கூந்தல்!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 48 Second

ஆண்களுக்கான முடி உதிர்வுக்கு ஆன்ட்ரோஜெனிடிக் அலோபேஷியா என்கிற காரணமே பிரதானமாக இருக்கிறது. இவர்களுக்கு முன்னந்தலைப் பகுதியிலும் நடு மண்டைப் பகுதியிலும் முடி உதிர்வு அதிகமாகவும் மற்ற இடங்களில் முடி வளர்ச்சி சாதாரணமாகவும் இருப்பதைப் பார்க்கலாம்.பெண்களுக்கு ஏற்படுகிற முடி உதிர்வை அப்படி ஒரு காரணத்துக்குள் அடக்கி விட முடிவதில்லை.கூந்தல் உதிர்வுக்கான காரணங்களில் இரும்புச்சத்துக் குறைபாடு, வெள்ளை மற்றும் சிவப்பு ரத்த செல்களின் அளவுகள், துத்தநாகம், வைட்டமின் பி 12, ஃபோலிக் ஆசிட், வைட்டமின் டி மற்றும் தைராய்டு குறைபாடுகள் போன்றவை ஆராயப்படும். சில நேரங்களில் ஹார்மோன் மற்றும் முழு ரத்தப் பரிசோதனையும் பரிந்துரைக்கப்படும். அரிதாக சிலருக்கு சிறுநீரகச் செயல்பாடு, புரதம், கொலஸ்ட்ரால், ட்ரைகிளிசரைடு, சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவுகள்கூட பரிசோதிக்கப்பட வேண்டி இருக்கலாம்.இவைகூட கூந்தல் உதிர்வுக்குக் காரணங்கள் ஆகக்கூடும்.

ரத்தப் பரிசோதனைகள் என்ன சொல்லும்?

1. தைராய்டு சோதனை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு கோளாறுகள் கூந்தல் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கக்கூடியவை. எனவே தைராய்டுக்கான டி.எஸ.ஹெச், டி3 மற்றும் டி4 சோதனைகள் அவசியப்படும்.

2. வைட்டமின் குறைபாடுகளுக்கான சோதனைவைட்டமின் குறைபாடுகளும் கூந்தல் ஆரோக்கியத்துடன் நேரடியாக தொடர்புடையவை என்பதால் எளிமையான ரத்தப் பரிசோதனையின் மூலம் அதைக் கண்டுபிடித்துவிட முடியும்.

3. சி.பி.சி எனப்படுகிற முழுமையானரத்தப் பரிசோதனைரத்தசோகை இருக்கிறதா என்பதைக்
கண்டறிகிற சோதனை இது. மிகக் குறைந்த அளவு ரத்தசோகையால்கூட அதிகளவில் முடி உதிர்வு இருக்கலாம்.

4. ஆர்.பி.சி., டபிள்யூ.பி.சி., ஹமோகுளோபின், எம்.சி.வி., எம்.சி.ஹெச்., எம்.சி.ஹெச்.சி போன்றவையும் பரிசோதிக்கப்பட்டு போதுமான
அளவில் உள்ளனவா எனப் பார்க்கப்பட வேண்டும்.

5. வைட்டமின் பி 12 மற்றும் பி 6இந்த இரண்டிலும் பற்றாக்குறை இருந்தால் கூந்தல் உதிர்வு மட்டுமின்றி, நரைப் பிரச்னையும் தீவிரமாக இருக்கும்.

6. துத்தநாகம்

இது குறைந்தாலும் பிரச்னை, கூடினாலும் பிரச்னை. இந்தச் சோதனையைப் பெரும்பாலும் யாரும் செய்து பார்ப்பதில்லை என்பதால் துத்தநாகக் குறைபாடு சரி செய்யப்படாமல், கூந்தல் உதிர்வும் தொடர்ந்து கொண்டே இருக்கும். மற்ற சோதனைகளில் பிரச்னை இல்லை எனத் தெரிந்தால் துத்தநாகக்குறைபாடு காரணமாக இருக்குமோ என்றும் பார்ப்பது நல்லது.

7. ஈஸ்ராடியால் (Estradiol) : இது மெனோபாஸ் பருவத்தில் உள்ள பெண்களுக்கானது. மாதவிலக்கின் 3வது நாள் செய்யப்படுகிற இதில் 80-90 வரையிலான அளவு சாதாரணமானது. 50-ஐவிடக் குறைந்திருந்தால் ஈஸ்ட்ரோஜென் குறைபாடு இருப்பதாக அர்த்தம். அதைப் பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்க
வேண்டும்.

8. டோட்டல் டெஸ்ட்ரோஸ்டீரான், லூட்டினைசிங் ஹார்மோன், புரோலாக்டின், எஃப்.எஸ்.ஹெச் போன்றவற்றின் அளவுகளும் பரிசோதிக்கப்பட
வேண்டும்.

9. ஸகால்ப் பயாப்சிமண்டைப் பகுதியில் இருந்து சுரண்டி எடுக்கப்படுகிற சருமத்தையோ, முடியின் மாதிரியையோ வைத்து கூந்தலின் வேர்ப்பகுதி எப்படி இருக்கிறது என்பதை மருத்துவர் ஆராய்வார். ஏதேனும் இன்ஃபெக்‌ஷன் காரணமாக முடி உதிர்வு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள இது உதவும்.

10. லைட் மைக்ரோஸ்கோப்பிபிரத்யேகமான கருவியைக் கொண்டு கூந்தலின் அடிப் பகுதிகளை ஆராய்கிற முறை இது. கூந்தலின் உள்பகுதிகளில் உள்ள பிரச்னைகளை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

11. முடியை இழுத்துப் பார்க்கிற ஹேர் புல் சோதனைமண்டைப் பகுதியில் இருந்து மெதுவாக முடியை இழுத்துப் பார்ப்பார் மருத்துவர். அப்படி இழுக்கும்போது எத்தனை முடிகள் வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்வதற்கான சோதனை இது. ஒரு இழுப்பில் 3 முடிகள் வரை வந்தால் பிரச்னை இல்லை.

12. டென்சிட்டிமெட்ரி டென்சிட்டோமீட்டர் என்கிற பிரத்யேகக் கருவியைக் கொண்டு, மைக்ரோஸ்கோப் உதவியுடன் கூந்தலின் அடர்த்தியை ஆராயும் சோதனை இது.

13. ஹெச்.டி.எம்.ஏ (Hair tissue mineral analysis) கூந்தலில் உள்ள தாதுச்சத்துக்களை ஆராய்கிற எளிமையான சோதனை இது. இதன் மூலம் ஒருவரது வளர்சிதை மாற்ற அளவு, ஆற்றல், கார்போஹைட்ரேட் சகிப்புத்தன்மை, எதிர்ப்பு சக்தி, சுரப்பிகளின் செயல்பாடு போன்றவையும் தெரியும்.

உடலின் மற்ற எல்லா திசுக்களையும் போல கூந்தலிலும் தாதுக்கள் இருக்கும். மண்டைக்கு வெளியிலான கூந்தல் உயிரற்றது என்றாலும் அந்த தாதுக்கள் கூந்தலில் அப்படியே இருக்கும். மண்டைப் பகுதியை ஒட்டினபடியான கூந்தலை வெட்டி பரிசோதனை செய்தால் கடந்த 3 முதல் 4 மாதங்களில் உங்கள் கூந்தலின் தாதுக்களின் அளவுகளைத் தெரிந்து கொள்ளலாம். இது சற்றே காஸ்ட்லியான சோதனை என்பதால் எல்லோராலும் செய்ய முடியாதது.

மேலே குறிப்பிட்ட எந்தச் சோதனையையும் நீங்களாகவே செய்து பார்க்க வேண்டாம். கூந்தல் வளர்ச்சி என்பது இப்படிப் பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியது என்பதை விளக்கவே இந்தப் பட்டியல். கூந்தல் உதிர்வுக்கான காரணங்களை சந்தேகிக்கிற உங்கள் மருத்துவர் அதற்கேற்ப இவற்றில் ஏதேனும் சோதனைகளை உங்களுக்குப் பரிந்துரைப்பார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆறுதலாக நாலு வார்த்தை பேசுங்கள்…! (அவ்வப்போது கிளாமர்)
Next post பேஷியல் எண்ணெய்களை சருமத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்!!! (மகளிர் பக்கம்)