வைகறையில் விழித்தெழு… புத்துணர்வு பெற்றிடு!! (மகளிர் பக்கம்)

Read Time:7 Minute, 3 Second

‘பின் தூங்கி, முன் எழுபவள் பெண்!’’ நவநாகரிக இளம் பெண்களுக்கு வேண்டுமானால் இந்த முதுமொழி அர்த்தமற்றதாகவும், எரிச்சல் ஊட்டுவதாகவும் இருக்கலாம். பிரிட்டன், ஸ்காட்லாந்தில் உள்ள NCRI(National Cancer Research Instituteல், இதனை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வுகளில் தூக்கத்திற்கும் மார்பக புற்று நோய்க்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதாவது இரவில் நீண்ட நேரம் தூங்காமல் விழித்திருக்கும் பழக்கம் கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் இரவு சீக்கிரம் தூங்கி விடியற்காலையில் எழும் பழக்கம் கொண்டுள்ள இரண்டு தரப்பு பெண்கள் ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். அதன் முடிவில், அதிகாலையில் தூங்கி எழும் பெண்களுக்கு 40 முதல் 48% மார்பகப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்பது கண்டறியப்பட்டது. அதே சமயம் ஏழு முதல் எட்டு மணி நேரத்தைவிட, அதிக நேரம் தூங்கும் பெண்கள், அதிகரிக்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 20% கூடுதலாக மார்பக புற்றுநோய்க்கு ஆளாகுகின்றனர் என்று ஆய்வு கூறுகிறது.

பெண்களுக்குப் பேராபத்து!

உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பிரச்னை மற்றும் புகை மற்றும் மது அருந்தும் பழக்கம் கொண்ட ஆண், பெண் இருவருக்கும் வேறுபாடு இல்லாமல் மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்று பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு, இப்பாதிப்பு ஏற்படுவதற்கான சூழல் அதிகம் என்றும் இதில் குறிப்பிட்டுள்ளனர்.

40 முதல் 69 வயதுள்ள 5 லட்சம் பேரை ஏழு வருடங்களாக தொடர்ந்து கண்காணித்ததில், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு மாரடைப்பு முதல் தடவை ஏற்பட்டது தெரியவந்தது. அவர்களில், 29% பெண்கள். அதே சமயம் புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ள ஆண்களுக்கு குறைந்தது இரண்டு முறை, பெண்களுக்கு மூன்று முறையாவது மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த ஆய்வு மூலம் பெண்களிடம் அதிகரித்து வரும் மாரடைப்பு குறித்து விழிப்புணர்வு உண்டாக்குவதன் அவசியத்தை உணர்த்துவதாகவும், ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த சிகிச்சை குறித்த ஆலோசனைகளை வழங்க உறுதி செய்துள்ளனர்.

மனச்சோர்வை அளிக்கும் ஆண் குழந்தைகள்!

மகப்பேறு என்றாலே, மறு பிறவிக்குச் சமம் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. பிரசவத்தில் ஆண் குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள் குறித்து ஆய்வினை சோஷியல் சயின்ஸ் மற்றும் மெடிசன் இதழில் நடத்தப்பட்டது. இதில் பெண் குழந்தைகளை ஈன்ற பெண்களைவிட, ஆண் சிசுக்களைப் பெற்றெடுத்தவர்கள் 79% ‘Postpartum’ என்ற மகப்பேற்றிற்குப் பின் ஏற்படுகின்ற மனச்சோர்வுக்கு உள்ளாவதாக கண்டறியப்பட்டு உள்ளது. இந்த ஆய்வு, பிரசவித்த 296 பெண்களின் மருத்துவ விவரங்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, பிரசவ நேரத்தில் சிரமப்படாத பெண்களை விட அதிகமாக அவதிப்படும் பெண்களும் இவ்வகை சோர்வால் பாதிக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. கவலை, மன அழுத்தம், மனச்சோர்வு போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்களைவிட, பிரசவத்துக்குப் பின்னர் உண்டாகுகின்ற மனச்சோர்வினால் பாதிக்கப்படும் பெண்களின் சதவிகிதம் குறைவு என்றாலும் கவனிக்கப்பட வேண்டியது என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் ஆரோக்கியத்துக்கான புதிய மந்திரம்!

உடல் நலம் சார்ந்த விஷயம் எதுவாக இருந்தாலும், அமெரிக்காவே முன் நிற்பது வழக்கம். அதனடிப்படையில், சிறுவர், சிறுமியர் உட்பட, இளம் வயதினரைப் பெருமளவில் பாதிக்கின்ற உடற்பருமன் மற்றும் அதனோடு தொடர்புடைய ஆரோக்கியம் தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் வகையில், அமெரிக்காவின் ஹெல்த் மற்றும் ஹியூமன் சர்வீஸ் துறை புதிய வழிகாட்டுதல் ஒன்றை உருவாக்கியுள்ளது. Move More; Sit Less! என்ற முழக்கத்தை இது வெளியிட்டுள்ளது.

அதன்படி, குழந்தைகள், சிறுவர், சிறுமியர், வாலிப பருவத்தினர் மற்றும் முதியவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கான நேரத்தை வரைமுறைப்படுத்தி உள்ளது. 3 முதல் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நாள் முழுவதும், 6-லிருந்து 17 வயது வரை உள்ளவர்கள் அன்றாடம் ஒரு மணி நேரம் கடுமையான உடற்பயிற்சிகளான ஓடுதல், மலையேற்றம், ஜிம் வொர்க்-அவுட்டும், 18 வயதைக் கடந்தவர்கள் வாரத்துக்கு 150 முதல் 300 நிமிடங்கள் வரை மிதமான உடற்பயிற்சி அல்லது 75 முதல் 150 நிமிடங்கள் ஏரோபிக்ஸ் முதலான கடும் உடற்பயிற்சிகளோடு இரண்டு வாரத்துக்கு ஒருமுறை தசைப்பகுதிகளை வலிமைப்படுத்தும் பயிற்சியும், முதுமைப்பருவத்தினர் சீரான உடற்பயிற்சிகளோடு, தசைப்பகுதிகளைப் பலப்படுத்தும் எக்ஸசைஸ்களையும் செய்யலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பல நோய்களுக்கு உடனடி தீர்வாக அமையும் என்று ஹெல்த் மற்றும் ஹியூமன் சர்வீஸ் துறை அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வேற லெவல்! யாழில் இப்படி எல்லாம் இருக்கா? (வீடியோ)
Next post வீட்டு வேலை தொழிலாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள்..! (மகளிர் பக்கம்)