கூந்தல்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 40 Second

ஷாம்பு குளியலுக்குப் பிறகு கண்டிஷனர் உபயோகிப்பதன் மூலம் கூந்தலை மென்மையாக்கவும் சிக்கின்றிக் கையாளவும் முடியும். கண்டிஷனர் என்பது கூந்தலின் மேல் ஒரு கோட் போல மூடிக் கொண்டு, கூந்தலை பட்டு போல மென்மையாக மாற்றுகிறது. இதனால் தலையை வாரும் போது சீப்பானது தடையின்றி, முடிக்கற்றைகளுக்கு இடையில் புகுந்து வருவதுடன், கூந்தல் மிகவும் ஆரோக்கியமாக இருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தையும் பெறுகிறது.

கண்டிஷனர் என்பது கூந்தல் பிரச்னைகளுக்கான தற்காலிகத் தீர்வுதான். அது ஏற்கனவே பாதிக்கப்பட்ட கூந்தலை ரிப்பேர் செய்வதோ, கூந்தல் வளர்ச்சிக்கு உதவுவதோ இல்லை. கூந்தலின் தன்மையையும் அதன் ஆரோக்கியத்தையும் தீர்மானிப்பதில் ஒருவரது பாரம்பரியம், உணவுக்கே முக்கிய பங்குண்டு. அதே நேரத்தில் கண்டிஷனர் என்பது கூந்தலுக்கான சிகிச்சைகளின் போது பாதிப்புகளை குறைத்து, கையாள சுலபமாக மாற்றுவதற்கும், கூந்தலுக்கு பளபளப்பான, ஆரோக்கியமான ஒரு தோற்றத்தைக் கொடுப்பதற்கும் பயன்படுவதில் சந்தேகமில்லை.

இன்ஸ்டன்ட் கண்டிஷனர்களில் ஈரப்பதத்தைத் தக்க வைக்கிற humectant சேர்க்கப்படுவதால், வறண்ட, உடைந்த கூந்தலுக்கு மென்மையான தோற்றத்தைக் கொடுக்கிறது. இந்த humectant என்பவை கூந்தலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி, தக்கவைக்கக்கூடிய ரசாயனம். கூந்தலின் ஈரப்பதத்தை உறிஞ்சி அப்படித் தக்க வைப்பதில் Sorbitol, ethylene glycol,butylene glycol மற்றும் propylene glycol போன்றவை பயன் படுத்தப்படுகின்றன. இன்ஸ்டன்ட் கண்டிஷனர்களில் உபயோகப்படுத்தப்படுகிற Acetyl alcohol மற்றும் stearyl alcohol இரண்டும் கூந்தலுக்கு ஒருவித பளபளப்பைத் தரக்கூடியவை.

லனோலினினில் இருந்து பெறக்கூடிய ரசாயனங்களான acetylated lanolin,lanolin acids மற்றும் lanolin oil போன்றவை அவற்றின் எடைக்குறைவான தன்மைக்காக கண்டிஷனர்களில் பயன்படுத்தப்படுகின்றன.simethicone மற்றும் dimethicone போன்ற சிலிக்கான் எண்ணெய்களும் கண்டிஷனர்களில் சேர்க்கப்படுவதுண்டு. இவையும் கூந்தலுக்கு வழுவழு தோற்றத்தையும் ஈரப்பதத்தையும் தரக்கூடியவை. ஆனால், அடுத்த ஷாம்பு குளியல் வரைகூட நீடிக்காதவை.

பெரும்பாலான கண்டிஷனர்கள் 3.5 முதல் 6.0 என்பதற்குள்ளான பி.ஹெச் பேலன்ஸ் கொண்டவையாக இருக்கும். எனவே, காரத்தன்மை கொண்ட ஒரு கெமிக்கல் சிகிச்சைக்குப் பிறகும் இவற்றால் தன் பி.ஹெச் பேலன்ஸை தக்க வைக்க முடியும். சில வகையான கண்டிஷனர்கள் குறுகிய காலத்துக்கு மட்டும் பலனளிக்கும் வகையில் பி.ஹெச் பேலன்ஸை தக்க வைக்கும் வகையில் தயாரிக்கப்படுபவை. கண்டிஷனர்கள் அவற்றின் ரசாயனக் கலப்புக்கேற்ப பார்த்து உபயோகிக்கப்பட வேண்டியவை.

மாயிச்சரைசர்கள் (Moisturizers)

இவற்றின் பிரதான வேலையே கூந்தலின் ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்வதுதான். இவற்றில் ஏற்கனவே குறிப்பிட்டபடி humectants அதிகளவில் சேர்க்கப்பட்டிருக்கும். பாதாம் எண்ணெய் போன்ற இயற்கையான பொருட்களின் மூலமும் இந்தத் தன்மையைப் பெறலாம். மாயிச்சரைசர்கள் இன்ஸ்டன்ட் கண்டிஷனர்களைவிட அடர்த்தியாகவும், கிரீம் போன்ற தன்மையுடனும் இருப்பவை. அவற்றை உபயோகிக்கும் நேரமும் அதிகம். அதாவது, 20 நிமிடங்கள் வரை. இவற்றிலும் இன்ஸ்டன்ட் கண்டிஷனர்களில் கலக்கப்படுகிற அதே கலவைதான் இருக்கும். ஆனால், அவற்றின் ஊடுருவும் தன்மையும் நீண்ட நாட்கள் தாக்குப் பிடிக்கிற தன்மையும் அதிகமிருக்கும்.மாயிச்சரைசர்களில் சேர்க்கப்படுகிற Quaternary ammonium compounds (quats)தான் அவற்றின் சிறப்புத் தன்மைகளுக்கான காரணம்.

ரீகன்ஸ்ட்ரக்டர்ஸ் (Reconstructors)

இவற்றை புரோட்டீன் கண்டிஷனர் என்றும் சொல்லலாம். இவற்றில் சேர்க்கப்படுகிற பாலிமர் புரத இணைப்புகள், கூந்தலின் உள்ளே ஊடுருவி, அதை பலப்படுத்தக் கூடியவை. கூந்தலை செட் செய்யப் பயன்படுத்தப்படும் செட்டிங் லோஷன்களில் புரோட்டீன் கலப்பு இருக்கும். கூந்தலை செட் செய்கிற போது மிகக் குறைந்த அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்வதன் மூலம் கூந்தலை அதிக மிருதுவாகவும் கையாள எளிதானதாகவும் மாற்ற முடியும். இந்த வகையான கண்டிஷனர்கள் கூந்தலின் அடர்த்தியை சற்றே அதிகமாகக் காட்டக் கூடியவை. கூந்தலின் தன்மை, அதன் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொறுத்து இது பலவிதமான strengthகளில் கிடைக்கிறது.

கான்சென்ட்ரேட்டட் புரோட்டீன் கண்டிஷனர் Concentrated protein conditioner என ஒன்றும் கிடைக்கிறது. இது பழுப்பு நிற திரவமாக இருக்கும். இது தற்காலிகமாக கூந்தல் நுனி வெடிப்புகளை சரி செய்யக்கூடியது. இவ்வகை கண்டிஷனர், கூந்தல் இழந்த கரோட்டினை திரும்பப் பெறச் செய்து, கூந்தலின் மீள் தன்மையை மேம்படுத்தும். ஆனால், அது கூந்தலில் அதிகப்படியாகத் தங்கும்படி விடக்கூடாது.

டீடேங்ளர்ஸ்Detanglers என்பதும் ஒருவகையான கண்டிஷனர்தான். இது கூந்தலின் மேல்பரப்பை பாலிமரால் மூடக்கூடியது.

தெர்மல் புரொடெக்டர்ஸ்Thermal Protectors என்பவை வெப்பத்தை கிரகித்துக் கொள்ளக்கூடிய பாலிமர்களை கொண்டது. எனவே வெப்பத்தை அதிகரிக்கக்கூடிய கூந்தல் சிகிச்சைகளான ப்ளோ ட்ரை, அயர்ன், ஹாட் ரோலர் போன்றவற்றின் போது ஏற்படும் பாதிப்பில் இருந்து காக்கக்கூடியது.

கிளாஸர்ஸ் Glossers என ஒரு வகையும் உண்டு. இவை கூந்தலுக்கு ஒருவித பளபளப்பை ஏற்படுத்தக்கூடிய ரசாயனங்களால் தயார் செய்யப்படுபவை.

எண்ணெய்கள்…Essential Fatty Acids (EFA) எனப்படுகிற அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களும் வறண்ட, உடைந்த கூந்தலை மென்மைஆக்கி, எளிதாகக் கையாளும் வகையில் மாற்றக்கூடியவை. கூந்தலில் இயற்கையாகவே சீபம் என்கிற ஒருவகையான எண்ணெய் சுரக்கும். அதிலும் EFA உள்ளது. Pack கண்டிஷனர் என்பவை மிக மிக அடர்த்தியாக இருக்கும். கூந்தலுடன் அப்படியே படியக்கூடியது.

லீவ் இன் கண்டிஷனர்ஸ்(Leave in conditioners)

Unsaturated fatty acid எனப்படுகிற நிறைவுறா கொழுப்பினால் தயாராகும் இவற்றின் அடர்த்தி மிக மிகக் குறைவாக இருக்கும். இது கிட்டத்தட்ட கூந்தல் எண்ணெய்க்கு நிகரானது. சாதாரணமாக கண்டிஷனர் உபயோகித்ததும் கூந்தலை அலச வேண்டும். லீவ் இன் கண்டிஷனரை எண்ணெய் போன்று அப்படியே தடவிக் கொண்டு போகலாம். கூந்தலை சிக்குகள் இன்றி வைக்கும்.

வீட்டிலேயே செய்யக்கூடிய கண்டிஷனர்

நன்கு பழுத்த அவகடோ (பட்டர் ஃப்ரூட்) – பாதி, ஆலிவ் ஆயில் – அரை டீஸ்பூன், லாவெண்டர் அல்லது ரோஸ்மெரி ஆயில் – 3 துளிகள்.எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்துக் குழைத்து தலைமுடியில் தடவி, 10 நிமிடங்கள் வைத்திருந்து அலசவும்.

ஒரு கப் தேங்காய் எண்ணெயில் கைப்பிடி அளவு வெந்தயம் சேர்த்துக் காய்ச்சவும். அந்த எண்ணெயை தலையில் தடவி சில மணி நேரம் ஊறவும். பிறகு மிதமான ஷாம்பு கொண்டு அலசவும். இது கூந்தலை கண்டிஷன் செய்து, மிருதுவாக்கும். ஏற்கனவே எண்ணெய் பசையான கூந்தல் உள்ளவர்கள் இதைத் தவிர்க்கவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேனிட்டி பாக்ஸ்: பாடி வாஷ்!! (மகளிர் பக்கம்)
Next post ஆண்மையின் அடையாளம் ரஷ்யா!! (அவ்வப்போது கிளாமர்)