By 11 January 2021 0 Comments

இதய நோய் மருந்துகள்!! (மருத்துவம்)

உடலின் ஒவ்வொரு உறுப்புகளும் இன்றியமையாதவை என்றாலும் ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் பாய்வதும், அதனால் அந்தந்த உறுப்புக்குத் தேவையான சத்துகளையும் ஆக்ஸிஜனையும் வெப்பத்தையும் செலுத்தும் இதயம் மிக முக்கியமான உறுப்பு என்பது நாம் அனைவரும் அறிந்ததே…

இதய நோய்களை அதன் வடிவ அமைப்பிலோ (Anatomy Septal defects vascular defects), உட்கூறிலோ (Internal Anatomy Infection specified) பிறவியிலோ (Congenital) அதன்பின் ஏற்படும் நடைமுறை (Acquired) மாற்றங்களை – நோய்களை முதல் வகையாக (Anatomical malformation) பிரிக்கலாம்.

இதயத்துக்கு ரத்தம் செல்லும் 3 முக்கியமான ரத்தக்குழாய்களில் ஏற்படும் மாற்றங்களால் வரும் நோய்களே இரண்டாவது வகை. இந்த நோய்களால் இதயம் ஒரு வலுவான தசைகளாலான மோட்டார் பம்பாக செயல்பட முடியாமல் போகும். இதயத் துடிப்பு (Heart beat), அதன் வேலையை (Heart rate Function) செய்ய முடியாமல் போவதை உள்ளடக்கியதே மூன்றாவது வகை.

முதல் வகை நோய்கள்…

இதயத்தின் 4 அறைகளுக்கு இடையில் அதன் தடுப்புச் சுவர்களில் இரு மேல் அறைகளுக்கு நடுவில் ஏற்படும் துவாரம் பிறப்பின் போது அடையாத (ASD Atrial Septal Defect) நோய், இரு கீழ் அறைகளுக்கு நடுவே ஏற்படும் துவாரம் பிறப்பின்போது அடைக்காத நோய் (VSD Ventricular Septal Defect) இதனால் இடதுபுறம் செல்லும் நல்ல ரத்தம் வலதுபுறம் செல்லும் கெட்ட ரத்தத்துடன் கலக்க நேரிடும்.

இதயத்தின் 4 வால்வுகளுக்கு (விவீtக்ஷீணீறீ ஸ்ணீறீஸ்மீ, Aortic valve, Tricuspid Valve, The pulmonary valve) ஏற்படும் அதிக சுருக்கம், அதனால் ரத்தம் இதயத்தி லிருந்து வெளியேற முடியாமல் இதயத்தின் சுவர்கள் வீங்குவதும் பின் செயல் இழப்பதும் (Cardiomyopathy), அதனால் உறுப்புகளுக்கு தேவையான ரத்தம் கிடைக்காமல் போவதும். இதயத்தின் சுவர்கள் வீங்குவது என்பதும் இதயத்தின் தசைகள் விரிந்து சுருங்கும் தன்மையை இழந்து, அது செயல் இழப்பதே (Heart Failure).

இது பொதுவாக பிறப்பிலேயே இருப்பதால் பிறக்கும் குழந்தைகள் நீல நிறமாக மாறி விடுவார்கள். நல்ல ரத்தம் உடலுக்குக் கிடைக்காததால் இந்த மாற்றம் ஏற்படுகிறது. அவ்வாறு நீலமாக மாறாமல், சற்று தாமதமாக நோயை வெளிக்காட்டும் குழந்தைகளும் உண்டு. இது போன்ற குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல், நெஞ்சு வலி, பால் அருந்தாமை, வியர்வை, மயக்கம், எடை குறைவு என தாய்மார்கள் உணர்ந்து மருத்துவரிடம் வர வாய்ப்பு இருக்கிறது.

ரத்தக்கொதிப்புக்கு ஒழுங்காக மருந்து எடுக்காமல் போகும்போது இடது கீழ் அறை வீங்கி அதனால் இதயம் செயல் இழக்கக்கூடும். இந்நோய்களுக்கு அறுவை சிகிச்சை முறைகளே தீர்வு – இதய மாற்று அறுவை சிகிச்சை உள்பட.

இரண்டாவது வகை…

இதயத்துக்கென ரத்தம் செல்லும் 3 முக்கியமான ரத்தக்குழாய்கள் இருக்கின்றன. இதயத்தின் வலிமை மிகுந்த தசைகளை மையோகார்டியம் என்கிறோம்.

இதற்கு ரத்தம் அயோர்டா (Aorta) எனப்படும் முக்கிய ரத்தக்குழாயிலிருந்து வலதுபுறமாக வலது இதய ரத்தக்குழாய் (RCA Right Coronary Artery), இடதுபுறமாக இடது இதய ரத்தக்குழாய் (LCA Left Coronary Artery) என இரண்டாகப் பிரிந்து இதயத்தின் எல்லா தசைகளுக்கும் ரத்தம் செல்கிறது. எங்கேனும் அடைப்பு ஏற்பட்டால் அந்தப் பகுதிக்கு ரத்தம் செல்லாமல் அந்தத் தசை இறந்து போவதையே மாரடைப்பு என்கிறோம்.

கோபம், எரிச்சல், கத்துதல், வருத்தம் போன்ற உணர்ச்சிகளின் போதும் உடலின் எல்லா ரத்தக்குழாய்களும் சுருங்கும். இதயத்தில் ரத்தக்குழாய்கள் சுருங்கும்போது அந்த இடத்தில் கொழுப்பு படர்ந்து இருந்தால், மெதுவாக ரத்தம் அந்த இடத்தை கடக்கும்போது கட்டியாக உறைய லாம். அல்லது உடலின் வேறு பகுதிகளில் இருந்து வரும் ரத்தக்கட்டி (Blood Clot), அந்த இடத்தைத் தாண்ட முடியாமல் அடைப்பு ஏற்படும்.

இப்படி அடைப்பு ஏற்படும் போது மாரடைப்பின் அறிகுறிகளாக நடு நெஞ்சுவலி, வலது, இடது நெஞ்சுவலி, நெஞ்சை அழுத்துவது போன்ற மாரடைப்பு வலி, நடந்தால், மாடிப்படி ஏறினால் வரும் வலி, கழுத்து வலி, பல் வலி, இடது தோள்பட்டை வலி, இது தோள்பட்டையிலிருந்து இடது கை முழுவதும் வரும் வலி, மேல்வயிறு வலி, மூச்சடைப்பு, திடீரென்று நெஞ்சுவலியுடன் வரும் வியர்வை, மயக்கம் போன்ற எல்லா அறிகுறியுடனோ, ஏதாவது ஒரு அறிகுறியுடனோ இருந்தால் மருத்துவரை உடனடியாக அணுகுவது மிக முக்கியம்.

இ.சி.ஜி. (ECG Electro Cardiogram) பரிசோதனை மூலம் கண்டுகொள்ளப்படும் இந்நோயை, இதய தசைகள் இறந்து போவதைத் தெரிவிக்கும் என்சைம் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யலாம். ஆஞ்சியோகிராம் மூலம் இதயத்தின் எந்தக் குழாய், எவ்வளவு உள்ளளவு, எவ்வளவு நீளம் அடைக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து, அந்த ரத்தக்குழாயை விரிக்கும் ஸ்டென்ட் (Stent) மூலம் முழுமையான நிவாரணம் அளிக்கலாம்.

ஆஸ்பிரின் (Aspirin), குளோபிடக்ரெல் (Clopidogrel) போன்ற வாய்வழி மருந்துகள் மூலம் ரத்தக்குழாயின் அடைப்பை சரி செய்யவும், ரத்தக்கட்டியைக் கரைக்கவும் முடியும். நரம்பு வழியாக ஸ்டெரப்டோகைனஸ் (Streptokinase), அல்டேப்ளேஸ் (Alteplase), லோ மாலிக்குள் ஹெப்பாலின் (Low Molecule Hepalin) போன்ற மருந்துகளை செலுத்தும்போது ரத்தக்கட்டிகளை கரைக்கலாம். இதன் பின், கொழுப்பு படிந்து சுருங்கிய ரத்தக்குழாய்களை ஸ்டென்ட் மூலமாகவோ, நல்ல ரத்தக்குழாய்களை வேறு இடத்திலிருந்து எடுத்து அடைப்புகளுக்கு முன்னும் பின்னும் தைத்து பைபாஸ் செய்வதன் மூலமாகவோ நிரந்தர தீர்வு அளிக்க முடியும்.

அவசர சிகிச்சைகளின் போது நைட்ரோ கிளிசரின் மருந்துகள் மூலம் தற்காலிகமாக அடைப்பை விரிப்பதற்கு உதவுவார்கள். ரத்தக்குழாய்கள் அதிகமாக விரிவடையும் போது ரத்தக்கொதிப்பு குறையும் வாய்ப்பு இருக்கிறது.
Antiplatlet Drugs, Aspirin Clopidogrel போன்றவை உறைந்த ரத்தக்கட்டிகளை கரைக்க பயன்படுகின்றன. தினம் இம்மருந்துகளை உட்கொண்டு, ரத்தக்கட்டிகள் உருவாகாமல் செய்து, மாரடைப்பு, பக்கவாத நோய்கள் வராமல் தடுக்கலாம். இதயநோய் உள்ளவர்களுக்கும், ரத்தக்கொதிப்பு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், 40 முதல் 50 வயது உள்ளவர்களுக்கும் இது வாழ்நாள் முழுக்கத் தரப்படுகிறது.

ஆஸ்பிரின் மிக பரவலாக பயன்படுத்தப்படும் மருந்தானாலும், சிலருக்கு இரைப்பை புண் (ஹிறீநீமீக்ஷீ) ஏற்படுத்தும். இரைப்பையில் ரத்தக்கசிவு கூட வரலாம். நோயாளிகளின் பக்கவிளைவு களைப் பொறுத்து மாற்று மருந்தாக Clopidogrel மட்டுமோ அல்லது இரைப்பை புண்ணாகாமல் இருக்கும் மருந்துடனோ தருவார்கள்.
மூன்றாவது வகை இதயம் துடிப்பது சம்பந்தமானவை. இதயத் துடிப்பு என்பது இதயம் விரிவது, சுருங்குவது… இதயம் விரியும்போது இடது மேல் அறையில் (Left atrium) நுரையீரலிருந்து ஆக்ஸிஜனுடன் வரும் நல்ல ரத்தம் இடது கீழ் அறைக்குச் (Left Ventricle) சென்று விடும்.

அதே வேளையில் வலது மேல் இதயம் விரியும் போது ரத்தம் இதயத்துக்கு மேலிருந்தும் இதயத்துக்குக் கீழிருந்தும் (சிறுநீரகம், ஈரல் வழியாக சுத்தமடைந்து), வலது மேல் அறைக்குள் (Right Atrium) வந்த பிறகு, வலது கீழ் அறைக்குச் சென்று (First ventricle) அங்கிருந்து நுரையீரலுக்கு சுத்திகரிப்புக்காக சென்று விடும். இப்படி, ஒரு இதய துடிப்பில் சுருங்கும் போதே, ரத்தம் வலது கீழ் அறைக்கு சென்று, அங்கிருந்து நுரையீரலுக்கும் சுத்திகரிப்புக்காக சென்று விடும்…

வலது கீழ் இதயத்திலிருந்து நுரையீரலுக்கும், இடது இதயத்திலிருந்து உடலின் பெரிய நல்ல ரத்தக்குழாயான அயோர்டா (Aorta) உள்ளும் செலுத்தப்படுகிறது. இந்த இதயத் துடிப்பை (Heart Rate) ரத்தக் குழாய்களில் உணருவதையே நாடித்துடிப்பு (Pulse Rate) என்கிறோம். இதயம் நன்கு துடிப்பதையும், அதை பல்வேறு இடங்களில் பரிசோதிப்பதன் மூலம், எல்லா இடங்களுக்கும் ரத்தம் சீராகப் பரவுவதையும், ரத்தக் குழாய்களில் அடைப்பு இல்லை என்பதையும் நாடித்துடிப்பின் மூலம் அறியும் மருத்துவர்கள் ரத்தக்கொதிப்பை (BP) ஓரளவு சொல்லமுடியும். கருவுற்று இருப்பதை எல்லாம் சொல்ல முடியாது!

நோயாளியும் 75% தனது துடிப்பு மாற்றங்களை உணர முடியும். இதயத்தின் மேல் அறைகள் தனியாக வேகமாகத் துடிப்பதை (Atrial Fibrillation), இதயத்தின் கீழ் அறைகள் தனியாக வேகமாகத் துடிப்பதை (Ventricular Fibrillation) என்கிறோம். அதிவேகமாகத் துடித்தால், Defibrillator மூலமாக ஷாக் கொடுத்து உயிரைக் காப்பாற்ற முடியும். சில மருந்துகள் (Beta Blockers) மூலமும் இதயத்தின் துடிப்பைக் குறைக்க முடியும். திடீரென ஏற்படும் இறப்புகளைத் தவிர்க்க இதயத்துடிப்பு திடீரென அதிகப்படும்போது, குறைப்பதற்கு தோலின் கீழே இதயத்தின் அருகிலேயே Defibrillator பொருத்தப்படுகிறது.

இதயம் மிக மெதுவாக (<60/minut) துடிக்கும் போது பேஸ்மேக்கர் மூலமாக இதயத் துடிப்பை கூட்டும் கருவிகளும், தோலின் கீழ் இதயத்தின் அருகிலேயே பொருத்தப்படுகின்றன. இதயத் துடிப்பு மேல் அறையிலிருந்து கீழ் அறைக்குக் கடக்கும் போது ஏற்படும் தடையை 'ஹார்ட் பிளாக்' என்கிறோம். இதயம் நன்றாக துடிப்பதற்கு, இதயம் வேலை செய்ய மறுப்பவர்களுக்கு (Heart Failure), மிகக்குறைந்த அளவில் Digoxin தர ஆரம்பித்து, வாரத்தில் 5 நாட்கள் மட்டும் என்று தேவையைப் பொறுத்து கூட்டிக் கொண்டு செல்லுவார்கள். ரத்த அளவைக் குறைப்பதற்கு நீரை வெளியேற்றும் Diuretics Frusemide Torsemide மருந்துகள் தரப்படுகின்றன. இதயம் வேகமாகத் துடிப்பதைக் குறைப்பதற்கு Metoprolol, Atenolol, Propranolol மருந்துகள் குறைந்த அளவில் தரப்படுகின்றன. இதுவரை நாம் பார்த்தவை 40 வயதுக்கு மேல் வரும் பல்வேறு நோய்களுக்கு பரவலாக தரப்படும் மருந்துகள் மற்றும் அவற்றின் பக்கவிளைவுகளே.Post a Comment

Protected by WP Anti Spam