ஒயின் குடித்தால் ஹார்ட் அட்டாக் வராதா? (மருத்துவம்)

Read Time:7 Minute, 24 Second

மனிதனால் உருவாக்கப்பட்ட, உலகின் மிகப்பழமையான மருந்து ஒயின்தான். எகிப்திய, சுமேரிய நாகரிகங்கள் உள்பட பண்டைய காலத்தில், மருத்துவ காரணங்களுக்காக ஒயின் ஓர் அற்புத திரவமாகப் போற்றப்பட்டது. தண்ணீருக்கு மாற்றாகப் பயன்படுத்தப்பட்டது. புண்களை ஆற்ற உதவியது. செரிமானத்துக்காக உட்கொள்ளப்பட்டது. சோம்பல், வயிற்றுக்கோளாறு, குழந்தைப் பிறப்பு வலி ஆகியவற்றுக்கு நிவாரணமாக அளிக்கப்பட்டது. இன்று?

‘நான் ஹாட் அடிக்கறதில்லை. ஒன்லி ஒயின்’ என்று பெருமையாகப் பேசுவோர் பலரை இப்போது பார்க்க முடிகிறது. அதற்கு அவர்கள் கூறுகிற காரணம்… ‘ஒயின் குடித்தால் ஹார்ட் அட்டாக் வராது’ என்பதுதான். அப்படியா?!ஒயின் குடிப்பதால் ஏற்படும் உடல்நல மாறுதல்களை, அதிலுள்ள ஆல்கஹால் அளவின் அடிப்படையில்தான் அறிய முடியும். திராட்சைப்பழத்தில் இருந்து உருவாக்கப்படும் இயற்கை பானம்தானே என்று மட்டுமே அதைக் கருதிவிட முடியாது.

தவிர, ஒயினுக்கு பெயர் பெற்ற ஐரோப்பிய நாடுகளில் அவை தயாரிக்கப்படும் முறைக்கும், நம் இந்தியாவில் – குறிப்பாக தங்கத் தமிழ்நாட்டில் உருவாக்கப்படும் முறைக்கும் கடல் அளவு வித்தியாசங்கள் உள்ளன. ஐரோப்பிய ஒயின்களில் சுவை, மனம், நிறம் ஆகியவையே பிரதானம்… அதனால் கிடைக்கக்கூடிய போதைக்கு முக்கியத்துவம் கிடையாது. இங்கோ அப்படியே தலைகீழ். நூறாண்டு காலம் பீப்பாய்களில் பாதுகாத்த இயற்கையான ஒயினையா விற்பனைக்கு அனுப்புகிறார்கள்? நிச்சயமாக அல்ல…

நேற்று முழுக்க ஏதேதோ கெமிக்கல்களை போட்டு காய்ச்சி,பாட்டில்களில் அடைத்து, இரவோடு இரவாக டாஸ்மாக் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் ஒருவித போதை திரவம் அல்லவா அது? அதைத்தான் நம்மவர்கள் விஸ்கி, பிராந்தி, வோட்கா, ரம்முக்கு பதிலாக இதைக் குடித்தால் பாதுகாப்பு என்று நம்பி வாங்கிப் பருகுகிறார்கள். ‘ஒயினில் அவ்வளவு போதை வராது’ என்ற இன்னொரு நம்பிக்கையின் காரணமாக இன்னும் இன்னும் குடித்து ஏமாறுகிறார்கள்.

மிகச்சிறப்பான, பாதுகாப்பான, நியாயமான, சரியான முறையில் தயாரிக்கப்படும் மதுவை (ஒயினை), அனுமதிக்கப்பட்ட அளவுகளில் மட்டும் அருந்துவோருக்கு மட்டுமே மருத்துவ ஆராய்ச்சிகள் கூறுகிற பலன்கள் கிட்டக் கூடும். இதய நோய்கள், ஸ்ட்ரோக், நீரிழிவு தாக்குதல் ஏற்படும் அபாயம் இவர்களுக்குக் குறைவு என்று சொல்கிறார்கள். அளவு முக்கியம் என்பதையும் அடிக்கோடிட்டு சொல்கிறார்கள். ஒரே ஒரு ட்ரிங்க் (பெண்களுக்கு), இரண்டே இரண்டு ட்ரிங்க் (ஆண்களுக்கு) என்பதுதான் அந்தக் கணக்கு. அதைத் தாண்டினால் நிலைமை ரிவர்ஸ் ஆகி, இதய நோய்கள், ஸ்ட்ரோக், உயர் ரத்த அழுத்தம் உள்பட பல பிரச்னைகள் ஏற்படுவது எளிதாகி விடும் என்றும் அவர்களே சொல்கிறார்கள்.

ஒரு ட்ரிங்க் என்பது இதுதான்!

பானம் அளவு (மி.லி.) ஆல்கஹால் (%)
பிராந்தி, ரம், ஜின், வோட்கா, டெக்யுலா, ஃபென்னி 43 40
ஒயின்
(இயற்கை தயாரிப்பு) 142 10-12
ஃபோர்ட்டி
ஸ்ரீபைடு ஒயின்
(செறிவூட்டப்பட்டது) 85 16-18
பியர் 341 5

அளவிலோ, ஆல்கஹால் சதவிகிதத்திலோ, தரத்திலோ… நம்ம ஊர் சரக்குக்கு இது எந்தவிதத்திலும் பொருந்தாது. இங்கு அடிப்படை ஆல்கஹால் அளவே இந்தத் தரப்பட்டியலை விடவும் அதிகம். விஸ்கி, பிராந்தி வகையறாக்களுக்கு 42.8 சதவிகிதம் என்பது அச்சிடப்படும் அளவு, சில சரக்குகளில் அதிகமாகவே இருக்கக்கூடும். அளவு விஷயம் இன்னும் மோசம். 180 மி.லி. என்பதற்குக் குறைவான அளவில் இங்கே மது வாங்க முடியாது. டாஸ்மாக் வாசலில் கூட்டணி அமைத்து கட்டிங் வாங்கினாலும் கூட, 90 மி.லி. வாங்க வேண்டியிருக்கும்.

அதில் யாராவது 43 மி.லி. மட்டுமே குடித்துவிட்டு, மீதியை வீட்டுக்கு எடுத்துப் போய், மற்றொரு நாளுக்காக பத்திரப்படுத்துவார்களா, என்ன?ஆகவே, மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டியிருக்கிறது. குறைவாகக் குடித்தலும் ஒயின் குடித்தலும் உடல்நலத்துக்கு பலம் கொடுக்கும் என்பதெல்லாம் இந்தியாவைப் பொறுத்த வரை – பொய்யான நம்பிக்கையே. இதை எந்த டாஸ்மாக் வாசலிலும் சூடம் கொளுத்தி சத்தியமாகச் சொல்ல முடியும்!

‘மது அருந்தவில்லை… ஒயின்தானே குடிச்சிருக்கேன்… என்னால் நன்றாக வண்டி ஓட்ட முடியும்’ என அதீத நம்பிக்கையோடு வாகனங்களை இயக்கி, கொடூர விபத்துகளில் சிக்கி, மற்ற உயிர்களையும் பறித்த எத்தனையோ பேரை இந்த உலகம் கண்டிருக்கிறது என்பதையும் மனதில் வையுங்கள். முக்கியமான விஷயம்: உலகின் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ அமைப்பும் ‘ஒயின் குடிப்பது உடல்நலத்துக்கு உகந்தது’ எனக் கூறியதே இல்லை!

அதிர்ச்சி டேட்டா

மது அருந்துவோரின் வாழ்நாள் குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் குறைகிறது, அவர்கள் சிரோசிஸ் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழக்காமல் தப்பித்து இருந்தால்! உலகின் பலநாடுகளில் இளம் வயதினர் மரணத்துக்கு மூன்றாவது முக்கிய காரணமாக மதுவே இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 33 லட்சம் பேர் மதுவினால் உயிரிழிக்கின்றனர். உலகின் ஒட்டுமொத்த மரணங்களில் இது 5.9 சதவிகிதம். தமிழ்நாட்டு சராசரி இதை மிஞ்சும் அளவிலேயே இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தலைமுடிக்கு ஆரோக்கியம் தரும் கறிவேப்பிலை, செம்பருத்தி!! (மகளிர் பக்கம்)
Next post கருவளையங்களுக்கான அழகு சாதனங்களும் சிகிச்சைகளும்!! (மகளிர் பக்கம்)