நோய் தடுக்கும் தாம்பூலம்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 31 Second

மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே வெற்றிலையானது பயன்பாட்டில் இருந்து வருகிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தப்படும் தாவரங்களில் வெற்றிலையும் ஒன்றாகும். கி.மு. 2-ம் நூற்றாண்டில் இலங்கையில் எழுதப்பட்ட மகா வம்சம் என்னும் நூலில் வெற்றிலை மெல்லுவது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

வெற்றிலையில் கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ளது. செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் கெடினின், சாவிகால், பைரோ கெடிசால், யூஜினால், எக்ஸ்ட்ராகால், ஆக்சாலிக் அமிலம் போன்ற பல வேதிப்பொருள் வெற்றிலையின் மருத்துவ குணங்களுக்கு அடிப்படையாக உள்ளது. வெற்றிலையின் எண்ணெய் மூச்சுக்குழல் நோய்களுக்கு மருந்தாகிறது. இலையின் சாறு ஜீரணத்திற்கு உதவுகிறது. வேர்பகுதி பெண்களின் மலட்டுத்தன்மையை போக்குகிறது. அரை டம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் நல்ல குணம் கிடைக்கும்.

தலைவலி: வெற்றிலையைக் கசக்கிச் சாறு எடுத்து சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி தடவினால் தலைவலி குணமாகும்.

தேள் விஷம்: இரண்டு வெற்றிலையில் ஒன்பது மிளகை மடித்து வாயில் போட்டு நன்றாக மென்று விழுங்கி உடன் தேங்காய்த்துண்டுகளையும் மென்று தின்றால் தேள் விஷம் உடனே முறியும்.

சர்க்கரை வியாதி: இரண்டு வெற்றிலையுடன் வேப்பிலை, அறுகம்புல் ஒரு கைப்பிடியளவு எடுத்து 500 மி.லி தண்ணீரில் கொதிக்க விடவும். தண்ணீரின் அளவு 150 மி.லி.யாக குறைந்ததும், ஆற வைத்து 50 மி.லி. வீதம் மூன்று வேளை உணவுக்கு முன்பு சாப்பிடவும்.

அல்சர்: இரண்டு வெற்றிலையுடன் அத்தி இலை ஒரு கைப்பிடி, வேப்பிலை 5 ஆகியவற்றை தண்ணீரில் கொதிக்க வைத்து மூன்று வேளை அருந்தவும்.

நமது உடலில் சுரக்கும் 24 விதமான ‘அமினோ அமிலங்கள்’ வெற்றிலையில் உள்ளன. செரிமானத்துக்கும் பெரிதும் உறுதுணையாகும் இந்த ‘அமினோ அமிலங்களை’ வெற்றிலை மூலம் நாம் அடை யும்போது ஜீரணம் எளிதாகின்றது. அதனால்தான் நம் முன்னோர்கள் உணவுக்குப்பின் ‘தாம்பூலம்’ தரிக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளனர். மிகச்சிறந்த ‘நோய்த்தடுப்பு ஆற்றல்’ தாம்பூலத்தில் உள்ளது. வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு இணைந்த தாம்பூலம், மெல்லும்போது உமிழ் நீர் சுரப்பினை தூண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கிளைசெமிக்னா என்னன்னு தெரியுமா? (மருத்துவம்)
Next post உணவே மருந்து மருந்தே உணவு! (மகளிர் பக்கம்)