நில்… கவனி… சருமம்! (மருத்துவம்)

Read Time:6 Minute, 14 Second

பருவங்கள் மாறினாலும், அந்தந்த சீதோஷ்ணநிலைக்கு ஏற்ப நம்முடைய சருமத்தை பாதுகாப்பது மிகவும் அவசியம். சரும பாதுகாப்பிற்கு வயசு வித்தியாசம் என்பது கிடையாது. குழந்தை பருவத்தில் இருந்தே நல்ல ஆரோக்கியமான உணவுப்பழக்கங்கள் மற்றும் பழங்கள் சாப்பிட்டு வந்தால் வளர்ந்த பிறகு அது நம்முடைய சருமத்திலும் உடல் ஆரோக்கியத்திலும் பிரதிபலிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் சருமத்தை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்று ஆலோசனைகளை வழங்கியுள்ளார் பிளாஸ்டிக் மற்றும் காஸ்மடிக் நிபுணர் டாக்டர் சசிகுமார் முத்து.

நம்முடைய சருமத்தின் முதல் எதிரி சூரியனில் இருந்து வெளியாகும் கதிர். அது நம் சருமத்தில் பல விதமான அழற்சியினை ஏற்படுத்தும். மேலும் சருமத்தை எப்போதும் சுத்தமாகவும் ஆரோக்கிய வாழ்க்கை முறையினை பின்பற்றினாலே சருமத்தில் ஏற்படும் பிரச்னை மற்றும் வயதான தோற்றத்தை தவிர்க்க முடியும். ஒவ்வொரு பெண்ணும் இந்த ஐந்து அடிப்படை விஷயங்களை கண்டிப்பாக கவனத்தில் கொள்ள வேண்டும்.

1.சூரியனில் இருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்

உங்கள் சருமத்தை கவனித்துக்கொள்வதற்கான மிக முக்கியமான வழிகளில் ஒன்று சூரியனில் இருந்து பாதுகாப்பதாகும். சூரிய ஒளி நேரடியாக சருமத்தில் படுவதால் வாழ்நாள் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் தோல் பிரச்னைகள் ஏற்படும். சிலருக்கு தோல் புற்றுநோயின் அபாயத்தையும் அதிகரிக்கும். வெளியே செல்லும் போது சன்ஸ்கிரீன் லோஷனை (30 எஸ்.பி.எஃப்) பயன்படுத்த வேண்டும். காலை பத்து மணி முதல் மாலை 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்லும் போது பருத்தி ஆடைகளை அணியவும். இறுக்கமான உடையினை தவிர்க்க வேண்டும். வெயிலில் வெளியே செல்லும் போது குடை எடுத்து செல்வது அவசியம்.

2. புகை பிடிக்காதீர்கள்

ஆண்களில் பலருக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் உள்ளது. புகை பிடிப்பதால் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படும். சருமத்தின் வெளிப்புற அடுக்குகளில் உள்ள ரத்த நாளங்களை சுருக்கி, ரத்த ஓட்டத்தை குறைத்து சருமத்திற்கு தேவையான ஆக்ஸிஜன் மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு முக்கியமான ஊட்டச்சத்துக்களை குறைக்கிறது. சருமத்திற்கு வலிமை சேர்க்கும் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் பாதிப்படையும். மேலும் தோல் புற்றுநோயின் அபாயத்தை அதிகரிக்கும்.

3. சருமத்தை மென்மையாக கையாளுங்கள்

சருமம் மிருதுவானது, அதை மிகவும் பத்திரமாக கையாள வேண்டும். சூடான தண்ணீரில் குளிப்பதை தவிர்க்க வேண்டும். அதிக ரசாயனம் உள்ள சோப்பினை பயன்படுத்தக்கூடாது. இவை சருமத்தில் உள்ள எண்ணை பிசுக்கை நீக்கி பொலிவிழக்க செய்யும். ஆண்கள் ஷேவ் செய்வதற்கு முன் ஷேவிங் கிரீம், லோஷன் அல்லது ஜெல் தடவவும். நெருங்கிய ஷேவிற்கு சுத்தமான, கூர்மையான ரேஸரைப் பயன்படுத்துங்கள். முடி வளரும் திசையில் ஷேவ் செய்யுங்கள். வறண்ட சருமம் உள்ளவர்கள் மாய்சரைசர் பயன்படுத்தலாம்.

4. உணவின் மீது கவனம் கொள்ளுங்கள்

ஆரோக்கியமான உணவு உங்கள் சிறந்த தோற்றத்தை உணர உதவும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் புரதங்களை நிறைய சாப்பிடுங்கள். உணவுக்கும் முகத்துக்கும் எப்போதும் தொடர்புண்டு. மீன் எண்ணெய், ஆரோக்கியமற்ற கொழுப்புகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள், குறைவான உணவு இளமையான தோற்றத்தை மேம்படுத்தும். அதிகளவு தண்ணீர் குடிப்பது உங்கள் சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

5. மன அழுத்தத்தை நிர்வகிக்கவும்

சருமத்தின் முக்கிய எதிரி மன அழுத்தம். இதனால் முகப்பரு மற்றும் கரும்புள்ளி என சருமத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும். ஆரோக்கியமான சருமத்தை விரும்பினால், முதலில் உங்கள் மன அழுத்தத்தை நிர்வகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஆறு மணி நேர தூக்கம் அவசியம். வேலையினால் மனஅழுத்தம் ஏற்பட்டால், செய்ய வேண்டிய காரியங்களை பட்டியலிட்டு கடைப்பிடிக்க வேண்டும். உங்களுக்கான நேரத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். முடிவுகள் நீங்கள் எதிர்பார்ப்பதை விட வியத்தகு முறையில் இருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post Ladies.. that three days? (மருத்துவம்)
Next post பாலியல் உணர்வை அடக்க என்ன செய்ய வேண்டும்-? (அவ்வப்போது கிளாமர்)