By 7 January 2021 0 Comments

அமெரிக்கப் படுகொலை-டிரம்பின் வீரர்கள் எப்படி நாடாளுமன்றத்தில் கலவரத்தில் ஈடுபட்டனர்? (கட்டுரை)

தாங்கள் தங்கள் எனக் கருதிய காங்கிரஸ் உறுப்பினர்களைத் தேடி நாடாளுமன்றத்திற்குள் மூர்க்கத்துடன் அலைந்து கொண்டிருந்தவேளை நாடாளுமன்றப் பணியாளர்கள் கதவுகளை மூடி அவர்களை தடுத்ததுடன் மேசைகளின் கீழ் பதுங்கிக்கொண்டனர்.

சனப்பிரதிநிதிகள் சபையின் சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்த ஒருவர் சபாநாயகரின் மேசையிலிருந்து கீழே விழுந்து கிடந்த ஆவணங்களை தனது சப்பாத்துக்காலால் மிதித்தார்.

காங்கிரஸின் சுவர்களில் பல வருடங்களாக பொறிக்கப்பட்டிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்கள் கீழே பிடுங்கி எறியப்பட்டன.

டிரம்பின் பதாகைகளும் கூட்டமைப்பின் கொடிகளையும் நாடாளுமன்றத்தின் கைவிடப்பட்ட மண்டபங்கள் வழியாக டிரம்பின் ஆதரவாளர்கள் எடுத்துச்சென்றனர்.

புதன்கிழமை ஆறாம் திகதி மதிய வேளையில்-டொனால்ட் டிரம்பின் அமெரிக்க ஜனநாயகத்தின் மீதான நான்கு வருட தாக்குதல் அதன் தவிர்க்க முடியாத இலக்கை எட்டியது.குடியரசின் இதயத்தை இலக்காகக் கொண்ட வன்முறையின் களியாட்டமே அந்த இலக்கு.

சில அலுவலகங்களில் பணியாளர்கள் கதவை பாதுகாப்பிற்காக மூடிக்கொண்டு மேசைகளின் கீழ் பதுங்கிக் கொண்டனர்.
நாடாளுமன்ற பொலிஸார் எங்கே ஒரு பணியாளர் தனது நண்பருக்கு குறுஞ்செய்தியொன்றை அனுப்பினார்.பொலிஸாரால் டிரம்பின் ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அமைதியான பிளக்லைவ் மட்டர் ஆர்ப்பாட்டங்களை மூர்க்கமாக ஒடுக்கிய தேசிய காவல்படையினரையும் பெடரல் ஏஜன்ட்களையும் மாலை வரை அங்கு காண முடியவில்லை.

வெளியே உள்ள தாழ்வாரங்களில் டிரம்பின் ஆதரவாளர்களால் சுதந்திரமாக நடமாட முடிந்தது,தாங்கள் தங்கள் எதிரிகள் எனக் கருதிய காங்கிரஸ் உறுப்பினர்களை அவர்கள் மூர்க்கத்துடன் தேடினார்கள்.

சில நிமிடங்களிற்கு முன்னர் தேர்தல் முடிவுகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுக்கொண்டிருந்த செனட் அறைக்குள் அவர்கள் நுழைந்தனர். உரையாற்றுவதற்கு பயன்படுத்தப்படும் பகுதிக்கு சென்ற கலகக்காரர்களில் ஒருவர் டிரம்ப் தேர்தலில் வெற்றிபெற்றார் என கூச்சலிட்டார்.

ஒளிரும் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் டிரம்பின் ஆதரவாளர்கள் பெருமளவில் நுழையத் தொடங்க பொலிஸார் அவர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகத்தினை மேற்கொண்டனர்.இதன்போது சுடப்பட்ட பெண்ணொருவர் பின்னர் காயம் காரணமாக உயிரிழந்தார் என வொஷிங்டன் பொலிஸார் தெரிவித்தனர்.வெடிபொருள் ஒன்றும் மீட்கப்பட்டது.
கட்டிடத்திற்கு வெளியே காணப்பட்ட தொலைக்காட்சி பணியாளர்களை கலகக்காரர்கள் தாக்கினர். பொலிஸார் பலரும் காயமடைந்தனர்.
நான்கு வருடங்களுக்கு முன்னர் பதவியேற்றவேளை டிரம்ப் அமெரிக்க படுகொலை குறித்த அச்சத்தை ஏற்படுத்தினார்.

முன்னர் நடந்த ஒன்று என அவர் சித்திரித்திருந்தாலும் அது இனிமேல்தான் நடக்கப்போகின்றது என்பது விரைவில் தெளிவாகியது.

பல மாதங்களாக டிரம்ப் தெரிவித்து வந்தது போன்று அவரை உலகின் மிகவும் வலுவான அதிகாரம் மிக்க பதவிக்கு கொண்டுபோய் சேர்த்த அரசியல் முறையை – அது அவரை நிராகரித்தால் படுகொலை செய்வதற்கு டிரம்ப் தயாராகயிருந்தார்.Post a Comment

Protected by WP Anti Spam