குடிநீரில் இவ்வளவு நன்மையா!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 24 Second

தண்ணீர் தாகத்தை தீர்ப்பதோடு உடலில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தரக்கூடியதும் கூட. நம் நாட்டில் நிலவும் அதிக வெப்பமான சூழ்நிலையில் நமது உடல் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றன. தண்ணீர் குடிப்பது குறைத்தால் டீ-ஹைடிரேசன் வர நிறைய வாய்ப்புகள் ஏற்படுகின்றன. இது தொடர்பான விபரங்களை இனி பார்ப்போம். தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால் பல்வேறு நோய்களில் இருந்து விடுபடலாம்.

இதனால் குடல் சுத்தமாகும். தண்ணீர் உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள நச்சுக்களை நீக்கி சிறுநீர் மூலமாக வெளியேற்றி விடும். இதனால் உடல் சுத்தமாகி பசி எடுக்க ஆரம்பிக்கும். அதிகாலையில் தண்ணீர் குடித்து வந்தால் தலைவலி குறையும் அல்சரை தடுக்கும். நம் உடலில் உள்ள இரத்தத்தில் தண்ணீரின் அளவு கூடுதலாக உள்ளது. தண்ணீரின் விகிதம் குறையும் போது ரத்தம் கெட்டியாக மாறும். ரத்த அழுத்தம் குறையும்.

மூளைக்கு இரத்தத்தின் வழியே செல்லும் ஆக்சிஜன் அளவு குறையும். இதன் அளவு குறையும் போது மயக்கம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். இரத்தம் கெட்டியாகி உடல் உறுப்புகளுக்கு செல்லாமல் இருந்தால் அந்த உறுப்புகள் செயலிழக்கும் வாய்ப்புகள் அதிகமாகிறது. சிறுநீரக பிரச்சனைகளுக்கு தண்ணீர் அதிகம் குடிக்காததே முக்கிய காரணமாக விளங்குகிறது. நாளொன்றிக்கு நாம் அருந்த வேண்டிய தண்ணீரின் அளவு 5லிட்டர் ஆகும்.

முதியவர்களும், சிறுவர்களும் இத்தகைய பிரச்சனைகளில் அதிகம் சிக்க வாய்ப்பு உள்ளது.. தண்ணீர்தானே என்று அலட்சியமாக இருந்தால் இது போன்ற சிக்கல்களுக்கு ஆளாக வேண்டி இருக்கும். தினமும் தூங்கி எழுந்ததும் 2டம்ளர் தண்ணீர் அவசியம் குடிக்க வேண்டும். இது தூங்கிக் கொண்டிருந்த உடல் உறுப்புகளை செயல்படச் செய்வதாக இருக்கும்.

அதுபோல் குளிக்க செல்லும் முன் 1 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். (குளிக்கும் போது இரத்த அழுத்தம் குறையும்.) அதுபோல் தூங்கும்முன் 1டம்ளர் தண்ணீரை நிச்சயம் குடிக்க வேண்டும். (இது மாரடைப்பு மற்றும் வாதம் ஏற்படுவதை பெருமளவு தடுக்கும்.) நம் உடல்நிலையை சரியாக வைத்துக்கொள்ள தண்ணீர் நமக்கு சிறந்த தேர்வு. ஆகவே தண்ணீரை அருந்துவோம். உடலை பேணுவோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெயிலில் கருத்துவிட்டதா முகம்? (மகளிர் பக்கம்)
Next post ஆரோக்கியமான வாழ்வுக்கு தண்ணீர் குடியுங்கள்!! (மருத்துவம்)