உறவில் உச்சகட்டம் எதற்காக?தெரியுமா உங்களுக்கு…!! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:3 Minute, 17 Second

உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது. உச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவகாரத்திற்காக நீதிமன்றங்களை நாடுவதில்லை என்பதிலேயே நாம் இதனை நன்கு புரிந்து கொள்ளலாம். அதனால் சிற்றின்பம் என்ற காமத்தில், காதல் என்பதை கலந்து பேரின்பம் என்ற உச்சகட்டத்தை அடைவதே ஒவ்வொரு மனிதனின் வாழ்விற்கும் இன்பம் தரக்கூடியது ஆகும். உச்சகட்டத்தை பார்க்காத ஆண் மற்றும் பெண்ணை வாழ்வில் முழுமை பெற்றவர்களாக கருதவே முடியாது என்பதற்கு கீழ்காணும் சம்பவமே ஒரு எடுத்துக்காட்டு.

பன்னாட்டு நிறுவனத்தில் உயர்பதவி வகிக்கும் ஒரு பெண், அலுவலகத்தில் மிகச் சிறப்பாக பணி புரிந்து நற்பெயரை பெற்றார். ஆனால் வீட்டுக்கு வந்ததும் சிடுசிடுவென பேசுவதும், குழந்தைகளை அடிப்பதும், மற்றவர்களிடம் எரிச்சலை காட்டுவதும், கோபப்படுவது மேலும் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக் கொண்டு செயல்படுவது என்று தன்னைத்தானே துன்புறுத்திக் கொண்டார். நிலைமை தலைக்கு மேல் செல்லவே, வேறு வழியின்றி மருத்துவரிடம் சென்றார்.

அவரை ஆய்வு செய்த மருத்துவர் உடல்நலம், மனநலம் போன்றவை நன்றாக இருந்தாலும் அவருக்கு பாலியல் வெளிப்பாடு ஒடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆம், அவர் ஆசைப்பட்டப்படி எல்லாம் அவரால் கணவருடன் உறவில் இன்பத்தை அனுபவிக்க முடியவில்லை. அடக்கப்பட்ட பாலுந்த ஆற்றல் அதாவது Libidonal Energy காரணமாகவே சிக்கல் ஏற்பட்டு அப்பெண் அசாதரணமாக நடந்து கொண்டது கண்டறியப்பட்டது.

அந்த பெண் அதிகாரி படித்தவராக இருந்தாலும், கலவியில் உச்சகட்டம் என்ற ஒன்று உண்டு என்று தெரிந்தாலும், அதை எப்படி பெறுவது என்று தெரியாமல் அத்தனை ஆசைகளையும் மனதில் பூட்டி வைத்த காரணத்தாலேயே இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்.

அவர் மட்டுமல்ல, நம் இந்திய பெண்களில் சுமார் 80 சதவீதத்திற்கு மேற்பட்ட பெண்கள், உச்சகட்டம் என்றால் என்னவென்றே தெரியாமல், கலவி இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பது தான் கொடுமை. இனியும் தொடரலாமா இந்த நிலைமை சிந்தியுங்கள் தம்பதியரே… சிந்தித்து செயல்படுங்கள்… ஆற்றல் மிகு உச்சகட்டத்தில் ஆனந்தம் பெறுங்கள்…

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் பல முறை உச்சம் அடைய முடியுமா? (அவ்வப்போது கிளாமர்)
Next post பரீட்சைகளையும் பட்டங்களையும் கடந்த கல்வி மறுசீரமைப்பு!! (கட்டுரை)