பி3 வைட்டமின் நமக்கு அவசியமா? (மருத்துவம்)

Read Time:2 Minute, 25 Second

பி காம்ப்ளெக்ஸ் தொகுதியைச் சேர்ந்த வைட்டமின்கள் முக்கியமானது பி3. அடிப்படையில் இது மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. நிகோட்டினமைடு, நியாசின் எனப்படும் நிகோடினிக் அமிலம், நிகோடினமைடு ரிபோசைடு என்று சொல்வார்கள். வைட்டமின் பி3 நம் உடலில் சேரும்போது நிகோடினமைடு அடினைன் டைனக்ளியோடைடு என்ற உயிர்வேதிப் பொருளாக மாறுகிறது. இதை, NAD என்பார்கள். இதுதான், நம உடலின் அடிப்படையான டிஎன்ஏ பழுதுபார்த்தலுக்கும் கால்சியம் உடலில் கரைவதற்கும் முக்கியப் பங்காற்றுகிறது. பீன்ஸ், பால், அசைவம், முட்டை ஆகியவற்றில் வைட்டமின் பி3 நிறைந்துள்ளது.

ஒருவர் உடலில் தினசரி 35 மி.கி நியாசின் இருக்க வேண்டும். இது மாறுபட்டால் சரும எரிச்சல், சரும உலர்வு, அரிப்பு, தலைவலி ஆகியவை தோன்றக்கூடும். இது அளவுக்கு அதிகமானாலும் ரிஸ்க்தான். குறிப்பாக, கல்லீரல் நச்சாகும் பிரச்சனை இதன் அதிகரிப்பால் உருவாவதுதான். காமாலை போன்ற நோய்களைக்கூட உருவாக்கும் மோசமான நோய்த்தொற்று இது. க்ளூகோஸ் இண்டாலரன்ஸ், ஹைப்பர்யூரிசீமியா, மேக்குலர் எடிமா, மேக்குலர் கட்டிகள் போன்ற பிரச்சனைகளையும் உருவாக்கும்.

பெல்லக்கரா என்ற மோசமான சரும நோய் நியாசின் போதாமையால் ஏற்படுவது. குடிகாரர்களுக்கு இது வருவதற்கான வாய்ப்பு மிகவும் அதிகம். மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே இந்த வைட்டமினை மாத்திரை வடிவில் உண்ண வேண்டும். பொதுவாக, ஆரோக்கியமான ஒருவருக்கு உணவின் மூலமே தேவையான நியாசின் கிடைத்துவிடும் என்பதால் அச்சப்பட வேண்டியதில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மினரல் வாட்டரில் மினரலே இல்லை!! (மருத்துவம்)
Next post ஹேர் டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)