வேலையால் வரும் விபரீதம்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 31 Second

நீங்கள் செய்யும் வேலையைப் பொறுத்து, இதயநோய்க்கான ஆபத்துகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வு கூறுகிறது. நிர்வாகப் பொறுப்புகளில் உள்ளவர்களைக் காட்டிலும், 45 வயதுக்கு மேற்பட்ட, சேல்ஸ் மற்றும் ஆபரேஷன்ஸ் பணிகளில் இருப்பவராக இருந்தால், உங்களுக்கு மாரடைப்பு அல்லது இதயநோய்கள் ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் என்று ஆய்வினர் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் தொழில்சார் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய தேசிய அமைப்பைச் சார்ந்த முதன்மை ஆய்வாளரான கேப்டன் லெஸ்லி மெக்டொனால்டு இந்த ஆய்வைப் பற்றி கூறுகிறார்…“மேனேஜ்மென்ட் வேலையில் உள்ளவர்களில், எந்தவிதமான இதயநோய் அறிகுறிகளும் இல்லாத 5 ஆயிரத்து 566 ஆண், பெண்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். அவர்களிடத்தில் அமெரிக்க ஹார்ட் அசோசியேஷனால் வடிவமைக்கப்பட்ட இதயநோய்கள் மற்றும் மாரடைப்பிலிருந்து காக்கும் ‘லைஃப் சிம்பிள் 7’ என்ற ஆக்‌ஷன் பிளானை மேற்கொண்டோம்.

எந்தவித சிகிச்சைகளோ, மருந்துகளோ இன்றி, அவர்களின் ரத்த அழுத்த அளவு 120/80, கொலஸ்ட்ரால் 200mg/dLக்குக் கீழாகவும், ரத்த சர்க்கரை அளவு ஃபாஸ்ட்டிங்கில் 100mg/dL ஆகவும், ஃபாஸ்ட்டிங் இல்லாமல் 140mg/dL என்ற அளவீடாகவும் இருந்தது. இந்தக் குழுவில் 22 சதவிகிதம் பேர் அதிக எடை தூக்குபவர்கள் மற்றும் அளவுக்கு அதிக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குழுவில் 88 சதவிகிதத்தினர் 45 வயதுக்கு மேல் புகைப்பழக்கம் உடையவர்களாக இருந்தபோதிலும், மற்றவர்களைவிட நல்ல இதய ஆரோக்கியம் உள்ளவர்களாக இருந்தார்கள். செய்யும் வேலையைப் பொறுத்து, எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய மாரடைப்பு, இதய நோய்கள், சிறுநீரகக் கோளாறுகள் மற்றும் முன்கூட்டிய மரணம் போன்றவற்றை கணிக்க முடியும். டென்ஷனான சேல்ஸ் வேலை, நீண்ட நேரப்பணி, உடலியக்கம் இல்லாத வேலை போன்றவை உடலின் வளர்சிதை மாற்றத்தில் மாற்றம் செய்கின்றன.

கவலைப்பட வேண்டாம்… இதற்காக நீங்கள் அதிக மெனக்கெட வேண்டியதில்லை… உணவு இடைவேளைகளில் சிறிய நடைப்பயிற்சி மேற்கொள்ளுதல், லிஃப்ட் உபயோகிக்காமல் படிக்கட்டுகளில் ஏறுவது மற்றும் வாகனங்களை தொலைவில் நிறுத்திவிட்டு நடந்து செல்வது போன்ற சின்னச் சின்ன விஷயங்களை கடைப்பிடித்தாலே உங்கள் டென்ஷனை குறைத்து ஆயுளை நீட்டிக்கலாம்’’ என்கிறார் மெக்டொனால்ட்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆபரேஷன் அறிவாலயம் பாஜகவின் மும்முனைத் திட்டம்! (வீடியோ)
Next post உட்கார்ந்தே இருந்தால் உருப்பட முடியாது!! (மருத்துவம்)