திருமண பந்தத்தில் உள்ள கடினமான விஷயங்கள்! (கட்டுரை)

Read Time:3 Minute, 55 Second

நமது வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அனைவரிடமும் பகிர்ந்துக்கொள்ள முடியாது. பெற்றோரிடம் பகிர்ந்துக்கொள்ளும் சிலவன நண்பர்களிடம் கூற முடியாது, நண்பர்களிடம் பகிர்ந்துக்கொள்ளும் சில விஷயம் மனைவியிடம் கூற முடியாது, மனைவியிடம் பகிர்ந்துக்கொள்ளும் சிலவற்றை யாரிடமும் கூற முடியாது, இதுதான் வாழ்க்கை.

அந்த வகையில் திருமணமான புதியதில் மனைவியுடன் பகிர்ந்துக் கொள்ள முடியாத, அல்லது தயங்கும் சில விஷயங்கள் இருக்கின்றன. சொல்லப் போனால், இவற்றை பகிர்ந்துக் கொள்ள சற்று கடினமாக கூட இருக்கும். அவை என்னென்ன, அவற்றில் இருக்கும் கடினங்கள் என்ன என்று இனிப் பார்க்கலாம்….

தலைமை
முன்பு ஆண் தான் வீட்டின் குடும்ப தலைவர் என்று எழுதப்படாத சட்டமாக இருந்தது. அன்று ஆண் மட்டும் தான் வெளியே சென்று உழைத்து வந்தான், சம்பாதித்தான். ஆனால், இன்று அப்படி இல்லை, இருவரும் உழைத்து சம்பாதிக்கின்றனர். இந்த நேரத்தில் ஊதியம், பதவி போன்றவை குறிக்கிட்டு இந்த வீட்டு தலைமைக்கு அவ்வப்போது பங்கமாகும். கணவன், மனைவி இதை பெரிதுபடுத்தாமல் இருந்தாலும், சமூகம் சும்மா இருப்பதில்லை.

படுக்கை
என்ன தான் மனதில் ஆசைகள் சிறகடித்தாலும் திருமணமான புதியதில் படுக்கையை பகிர்ந்துக் கொள்ளும் போது சிறு சங்கோஜம் இருக்க தான் செய்யும். இதை யாராலும் மறுக்க முடியாது.

பொருளாதாரம்
யார் எவ்வளவு செலவு செய்கிறார்கள் என்ற கணக்கு வந்துவிட்டால் வீடு ரெண்டுப்பட்டு போய்விடும். இதனாலேயே பல வீடுகளில் தாங்கள் செய்யும் செலவுகளை வீட்டில் பகிர்ந்துக் கொள்வதில்லை.

கனவுகள், லட்சியம்
இல்லறத்தில் இணைந்துவிட்டால் அனைத்தையும் பகிர்ந்து தான் ஆக வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், சிலவற்றை இழக்கவும் வேண்டும். ஆம், ஆனால் அதில் கனவுகள், இலட்சியம் போன்றவற்றை இழப்பது கடினமானது.

அலமாரி
திருமணம் செய்த புதியதில் மட்டமல்ல, பேரன் எடுத்துவிட்டாலும் கூட, பெண்கள் அலமாரியில் ஆண்களின் துணியை வைக்க இடம் தரமாட்டார்கள். இது அனைவருக்கும் பொருந்தும். திருமணமானவர்களுக்கு மட்டுமே தெரியும் இது எம்புட்டு கடுப்பான விஷயம் என்று!!!

நேரம்
ஆரம்பத்தில் நேரம் ஒதுக்க ஆசை இருக்கும், கொஞ்சம் நாட்கள் கழித்து, நாமாக கட்டாயத்தின் பேரில் நேரம் ஒதுக்குவோம். போக போக, இதற்கெல்லாம் நேரம் ஒதுக்க வேண்டுமா? என்ற எண்ணம் பிறக்கும். இதற்கு இந்த காலத்து வேலை முறையும் ஓர் காரணமாக இருக்கிறது, ஷிபிட் முறையில் வேலைக்கு செல்வோர் எப்படி நேரம் ஒதுக்க முடியும்? பகிர்ந்துக் கொள்ள முடியும்? சற்று கடினம் தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post “நான் ரத்தம் வடிய வடிய..” கதறும் FRIENDS பட நடிகை!! (வீடியோ)
Next post குழந்தை வளர்ப்பில் பெற்றோர் செய்யும் தவறுகள்!! (மருத்துவம்)