மழை காலம் இனிதாகட்டும்! (மருத்துவம்)

Read Time:6 Minute, 48 Second

பூமியின் செழிப்புக்காக மழையை ஒருபுறம் ஆர்வத்துடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறோம். அதேநேரம், அந்த நன்மையின் பக்கவிளைவாக சில நோய்களையும் அது அளித்து விடுகிறது. எனவே, மழைக்காலம் முழுமையாக இனிதாக அமைய முன்னெடுக்க வேண்டிய சில நடவடிக்கைகள் பற்றி இங்கே விளக்குகிறார் இன்டர்னல் மெடிசின் சிறப்பு மருத்துவரான சுதர்சன்.

* சாலைகளில் தேங்கியிருக்கும் தண்ணீரினால், வயிறு சம்பந்தமான தொற்று நோய்கள், எலியின் சிறுநீர் கலப்பதால் டைபாய்டு, ஸ்வைன்ஃப்ளு போன்றவை வரலாம். எனவே, எச்சரிக்கை தேவை.

* கொசுக்களினால் வரக்கூடிய மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா போன்றவற்றுடன் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களும் மழைக்காலங்களில் பொதுவான சுகாதார பிரச்னையாக இருக்கிறது.

* அச்சமூட்டும் விதத்தில் பலவிதமான வதந்திகள் பரவும் நேரம் இது. அதனால் எல்லாவற்றையும் கேட்டு பீதியடைய வேண்டியதில்லை. அரசின் அறிவிப்புகள், சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ வட்டாரங்கள் போன்றவற்றிடமிருந்து கிடைக்கும் அதிகாரப்பூர்வமான தகவல்களை மட்டுமே கவனத்தில் கொள்ளுங்கள்.

* இணையதளங்கள், சமூகவலைதளங்களில் உண்மைகள் மட்டுமே வெளியாகும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

* மருத்துவம் தொடர்பான எந்த சந்தேகங்களையும் குடும்பநல மருத்துவர் அல்லது தகுதிபெற்ற மருத்துவ வட்டாரத்தில் இருந்து மட்டுமே கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். கண்டவர்களிடமும், கண்ட விஷயங்களைக் கேட்க வேண்டாம்.

* பொதுமக்கள் தங்கள் உடலைப்பற்றி புரிந்து கொள்ள வேண்டும். எது அவசரம், எது சாதாரணம் என்ற தெளிவு வேண்டும். வழக்கமான அறிகுறிகளிலிருந்து வித்தியாசப்பட்டால், உடனடியாக மருத்துவரிடம் சென்றுவிடுவது நல்லது.

* டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு உடல் முறுக்கி வலி, பின் முதுகு வலி, கண்ணுக்குப் பின்னால் வலி, வயிற்றுக் குமட்டல், தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் நிற்காமல் இருக்கும். இவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்.

* டெங்கு அறிகுறிகளை உணர்ந்தவுடன் தாமதமாக மருத்துவமனைக்குச் செல்வது, நிலைமையை மிக மோசமாக்கிவிடும்.

* மற்ற தொற்று நோய்கள் வராமலிருக்க நீரைக் காய்ச்சி குடிப்பதும், வெளியே சாப்பிடுவதையும் தவிர்ப்பதும் அவசியம்.

* சிக்குன் குன்யா, மலேரியா காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தற்போது குறைவாகத்தான் இருக்கிறது என்பது ஆறுதலான செய்தி.

* காய்ச்சலோடு முகம், கழுத்துப் பகுதி தோலில் தடிப்புகள், மூட்டு இணைப்புகளில் வலி போன்றவை சிக்கன்குன்யாவின் அறிகுறிகள். சிக்குன் குன்யா டெங்கு காய்ச்சல் அளவிற்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நோய் இல்லை, என்றாலும், இதற்கும் உடனடி மருத்துவம் தேவை.

* சாதாரண வைரஸ் காய்ச்சலுக்கும் உடல்வலி இருக்கும் என்பதால், கடைகளில் வலிநிவாரணி மாத்திரைகளை சாப்பிட்டு சரிசெய்து விடலாம் என்று அலட்சியமாக இருந்துவிடக்கூடாது.

* ஃபிரிட்ஜில் வைத்த குளிர்ச்சியான உணவை உண்ணாமல், கூடியவரை சூடான, ஃப்ரஷ்ஷான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது.

* பல்களில் ரத்தக்கசிவு, உடல் வறட்சி மலம், சிறுநீரில் ரத்தம் வெளியேறினாலும் முன்னெச்சரிக்கையாக டெங்கு காய்ச்சல் பரிசோதனை செய்து
கொள்வது மிக அவசியம்.

* காய்ச்சலின்போது ரத்தப்பரிசோதனை செய்து டெங்கு இல்லை என்று நெகடிவ் ரிசல்ட் வந்தாலும் காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் திரும்பத் திரும்ப ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

* டெங்கு, ஸ்வைன்ஃப்ளூ இந்த இரண்டு காய்ச்சல்களுக்கும் மீண்டும் மீண்டும் சோதனை செய்வதும் கூடுதல் கவனம் செலுத்துவதும்
அவசியம்.

* மழைக்காலத்தில் வீட்டைச் சுற்றியும் தண்ணீர் தேங்க விடாமலும், வீட்டிற்குள்ளேயும் தண்ணீரை திறந்து வைக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* கொசுவலை, கொசுவிரட்டி உபயோகப்படுத்துவது, இரவில் மட்டும் அல்லாது பகலிலும் கொசுவிரட்டி, உடலில் தடவிக்கொள்ளும் கொசுமருந்து போன்றவற்றை பயன்படுத்தினால் டெங்குவிலிருந்து ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம்.

* குழந்தைகளுக்கு டைபாய்டு, காமாலை போன்ற நோய்களுக்கான தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். முதியோர்களுக்கு நோய் எதிர்ப்புத் திறன் குறைவாக இருக்கும் என்பதால், முதியோர்களுக்கான தடுப்பூசிகளை போட்டு விட வேண்டும்.

* முதியோர்களுக்கு கண்டிப்பாக ஸ்வைன்ஃப்ளு தடுப்பூசிகளை முன்னதாகவே போட்டுக் கொள்ள வேண்டும். இவர்களுக்கு நிமோனியா தடுப்பூசியை 5 வருடங்களுக்கு ஒரு முறை போட்டுக் கொள்வது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இலங்கையின் முக்கியமான திட்டத்தில் இருந்து இந்தியா வெளியேற்றப்பட்டது ஏன்? (கட்டுரை)
Next post உலகின் மோசமான சில உணவுமுறைகள்!! (மருத்துவம்)