சிறு கல்லும்…. சில உணவுக்குறிப்பும்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 0 Second

கனிமவளப்பட்டியலில் கற்கள் இருக்கிறதே என்பதற்காக இவர்களால் சந்தோஷப்பட முடியவில்லை. நிம்மதியாக தூங்க இயலவில்லை. எழுந்து நடமாட முடியவில்லை. இப்போ வருமோ. ஒஒ.. எப்போ வருமோ…ஒஒஒ என்று வலியை வழிமேல் விழி வைத்து பதற்றத்துடன் பார்க்கும் இந்த கல் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை பரிதாபமானது.

உடம்பை கல்லு மாதிரி வச்சிருக்கேன் என்பவர்கள் கூட சும்மா துளியூண்டு கல் உடலில் உருவானாலும் போதும் பிரசவ வலியாட்டம் புரண்டு கதறி துடித்துப் போய்விடுவர்..

இப்போது புரிந்திருக்குமே… யெஸ்.. சிறுநீரககல் பாதிப்புதான் மேற்கண்ட அத்தனை’ படுத்தல்களுக்கும்’ காரணம் . இந்நோய் ஏற்படுவதற்கான காரணப்பட்டியல்கள் எவ்வளவு நீளமோ… அதை விட நீளமானது எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்ற லிஸ்ட்… நிறைய சொல்லியாச்சு.. நெறைய கேட்டாச்சு … ஒரு மாறுதலுக்காக எதை எல்லாம் ‘ சாப்பிடலாம்’ என்பதை இப்போ பார்ப்போம்.

இளநீர் பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் இருப்பதால் கல் உருவானதைத் தவிர்க்கும். பாகற்காயில் தாதுப் பொருட்கள் அதிகம் இருப்பதால் நாக்கை மூடிக்கொண்டு பாகலை அதிகம் உள்ளுக்குள் தள்ளுங்கள். கேரட்டும் நல்லது. வாழைப்பழங்களில் உள்ள வைட்டமின் பி6, ஆக்சாலிக் அமிலத்தை ஆக்ஸா பிளோட்டம் சிதைப்பதால் கல் உண்டாவது தவிர்க்கப்படும்.

எலுமிச்சையில் உள்ள அதீத சிட்ரேட்கள் நமக்கு சிறந்த ‘காம்ரேட்’கள். இது கல் உருவாதலிற்க்கு எதிராக போர் புரிகிறது. அன்னாச்சியில் உள்ள என்சைம்கள் பைப்ரின்களை சிதைக்கும் தன்மை கொண்டது. பார்லி. ஒட்ஸ் உணவெல்லாம் அதுக்கும் மேல… கல்லிற்க்கு எதிரான சக்திவாய்ந்த உணவு இது.

பாதாமில் பொட்டாசியம் மக்னீசியம் அதிகம் இருப்பதால் இதுவும் ஒகே ஆனால் பார்த்து அளவா சாப்பிடனும். இதையெல்லாம் விட தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதும், உடல் உழைப்பும் அவசியம். உணவு முறையும், பழக்கவழங்கமும் ரெட்டை மாட்டு வண்டி மாதிரி. அப்படி இருந்தால் கல்லும் கரைந்தோடும் கவலையும் பறந்தோடும்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுநீரகத்தையும் பாதிக்கும் திக் திக்!! (மருத்துவம்)
Next post அளவுக்கு மீறினால்..? (அவ்வப்போது கிளாமர்)