இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும்!! (கட்டுரை)

Read Time:10 Minute, 19 Second

ஐநாவின் வழியில் தீர்வினை நோக்கி!” என்ற தலைப்பில் “வி சப்போர்ட்” என்ற அமைப்பு சார்பில், இலங்கை தமிழர்களின் உரிமைகள் மற்றும் கோரிக்கைகள் இந்தியாவின் பார்வையும் புரிதலும் என்ற கருப்பொருளில் டெல்லியில் கலந்துரையாடல் நிகழ்ச்சி (11) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் எம்.பி.யுமான தொல்.திருமாவளவன், ரவிக்குமார், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், ம.தி.மு.க எம்.பி கணேசமூர்த்தி , காங்கிரஸ் எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், செல்லகுமார், மாணிக்கம் தாக்கூர், ஜோதிமணி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள்.

தொல் திருமாவளவன் பேச்சு :

குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! “இலங்கை தமிழர்களுக்கு அவர்களது நிலம் அவர்களுக்கே கிடைக்க வேண்டும் என்றால் சர்வதேச அளவில் இது தொடர்பாக பேச வேண்டும். அதற்கு ஒரே இடம் ஐ.நா சபை தான்.

இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றால் இந்திய அரசின் ஆதரவு கட்டாயம் வேண்டும். சர்வதேச அரங்கில் இலங்கை விவகாரம் தொடர்பாக முதலில் இந்திய அரசு குரல் எழுப்ப வேண்டும்.

இந்திய நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் பற்றி பேசினால் கூட சர்வதேச அளவில் சென்று அடையாது.

ஆனால், ஐநா அவையில் பேசினால் மட்டுமே இலங்கை அரசின் மனித உரிமை மீறல் , இன படுகொலை, போர்க்குற்றம் ஆகியவற்றை வெளிக்கொண்டுவர முடியும்” என்றார்.

காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாக்கூர் பேச்சு

“இலங்கை தமிழர்களுக்கு நல்லது நடந்தது என்றால் அது காங்கிரஸ் காலத்தில் தான். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இலங்கை தமிழர்களுக்கு காங்கிரஸ் நல்லது செய்து வருகிறது. தற்போதைய இந்திய அரசுக்கும் , இலங்கை அரசுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும். இதற்காக தமிழகத்தின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் உள்ள இந்திய அரசுக்கும், இலங்கையில் உள்ள ராஜபக்சே அரசுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இவர்கள் இந்துக்களை மையப்படுத்தி உள்ளார்கள். அங்கு சிங்களத்தை மையப்படுத்தி உள்ளார்கள்.

தமிழக பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து மத்தியில் குரல் கொடுத்தால் மட்டுமே இலங்கை விவகாரத்தில் நாம் முதற்கட்ட வெற்றியான குடியுரிமை அடைய முடியும்” என்றார்.

தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

“ஈழம் என்ற ஒன்று அழிக்கப்பட்டது ஒரு போர்குற்றமாக பார்க்கக்கூடாது. மாறாக அது திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலை என்றே பார்க்க வேண்டும் அதை வெளிக்கொண்டு வர வேண்டும்.

ஈழ தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு உலக அரங்கில் நீதி கிடைக்க வேண்டும். அதற்காக ஐ.நா.வில் இந்தியாவின் குரல் ஒலிக்க வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுத்து வருகிறோம்.

முதலில் ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைத்தவுடன், இலங்கையில் வாழும் தமிழ் மக்களுக்கு முறையான இருப்பிட வசதி செய்து தர அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்.” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி பேச்சு

“தமிழர்களுக்காகவும், புலம்பெயர்ந்த தமிழர்களுக்காகவும், ஈழ தமிழர்களுக்காவும் காங்கிரஸ் கட்சிதான் அதிக நன்மை செய்துள்ளது, அவர்களின் உரிமைகள் கிடைக்கப் போராடியது காங்கிரஸ் கட்சி தான்.

காங்கிரஸ் கட்சியும், தலைமையும் ஈழத்தமிழர்களுக்கு உறுதுணையாக எப்போதும் இருக்கும். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அண்மையில் இலங்கை பயணம் மேற்கொண்ட போது சட்டத்திருத்தத்தை குறித்து பேசாதது வருத்தம் அளிக்கிறது.” என்று தெரிவித்தார்.

வி.சி.க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பேச்சு:-

” இந்திய வம்சாவளி மக்களுக்கு இலங்கையில் குடியுரிமை வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்தியாவில் உலக நாடுகளை சேர்ந்த அகதிகள், புலம் பெயர்ந்தோர் அதிகம் இருக்கிறார்கள். அவர்களது வாழ்வை சீர்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் சட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டுவர வேண்டும்.” என்றார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார்

“ஒரே இனம் , ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே ஆடை , ஒரே மதம் இருக்க வேண்டும் என நினைக்கும் ஒரு ஆட்சிமுறை இந்தியாவில் நடக்கிறது. நம் நாட்டில் இந்துக்களின் மரபணு வழி தோன்றலாக வந்த இந்திய இஸ்லாமியர்களை இந்தியர்கள் அல்ல என கூறும் ஆட்சி முறை தான் இந்தியாவில் நடக்கிறது.

ஈழப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்றால் ஐநா-வில் இந்தியா கட்டாயம் குரல் எழுப்ப வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் தான் தீர்வு காண முடியும் என நினைத்து பேச்சுவார்த்தைகள் நடத்திய போதும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்றுக்கொள்ள முடியாத இழப்பு நிகழ்ந்தது (ராஜிவ்காந்தி படுகொலை) என சுட்டிக்காட்டி பேசினார்.

இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த ஈழ தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெற்றுத்தர நாங்கள் கட்டாயம் போராடுவோம்.” என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பேச்சு

“தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் குடியுரிமை பரிசீலனைக்காக சுமார் 20,000 குடும்பங்கள் விண்ணப்பம் கொடுத்துள்ளனர். இவர்களுக்கு குடியுரிமை கிடைக்கும் வண்ணம் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டுவர வேண்டும்.

இலங்கை வெளிநாடு என இந்தியா கண்டுகொள்ளாமல் இருக்கமுடியாது. அங்கு நடக்கும் ஆட்சி முறைக்கும் இந்தியாவுக்கும் ஒரு தொடர்பு உள்ளது. பாகிஸ்தான் , சீன எல்லையில் இந்திய அரசு எப்படி கவனம் செலுத்துகிறதோ அதேபோல நீரால் பிடிக்கப்பட்ட இலங்கை பிரச்னையிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்.

போர்காலங்களில் இலங்கை தமிழர்கள் இழந்த உரிமைகளை இந்திய அரசு மீண்டும் கிடைக்க உறுதி செய்ய வேண்டும். இவ்விவகாரத்தில் மத்திய அரசு மந்தமாக இருந்தாலும் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

இறந்தவர்கள் மட்டுமல்லாமல், அங்கு இப்போதும் வாழும் தமிழர்களுக்கு நீதி, உரிமை, அந்தஸ்து, தேவைகள் பெற்றுத்தர வேண்டியது இந்திய அரசின் கடமை. மத்திய அரசு எடுக்கும் எந்த முடிவுக்கும் தமிழகத்தை சேர்ந்த அனைத்து எம்.பி-களும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ராகுல்காந்தி தடுத்தாரா? இல்லை…!

அப்படி இருக்கும்போது முடிவு எடுக்க வேண்டியவர்கள் அது குடியரசு தலைவராக இருந்தாலும் சரி, ஆளுநராக இருந்தாலும் சரி,

இப்படி முடிவு எடுக்க வேண்டியவர்கள் முடிவை எடுக்காமல் பிறர் மீது குற்றம் சுமத்தி வருகிறார்கள்.

மேலும் இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க விடாமல் தடுப்பது யார்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெறித்தனமாக ஆட்டைய போட்ட உலகின் 10 மனிதர்கள் !! (வீடியோ)
Next post அழகாக வயதாகலாம்!! (மகளிர் பக்கம்)