பெண்களின் உடலை உருக்கும் வெள்ளைப்படுதல் பிரச்னை! உடனே கவனம் அவசியம்! (மருத்துவம்)

Read Time:5 Minute, 42 Second

பெண்களுக்கு ஏற்படுகின்ற பிரச்னைகளில் மிக முக்கியமான பிரச்னை வெள்ளைப்படுதல். இதனால் மாதவிலக்கு கோளாறுகளால் பல பெண்கள் அவதிப்படுகிறார்கள். இந்தப் பிரச்னை கருப்பை வாய் புண்களில் ஆரம்பித்து கருப்பை வாய் புற்று நோய் வரைக்கும் கூட கொண்டு சென்றுவிடும்.
இதனால் குழந்தையின்மை பிரச்னையும் பெண்களை ஆட்டுவிக்கிறது. வெள்ளைப்படுதல் பிரச்னைக்குத் தீர்வாக இருக்கும் தேவதாரு கஷாயம் பற்றி விளக்கம் அளிக்கிறார் வர்மா ஆயுர்வேத மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் கௌதமன் B.A.M.S.

தேவதாரு கஷாயம்

தேவையான பொருட்கள்

திரிபலா சூரணம் – 3 கிராம்,
சுக்கு சூரணம் – 3 கிராம்,
தேவதாரு சூரணம் – 3 கிராம்,
மஞ்சள் சூரணம் – 3 கிராம்.

செய்முறை

மேற்கண்ட சூரணங்களை 300 மிலி தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும். தண்ணீர் 100 மி.லிட்டராக வற்றியவுடன் இறக்கி வடிகட்டி காலை ஒருவேளை உணவுக்கு முன்பு இரவு ஒருவேளை உணவுக்கு முன்பு என்று பருகி வரவும். வெள்ளைப்படுதல் உயிர்ச்சத்துக்களை வெளியேற்றி உடலை உருக்கிவிடும்!நவீன மருத்துவத்தில் எந்த மருந்துகள் சாப்பிட்டும் தீராமல் இருக்கக் கூடிய வெள்ளைப்படுதல் நோயை குணமாக்கிவிடும் இந்த தேவதாரு கஷாயம். வெள்ளைப்படுதல் பிரச்னை இருந்தால், அது பெண்களின் உடலில் உள்ள சத்துக்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும். இதனால் அவர்களின் உடல் பலஹீனம் அடைந்து காணப்படும்.

எப்போதும் படுத்தே இருக்கலாம் போலத் தோன்றும். உடலை உருக்கி, எலும்புருக்கி நோய் போல தோற்றத்தை உடலில் ஏற்படுத்தி விடும். நவீன மருத்துவத்தில் ஒரு நோயை புரிந்துகொண்டு சிகிச்சை அளிப்பதற்கும், ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு நோயை புரிந்து கொண்டு வைத்தியம் அளிப்பதிலும் வேறுபாடு நிறைய உண்டு. ஆயுர்வேத மருத்துவத்தில் நோயை புரிந்துகொண்டு சிகிச்சை அளிக்கும் சித்தாந்தப்படி நோய்க்கு முற்றிலுமாகத் தீர்வு கிடைக்கும்.

கருப்பை வாய் புண்ணை தொடரும் கருப்பை வாய் புற்றுநோய்!12 வயது முதல் 60 வயது வரையான பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்பது மிகப்பெரும் பிரச்னையாக இருக்கிறது. இதை ஆரம்ப நிலையில் கவனிக்கத் தவறினால், கருப்பை வாய் புண்ணாக மாறி, கடைசியில் கருப்பை வாய் புற்று நோயாகவும் மாறும் வாய்ப்புக்கள் அதிகம் உண்டு.

குழந்தையின்மை… கருச்சிதைவு!

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோயால், குழந்தையின்மை, அடிக்கடி கருச்சிதைவு, எடை குறைதல், முகப்பொலிவு இல்லாத நிலை, இடுப்பு வலி, தொடை வலி, பசியின்மை, உணவு சாப்பிட முடியாத நிலை, சத்துள்ள ஆகாரம் சாப்பிட்டாலும் உடல் தேறாமல் மெலிந்துகொண்டே செல்வது, தலை முடி கொட்டுதல், மாதவிலக்கு நேரத்தில் அதிகமான உதிரப்போக்கு, மாதவிலக்கு குறிப்பிட்ட நாட்களில் வராமல் தாமதமாக வருவது, தாமதமாக வந்தாலும், 15 நாட்கள் 20 நாட்கள் என்று உதிரப்போக்கு இருப்பது, இதன் காரணமாக அடுத்த மாதம் மாத விலக்கு தள்ளிப் போவது…. என்று பல பிரச்னைகளால் பெண்கள் அவதிப்படுவார்கள். இப்படிப்பட்ட பெண்கள் தேவதாரு கஷாயத்தை சாப்பிடும்போது வெள்ளைப்படுதல் நோய் நாளடைவில் முற்றிலுமாக குணமாகி விடும்.

வெள்ளைப்படுதல் பிரச்னை…

தேவதாரு கஷாயம்!

கருமுட்டைப் பையில் கருமுட்டை முதிர்ச்சி அடைந்து வெளியில் வரும்போதுதான் மாதவிலக்கு ஏற்படுகின்றது. ஆனால், வெள்ளைப்படுதல் பிரச்னை இருக்கும்போது கருமுட்டை முதிர்ச்சி அடையாமல் கருமுட்டைப் பையில் தங்கி ரத்தக் கட்டிகளாக மாறி கருமுட்டைப் பையை அறுவை சிகிச்சை செய்து எடுக்கும் நிலை ஏற்படலாம். இப்படிப்பட்ட பிரச்னைகள் வராமல் காத்துக்கொள்ள தேவதாரு கஷாயத்தை ஆயுர்வேத மருத்துவரின் ஆலோசனைப் படி பெண்கள் பருகி வந்தால் முழுமையான தீர்வு கிடைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அவசியமா ஆண்மை பரிசோதனை? (அவ்வப்போது கிளாமர்)
Next post திடீர் பக்கவாதம்… தீர்வு காண என்ன வழி!! (மருத்துவம்)