கமலா ஹாரிசின் வெற்றிக்காக தமிழ்நாட்டில் வழிபாடு- டிரம்பின் வெற்றிக்காக புதுடில்லியில் பிரார்த்தனை!! (கட்டுரை)

Read Time:3 Minute, 11 Second

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தேர்தலில் வெற்றிபெறவேண்டும் என புதுடில்லியில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ள அதேவேளை ஜனநாயக கட்சியின் துணை ஜனாதிபதி கமலாஹாரிசின் வெற்றிக்காக தமிழ்நாட்டில் வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு ஆரம்பமாவதற்கு முன்னதாக கமலா ஹாரிசின் பூர்வீக கிராமமான தமிழ்நாடு மன்னார் குடியில் உள்ளதுளசேந்திரபுரத்தில் ஆலயவழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
உள்ளுர் அரசியல்வாதியொருவர் அபிசேகம் செய்தார் சுமார் 20 பேர் வழிபாடுகளி;ல் கலந்துகொண்டனர் என ஆலயத்திற்கு அருகில் கடைவைத்திருக்கும் மணிகண்டன் என்பவர் தெரிவித்துள்ளார்.

கமலாஹாரிசிற்கு வெற்றிவேண்டி பூஜை இடம்பெறுவது குறித்த செய்தியை சேகரிப்பதற்காக வெளிநாட்டு உள்நாட்டு செய்தியாளர்கள் காத்திருந்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அருகிலுள்ள நகரத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கமலா ஹாரிஸ் வெற்றிபெறவேண்டும் என்பதற்காக 150 பேருக்கு இலவசமாக உணவு வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

அவர் இந்த பகுதியை சேர்ந்தவர் நாங்கள் இது குறித்து பெருமிதம் கொள்கின்றோம் என வாண்டையாரின் சகோதரர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புதுடில்லியில் டிரம்பின் வெற்றிக்காக சிவசேனையை சேர்ந்தவர்கள் வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
Activists of Hindu Sena, a Hindu right-wing group, perform a special prayer to ensure a victory of U.S. President Donald Trump in the elections, in New Delhi, India November 3, 2020. REUTERS/Adnan Abidi

டிரம்பின் படத்தை முன்னால் வைத்து அவர்கள் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.
டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால்தான் இந்தியாவால் பயங்கரவாதத்திற்கு எதிராக போராட முடியும் அவர் ஜனாதிபதியாகயிருக்கின்றவரை சீனாவும் பாக்கிஸ்தானும் வாலாட்ட முடியாது என சிவசேனை தலைவர் ஒருவர்ரொய்ட்டரிற்கு தெரிவித்துள்ளார்.
ஹமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு நாங்கள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம் ஆனால் துணை ஜனாதிபதிகள் எப்போதும் வலுவானவர்கள் அதிகாரம் மிக்கவர்கள் இல்iலை என அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெற்றிவேல் யாத்திரையின் பின்னணி என்ன? (வீடியோ)
Next post உறவு சிறக்க உன்னத சிகிச்சைகள்!! (அவ்வப்போது கிளாமர்)