மின் எந்திரங்கள் கவனிக்க!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 24 Second

*குளிப்பதற்குச் சரியாக பதினைந்து, இருபது நிமிடங்களுக்கு முன்னதாக ‘கெய்ஸரை’ ஆன் செய்வதே சரியான முறை. சில மணி நேரம் முன்னால் ‘ஆன்’ செய்தால் மின்சாரச் செலவு கூடும். கெய்ஸரில் இருக்கும் ‘தெர்மோஸ்டாட்’ பழுதாகிவிடும்.

*கெய்ஸர்களில் உள்ள வெப்பப்படுத்தும் சாதனத்தை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றினால் தண்ணீர் விரைவில் வெந்நீர் ஆவதோடு மின்சாரமும் மிச்சமாகும்.

*மின்விசிறிகளை போதுமான உயரத்தில் நிறுவப்படுவது அவசியம். ஆறடி உயரம் கொண்ட ஒருவர் கைகளை நேராக மேலே உயர்த்தினால் அவை படாத உயரத்தில் மின்விசிறி இருக்க வேண்டும்.

*வாஷிங்மெஷினில் டிரையரை உபயோகிக்கும்போது வாஷ்டாப்பிலும் தண்ணீர் இருந்தால் அநாவசிய அதிர்வுகள் தவிர்க்கப்படுவதுடன் மிஷினும் எளிதில் பழுதாகாமலிருக்கும்.

*வாஷிங் மெஷினில் உள்ள அழுக்கை சேகரிக்கும் துணி கிழிந்துவிட்டால் அதனை அகற்றி விட்டு குழந்தையின் பழைய சாக்ஸினை அழுக்கு சேகரிக்கும் துணியாக உபயோகிக்கலாம்.

*ஏ.சியினை சர்வீஸ் செய்து பயன்படுத்தும் போது அதன் ஃபில்டரை இரு வாரங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்தால் அதிக அளவு மின்சாரம் செலவாவதை மிச்சப்படுத்தலாம்.

*விரிசல் விழுந்த மின்சாதனங்களை உடனடியாக மாற்றி விடுவது அவசியம்.

*மின்சாரத்தால் இயங்கும் சமையலறை சாதனங்கள் அல்லது அயன்பாக்ஸ் போன்றவற்றை உபயோகிக்கும்போது மரப்பலகை அல்லது மரமேஜை போன்றவற்றின் மீது வைப்பது பாதுகாப்பானது. அதே போல் அதனை மரப்பலகை மீது நின்றுகொண்டோ அல்லது காலில் ரப்பர் செருப்பு அணிந்து கொண்டு கையாள்வது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கழிவறை இருக்கை-பாலியல் கல்வியை வலியுறுத்தும் புத்தகம்!! (மகளிர் பக்கம்)
Next post திருமணத்துக்கு முன்பே…!! (அவ்வப்போது கிளாமர்)