மூளை இதயம் இன்பம்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 0 Second

மூளை சக்தி

எப்போதும் உங்களை இளமையாக வைத்துக் கொள்ள உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் வழிமுறைகளை கடைப்பிடிப்பவரா நீங்கள்? அப்படி என்றால் உங்கள் இதயத்தை பலப்படுத்தி, உங்கள் அறிவாற்றலையும் வளர்த்துக்கொள்கிறீர்கள்! ‘ ஷார்ப்பான’ மூளைக்கு மூளைத் தசைகள் நெகிழ்வாக இருக்க வேண்டும். அதற்கான சிறந்த வழிகள் இதோ…

மூளைக்கு வேலை

சிந்தனையைத் தூண்டும் விளையாட்டுகளான செஸ், சுடோகு, பிரிட்ஜ் மற்றும் ஸ்க்ராபிள் போன்றவற்றை ஆடும்போது நினைவாற்றல் தூண்டப்படும். இதை அன்றாட வேலையாக்கிக் கொள்ளுங்கள்!

நடைப்பயிற்சி

தினமும் சிறிது தூரம் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பழக்கமானது, நீண்ட ஆயுளைத் தருவதோடு அறிவுத்திறனையும் மேம்படுத்தும். 20 முதல் 30 நிமிடங்கள் வரை நடக்க வேண்டும்.

சரிவிகித உணவு

‘பி’ வைட்டமின் நிறைந்த பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், தானியங்கள் என சரிவிகித உணவுகளை உண்பதால், மனநோய்க்கு காரணமான மூளையில் உள்ள ஹோமோசிஸ்டைன் (Homocysteine) அளவைக் குறைக்க முடியும்.

ரத்த சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம்

சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கும் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் போதும், ரத்த அழுத்தம் அதிகமாகும் போதும் நினைவாற்றலும் பாதிக்கப்படுகிறது.

பதற்றம் இன்மை

பதற்றமாக இருக்கும் நேரத்தில் ஒரு வேலையை சரிவர செய்ய முடியாது. அதிக பதற்றத்தோடு ஒரு வேலையை செய்தால் மூளையின் செயல்திறனில் எதிர்மறை விளைவையே ஏற்படுத்தும்.

சமூகத் தொடர்பு

தனிமையிலேயே இல்லாமல் சமூகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளும் போது, அது மனநிலையை ஆரோக்கியம் ஆக்கும். தரமான வாழ்க்கை முறையையும் கடைப் பிடிக்க முடியும்.

முறையான பழக்கங்கள்

நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள முறையான பழக்கங்களை கடைப்பிடித்தல் அவசியம். உதாரணமாக வாகனங்களின் சாவி, ஆபீஸ் ஃபைல் போன்றவற்றை எப்போதும் அதற்கான இடத்தில் வைக்கப் பழகும் போது மறதியை விரட்டலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தினமும் 3 வாழைப்பழம் சாப்பிட்டால் மாரடைப்பை தவிர்க்கலாம்!! (மருத்துவம்)
Next post கோவில் திருவிழாவில் முந்தானை முடிச்சு ஊர்வசியை வெளுத்து வாங்கிய பாக்யராஜ் ! (வீடியோ)