தினமும் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய உணவுகள்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 23 Second

நாம் தினமும் சாப்பிடும் உணவுதான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவு சாப்பிடுவது, சிறந்த தற்காப்பு.

பாதாம்:

இதில் வைட்டமின் – இ, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சர்க்கரை நோயாளிகள் சாப்பிட்டால் சிறந்த பலன் தரும்.

இஞ்சி:

வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்
படுத்தும். இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம்; தேனீர் தயாரிக்கும்போது, தேயிலை தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.

கீரை:

அனைத்து கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், மினரல்ஸ், வைட்டமின், இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இவை மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது. கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

கேரட்:

கேரட்டை சமைத்து சாப்பிடுவதைவிட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.

பேரீச்சம்பழம்:

உடலுக்குத் தேவையான இரும்புச்சத்து இதில் எக்கச்சக்கமாக உள்ளது. வளரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும். பேரீச்சையை சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது உடலுக்குச் சிறந்த சக்தியைத் தரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடந்த காலத்துக்குச் செல்வதா? கற்களைக் கடந்து பயணிப்பதா? (கட்டுரை)
Next post அச்சம் தவிர்!! (மருத்துவம்)