By 13 January 2021 0 Comments

தாயகம் – தமிழகம் – புலம் ஒன்றுபட்ட ஒலித்த நீதிக்கான கண்டனக்குரல்கள்!! (கட்டுரை)

யாழ் பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அழிப்புக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், தமிழர் தாயகம் – தமிழகம் – புலம் என மூன்று தளங்களில் இருந்து ஒன்றிணைந்து நீதிக்காக குரல் எழுப்பும் நிகழ்வொன்று நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

தமிழர் தாயகத்தில் இடம்பெற்றிருந்த கதவடைப்பு போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில், இணையவழி இடம்பெற்றிருந்த இக்கவனயீர்ப்பு கண்டன நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

தமிழர் தாயகத்தில் இருந்து யாழ் பல்கலைக்கழக ஒன்றிய பிரதிநிதிகள், கலைப்பீட ஒன்றிய பிரதிநிதிகள், தமிழரசுக்கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி சிவசக்தி ஆனந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், வட மாகாண முன்னாள் உறுப்பினர் சிவாஜலிங்கம் ஆகியோர் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் இயக்கம் தோழர் தியாகு, விடுதலைச் சிறுத்தைகள் இளையோர்பாசறை சங்கத்தமிழன், மதிமுக ஓமான் மைக்கல் ஆகியோர் தமிழ்நாட்டில் இருந்து கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

வரலாற்று மையம் றூபன், பிரித்தானிய தமிழர் பேரவை செந்தில், உலகத் தமிழர் ஒன்றியம் இரவிக்குமார், அனைத்துலக ஈழத்தமிழரவை திருச்சோதி, கவிஞர் பாலகணேசன், விடுதலை செயற்பாட்டு மூத்தஉறுப்பினர் பாலா மாஸ்ரர் ஆகியோர் புலம்பெயர் தேசங்களில் இருந்து தமது கண்டனங்களை பதிவு செய்திருந்தனர்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் நிகழ்வின் நிறைவுக் கருத்துரையினை வழங்கியிருந்தார்.

நீதிக்காக உணவுத்தவிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட இளையவர்களின் அர்ப்பணிப்பு என்பது எதிர்கால சந்ததிக்கு வழிகாட்டுவதாக அமைந்திருந்ததோடு, கல்விச் செயற்பாடுகளுக்கு அப்பால் தொடர்ந்து இனவிடுதலைக்காக தொடர்ந்தும் போராட வேண்டுமென தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.

உலகின் எந்தபாகத்திலும் இவ்வாறான அழிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தாலும் அது ஓர் அநாகரிகமான செயல் என தனது கண்டனத்தினை பதிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், முஸ்லீம் தரப்பினரது கண்டனக்குரல்கள், பல்கலைக் கழகங்களின் குரல் என ஜனநாயசக்திகளின் குரல்கள் ஓங்கி ஒலித்திருந்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இரவோடு இரவாக நினைவுத்தூபியினை இடித்தவர்கள், பின்னர் இரவோடு இரவாக மாணவர்களிடம் சென்று நினைவுத்தூபிக்கு அடிக்கல் நாட்டுவோம் என என்ற உபவேந்தரினின் செயலுக்கு பின்னால் கதவடைப்பு போராட்டத்தினை பலவீனப்படுத்த வேண்டும் என்ற நோக்கமே இச்செயலுக்கு பின்னால் இருந்தவர்களுக்கு உள்ளதென்ற சந்தேகத்தினை தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி சுரேஸ் பிரேமச்சந்திரன் எழுப்பியிருந்தார்.

தனித்தனி சம்பவங்களுக்கு என அணிதிரளாமல் தாயகம், தமிழகம், புலம் என மூன்று தரப்பு ஒன்றுபட்டு ஓர் பலமான பொதுக்கட்மைப்பினை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதென தமிழ் மக்கள் விடுதலைக் கூட்டணி சிவசக்தி ஆனந்தன் இடித்துரைந்திருதார்.

தமிழர் தாயகத்தில் காணப்படுகின்ற இராணுவ அடையாளச் சின்னங்கள் என்பது ஆக்கிரமிப்பின் அடையாளங்களாக இருக்கின்றதென தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இவைகள் எந்த பிரதேச சபைகளிடம் அனுமதி பெற்று வைக்கப்பட்டன என கேள்வி எழுப்பினார்.

தாயகம், தமிழகம், புலம்பெயர் தேசங்களில் எழுந்துள்ள போராட்டங்கள் இத்துடன் முடியாமல் தொடர்சியாக முன்னெடுக்கப்பட்டு சிறிலங்காவுக்கு எதிரான குரல்கள் வலிமை பெற வேண்டுமென தெரிவித்த வட மாகாண முன்னாள் உறுப்பினர் சிவாஜிலிங்கம், மீளவும் நினைவுத்தூபி கட்டப்படும் என்பதில் தமக்கு சந்தேகம் உள்ளதென குறிப்பிட்டிருந்தார்.அரச பயங்கரவாதத்தினை ஞாபகப்படுத்துகின்றது என்ற அச்சத்தினாலேயே நினைவுத்தூபி சிறிலங்கா அரசாங்கத்தினால் அழிக்கப்பட்டது என தமிழர் தேசிய இயக்கம் தோழர் தியாகு தெரிவித்திருந்தார்.

2018ம் ஆண்டில் யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவப்பட்ட இந்த நினைவுப்தூப்பியினை இதுவரை அழிக்காத சிறிலங்கா அரசாங்கம் தற்போது அழிக்கின்றது என்றால் அதற்கு பின்னால் உள்ள அரசியல் காரணம் இந்தியாவுக்கான பதிலடியாகவே அதனை கருத வேண்டியுள்ளது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்திருந்தார்
.

குறிப்பாக சிறிலங்காவுக்கு பயணம் செய்திருந்த இந்திய வெளியுறவுச் செயலர் ஜெய்சங்கர், தமிழர்களது பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்ற அவரது அழுத்தத்துக்கு எதிராகவே அவர் வந்து சென்றிருந்த இரண்டு நாளில் தமிழினவழிப்பு நினைவுப்தூப்பினை அழித்து இந்தியாவுக்கு பதிலடியினை சிறிலங்கத வழங்கியதாகவே சூழ்நிலை சம்பவங்கள் எடுத்துக்காட்டுகின்றன எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

நீண்டகாலத்துக்கு பின்னராக மூன்று தளங்களில் ஓன்றாக இணைந்து நீதிக்காக குரல் எழுப்பியருப்பது புதிய நம்பிக்கைiளை இணையவழியிலான இந்த கவனயீர்ப்பு கண்டன கூட்டம் தந்திருப்பதாக பலரும் தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.Post a Comment

Protected by WP Anti Spam