வதைமுகாம் விடுவிக்கப்பட்டு 76 வருடங்கள்!! (கட்டுரை)

Read Time:2 Minute, 38 Second

ஹிட்லரின் ஆஸ்விட்ஸ் வதைமுகாமிற்கு அழைத்துச்செல்லப்படும் நூற்றுக்கணக்கான ஹங்கேரிய யூதர்களின் படங்கள் வெளியாகியுள்ளன
அச்சம் நிறைந்த முகங்களுடன் யூதசிறுவர்களும் கைக்குழந்தைகளை அணைத்தபடி தாய்மார்களும் தங்கள் தலைவிதி எவ்வாறானதாக மாறப்போகின்றது என்பதை செல்வதை இந்த படங்கள் காண்பிக்கின்றன.

போலந்தி;ல் ஓஸ்விசம் நகருக்கு அருகில் காணப்பட்ட ஆஸ்விட்ஸ் வதைமுகாமில் கொல்லப்பட்ட 1.1மில்லியன் மக்களில் இவர்களும் அடங்குவார்கள்
1941 முதல் 1945 முதல் அடொல்ப் ஹிட்லரினால் கொல்லப்பட்ட மில்லியன் கணக்கான மக்களில் அஸ்விட்ஸ் முகாமை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

முகாமின் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த ஹிட்லரின் எஸ்எஸ் படையணியினர் எடுத்த படங்கள் ஹங்கேரியை சேர்ந்த யூதர்கள் முகாமிற்கு வந்துசேர்வதையும் எரிவாயுஅறைகளிற்கு செல்வதற்காக காத்திருப்பதையும் காண்பித்துள்ளன.
1944ம் ஆண்டு கோடைகாலத்தின் மூன்றுமாதங்களில் நான்கு இலட்சம் ஹங்கேரிய யூதர்கள் கொல்லப்பட்டனர்.

ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் ஹிட்லரின் மரண முகாம்கள் என்ற விரைவில் வெளிவரவுள்ள நூலில் இந்த படங்கள் இடம்பெற்றுள்ளன.

இராணுவவரலாற்றுநிபுணர் லான்பக்ஸ்டெர் என்பவர் இந்த நூலை வெளியிடவுள்ளார்.
வதைமுகாம் சோவியத்படையினரால் விடுவிக்கப்பட்டு இன்று 76 வருடங்கள் ஆகின்ற நிலையில் ஆஸ்விட்ஸ் முகாமை மரணத்தின் தொழி;ற்சாலை என வர்ணித்துள்ள லானக்பக்ஸ்டெர் இந்த முகாம்ஒரு நினைவுச்சின்னம் என்னநடந்தது என்பதற்கான சோகத்திற்கான ஒரு சான்று என குறிப்பிட்டுள்ளார்.

என்ன நடக்கலாம்என எதிர்காலத்தில் ஏனையவர்களிற்கு எச்சரிப்பதற்கான ஒரு அடித்தளம் இதுவெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய பெண்கள் பற்றின ரகசியங்கள் ! (வீடியோ)
Next post நெஞ்சமுண்டு… நேர்மையுண்டு.. ஓட்டு ராஜா!! (மருத்துவம்)