்மை உறுப்பினரு தயாராக இருக்கின்றார் என்ற கதையும் நமக்கு சொல்லப்பட்டு வருகின்றது.

காவிகள் மத்தியில் 20 தொடர்பில் பாரிய அரசியல் பிளவுகள் இப்போது தோன்றி இருக்கின்றன. அவர்களும் காலப் போக்கில் அடங்கி விடுவார்கள் என்று நாம் எதிர் பார்க்கின்றோம். இந்த 20தால் ஆளும் தரப்பு மேலும் வழுவடைந்திருக்கின்றது.

இந்த 20 விவகாரத்தில் கொNரோனாவும் ராஜபக்ஸாக்குளுக்கு பக்க துணையாக இருந்து ஆதரவு கொடுத்து வந்திருக்கின்றது என்று நாம் நினைக்கின்றோம் கடந்த காலங்களில் இப்படியான அரசியல் மாற்றங்கள் நடந்த போது மக்கள் அரசுககு எதிராக வீதியில் இறங்கிப் போராடிய சம்பவங்கள் நிறையவே நடந்து உயிர்ப் பலிகள் கூட ஏற்பட்டன. ஆனால் இந்த முறை கொரோனாவால் அரசுக்கு மக்களை வீட்டிற்குள் கட்டிப்போட நல்ல வாய்ப்பு அமைந்தது. கொழும்பு சுற்று வட்டாரத்தில் பல இடங்கள் முடக்கப்பட்டு மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்துகின்ற நிலையின் பின்னணி கூட ஒரு அரசியல் விளையாட்டாக இருக்கலாம் என்று நாமக்கு ஒரு சின்ன சந்தேகம் இருக்கின்றது.

ஒட்டு மொத்தமாகப் பார்க்கின்ற போது ஜனாதிபதி ஜீ.ஆரை. முதன்மைப் படுத்திய ராஜபக்ஸாக்களின் குடும்ப அரசியலுக்கு 20 அங்கிகாரம் வழங்கி இருக்கின்றது. தனக்கு சுதந்திரமாக இயங்க இருந்த பல தடைகளை ஜனாதிபதி ஜீ.ஆர். 20தால் நீக்கிக் கொண்டிருக்கின்றார். என்றாலும் அவரது அரசுக்கு எதிர் வரும் காலங்களில் நிறையவே சவால்கள் இருக்கின்றன. வருகின்ற வரவு செலவு திட்டமும் இதில் ஒன்று. நாடாளுமன்றத்தில் உள்ள ஆளும் தரப்பினரில் கணிசமானவர்கள் அதிர்ப்தியுடன் இருக்கின்றார்கள் என்றாலும் நாட்டில் ராஜபக்ஸாக்குளுக்கு இருக்கின்ற செல்வாக்கில் அவர்கள் இன்னும் அரசில் ஒட்டிக் கொள்ள நினைக்கின்றார்கள். அதற்கு நல்ல உதாரணம் அவர்களுடன் மோத நினைத்தவர்கள் இன்று இந்த ஆளும் தரப்பில் வெள்ளைக் கொடியுடன் அங்கு சரணடைந்து நிற்க்கின்றார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சீனாவிற்கு எதிராக இந்தியா அமைக்கும் தமிழ்!! (வீடியோ)
Next post திருமணத்துக்கு முன்பே…!! (அவ்வப்போது கிளாமர்)