சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “ஊரதீவு மயானப் புனரமைப்பு” பூர்த்தி.. வல்லன் மயான வேலை ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ)

Read Time:9 Minute, 36 Second

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், “ஊரதீவு மயானப் புனரமைப்பு” பூர்த்தி.. வல்லன் மயான வேலை ஆரம்பம்.. (படங்கள் & வீடியோ)

“சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில் புங்குடுதீவு குறிகட்டுவான் முனியப்பபுலம் மயானம் முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டதும், புங்குடுதீவு பெருக்குமர சுற்றாடல் முழுமையாக புனரமைக்கப்பட்டு, புங்குடுதீவு கண்ணகைபுரம் மணற்காடு” மயானம் முழுமையாக புனரமைக்கப்பட்டு மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டதும், நீங்கள் அறிந்ததே.

ஆயினும் பின்னர் ஏற்படட கொரோனா நிலைமை, புரவிப் புயல், மழை, வெள்ளம் போன்ற காரணங்களினால் ஓரிரு மாதங்கள் தாமதம் ஆகிய போதிலும், கட்டிடக் கலைஞர் திரு.வனோஜன் மற்றும் அவரது குழுவினரின் துரித செயற்பாட்டினாலும், “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்” தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் விடாத அழுத்தத்தினாலும் இன்றையதினம் “ஊரதீவு மயானப் புனரமைப்பு” வேலைகள் யாவும் பூர்த்தி அடைந்து உள்ளது.

அதாவது மேற்படி பழுதடைந்த நிலையில் இருந்த, புங்குடுதீவு “ஊரதீவு மயானப் புனரமைப்பு” மயானத்தில் எரிகொட்டகை அமைத்தல், அதாவது ஏற்கனவே இருந்து வீதியோரமாக அமைந்து இருந்த எரிக்கும் இடத்தை, புதியதோர் இடத்தில் உருவாக்கி, புதிதாக கேடர் மாற்றி, அதுக்குரிய கூரை யாவும் புதிய தகரங்கள் மூலம் “புதியதோர் எரிகொட்டகை” போடப்பட்டதுடன் அவ்விடத்தில் கிரியைகள் செய்வதுக்கான கிணறு பழுதடைந்து உள்ளததினால், கிணறு புனரமைக்கப்பட்டதுடன், அதுக்குரிய சுற்றுத்தளம் அமைத்தல், தொட்டி அமைத்தல் போன்றவை நடைபெற்றதுடன்,

ஏற்கனவே இருந்த மண்டபமும் புனரமைப்பு போன்ற வேலைகள் அதாவது கிரியை மண்டபத்தின் அத்திவாரம் பூசப்பட்டு, மேலே கூரைகள் வர்ணம் பூசப்பட்டு, மண்டபமும் முழுமையாக பூசப்பட்டு வர்ணம் பூசப்பட்டதுடன், அம்மயானத்தின் பற்றையாகவும், மேடுபள்ளமாகவும் சீரற்ற முறையில் இருந்த சுற்றுப் பகுதிகள் யாவும் இயந்திரங்கள் மூலம் சீராக்கப்பட்டதுடன், அங்கிருந்த வைரவர் சூலத்துக்கான கோயிலும் வடிவமைக்கப்பட்டு மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டது.

புங்குடுதீவு சுவிஸ் மக்கள் ஒன்றியத்தினரின் ஊர்நோக்கிய பயன்மிகு பணியின் தொடர்ச்சியாக புங்குடுதீவு ஊரதீவு மயானப் புனரமைக்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு துரிதகதியில் நிறைவேற்றப்பட்டது.

இதனை மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கும் நிகழ்வானது இன்றையதினம் புங்குடுதீவு சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், புங்குடுதீவு ஒருங்கிணைப்பாளர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (ஓய்வுநிலை அதிபர் தலைமையில், ஆகியோரினால் மக்களின் பாவனைக்கு சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில், புங்குடுதீவு சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், புங்குடுதீவு ஒருங்கிணைப்பாளர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (ஓய்வுநிலை அதிபர்) தலைமையில், ஊரதீவு மண்ணின் மைந்தரும், சமூகத் தொண்டனுமாகிய “பால்குடி” எனும் திரு.பரமேஸ்வரன், ஊரதீவு கிராம அபிவிருத்திச் சங்க உபதலைவர் திரு.நடராசா மதியழகன், புங்குடுதீவு பானாவிடை சிவன் தேவஸ்தான நிர்வாகசபை உறுப்பினர் திரு.கந்தையா குலசேகரம், புங்குடுதீவு தனியார் பேரூந்து சங்க நேர கண்காணிப்பாளர் திரு.அந்தோனிப்பிள்ளை குணம் உட்பட விருந்தினர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

மேற்படி புங்குடுதீவு ஊரதீவு மயானப் புனரமைப்புக்கு முழுமையான நிதி உதவியளித்த வகையில் “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றிய” அனைத்து உறுப்பினர்களுக்கும், மேற்படி நடவடிக்கையை மேற்கொள்ள பலவழிகளிலும் தோள்கொடுத்த சுவிஸ் வாழ் புங்குடுதீவு மக்கள் உட்பட உலகெங்கும் உள்ள புங்குடுதீவு மக்களுக்கும், மேற்படி நடவடிக்கையை முழுமையாக மேற்கொண்ட கட்டிடக் கலைஞர் திரு.வனோஜன் குழுவினருக்கும், முழுமையான ஆலோசனைகள் வழங்கி மேற்பார்வை இட்ட திரு.இ.இளங்கோவன், திரு.எஸ்.கே.சண்முகலிங்கம், மற்றும் இரவுபகல் பாராது தினந்தோறும் அனைவருடனும் உரையாடி அனைத்தையும் மேற்பார்வை இட்டு வழிநடத்தி செயல்படுத்திய “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் உட்பட அனைவருக்கும் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” நிர்வாகசபை சார்பில் எமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். நன்றி.

“வல்லன் நாவுண்டான்மலை மயானம்”
§§§§§§§§§§§§§§§§§§§§

இதனைத் தொடர்ந்து இன்றையதினம் “வல்லன் நாவுண்டான்மலை” ஆகிய மயானங்களின் புனரமைப்பு வேலைகள் ஆரம்பமாகியது என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அதாவது புங்குடுதீவு “வல்லன் நாவுண்டான்மலை” மயானத்தில் புதிதாக எரிகொட்டகை அமைத்தல், அதாவது கேடர் மாற்றி, அதுக்குரிய கூரை யாவும் புதிய தகரங்கள் மூலம் போடப்படுவதுடன். அவ்விடத்தில் கிரியைகள் செய்வதுக்கான கிணறு இல்லாததினால், புதிதாக கிணறு உருவாக்கப்பட்டு கிணறு அமைத்தல், அதுக்குரிய சுற்றுத்தளம் அமைத்தல் போன்றவை நடைபெற உள்ளத்துடன், ஏற்கனவே இருந்த மண்டபம் புனரமைப்பு போன்ற வேலைகள் அதாவது கிரியை மண்டபத்தின் அத்திவாரம் பூசப்பட்டு, மேலே கூரைக்கு வர்ணம் பூசப்பட்டு, மண்டபமும் முழுமையாக பூசப்பட்டு வர்ணம் பூசப்படுவதுடன், அம்மயானத்தின் மேடுபள்ளமாகவும் சீரற்ற முறையில் உள்ள சுற்றுப் பகுதிகள் யாவும் இயந்திரங்கள் மூலம் சீராக்கப்படுவதுடன், அங்கு உள்ள வைரவர் சூலத்திற்கும், ஊரதீவு மயானத்தைப் போன்றே மண்டப வடிவில் அமைப்பதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

மேற்படி நிகழ்வில், புங்குடுதீவு சுவிஸ் மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின், புங்குடுதீவு ஒருங்கிணைப்பாளர் திரு.எஸ்.கே.சண்முகலிங்கம் (ஓய்வுநிலை அதிபர்) தலைமையில், ஊரதீவு மண்ணின் மைந்தரும், சமூகத் தொண்டனுமாகிய “பால்குடி” எனும் திரு.பரமேஸ்வரன், ஊரதீவு கிராம அபிவிருத்திச் சங்க உபதலைவர் திரு.நடராசா மதியழகன், கட்டிடக் கலைஞர் திரு.ஜெ.காளிதாஸ் உட்பட விருந்தினர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர். நன்றி.

**எமது “ஊர் நோக்கிய” புனரமைப்பு வேலைகளை தொடர்ந்து மேற்கொள்ள, சுவிஸ் வாழ் அனைத்து புங்குடுதீவு மக்களையும் அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். (இதுவரை 2019, 2020 வருட சந்தா செலுத்தாதோர், உடன் அதனை செலுத்தி இணைந்து செயல்படுமாறு அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி)

இவ்வண்ணம்…
திருமதி.செல்வி சுதாகரன்,
செயலாளர்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிற்சர்லாந்து.
21.03.2021



Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதல் மட்டும் போதுமா? (மகளிர் பக்கம்)
Next post பிங்க் ஆட்டோ பெண்களுக்காக பெண்களால்!! (மகளிர் பக்கம்)