முடிவளர்ச்சிக்கு உதவும் வேப்ப எண்ணெய்!! (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 52 Second

குளிர்ச்சியினால் வரும் தலைவலி, பிடரிவலிக்கு வாரம் ஒருமுறை வேப்ப எண்ணெயை தலையில் தேய்த்து நன்றாக ஊறிய பின் தலைக்கு குளித்து வந்தால் குணமாகும். அன்றைய தினம் பகலில் தூங்கக்கூடாது. தினமும் வேப்ப எண்ணெயை தலைக்கு தடவி வந்தால் பேன் தொல்லை ஒழியும். முடிகொட்டுவது நிற்பதுடன், முடியும் நன்றாக செழித்து வளரும்.

மூக்கடைப்பு ஏற்பட்டால் இரவில் தூங்குவது கஷ்டமாக இருக்கும். எனவே படுக்கச் செல்லும் முன் மூக்கின் துவாரத்தில் தடவினால் மூக்கடைப்பு சரியாகும். வாதநோய் தாக்குதலால் கை, கால்கள் உணர்விழந்து விடும். அதற்கு வேப்ப எண்ணெயில் வதக்கிய ஆமணக்கு இலையினை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் வைத்து கட்ட மெல்ல மெல்ல குணமாகும். தினமும் சிறிது வேப்ப எண்ணெய் சாப்பிட்டால் நீரிழிவு எனும் சர்க்கரை நோய் கட்டுப்படுவதாக நம்பப்படுகிறது.

குளிர்காலத்தில் கைகால் சில்லிட்டு விட்டால் 50மிலி. வேப்ப எண்ணெயை சூடாக்கி அதில் கட்டி கற்பூரத்தை பொடித்துப் போட்டால் கற்பூரம் கரைந்து விடும். இந்த எண்ணெயை உள்ளங்கையிலும், உள்ளங்காலிலும் நன்றாக சூடு பறக்க தேய்த்தால் கை, கால் சில்லிட்ட நிலை மாறி விடும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேஜஸான முகம் பெற என்ன செய்ய வேண்டும் !! (மகளிர் பக்கம்)
Next post சரும பளபளப்பிற்கு ஆரஞ்சு தோல்!! (மருத்துவம்)