By 16 April 2021 0 Comments

லவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமை இருக்கே! (மகளிர் பக்கம்)

காதல் எவ்ளோ வலி’ன்னு
காலம் காலமா சொல்லிட்டு
இருக்கோமே… உண்மையிலே
காதலர்களின் நண்பர்களா இருக்கிறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா?

காதலிக்கிறது எவ்ளோ கஷ்டம்… இதைத்தான் இந்த உலகம் பார்க்குது. அதையும் தாண்டி காதலர்களோட நண்பர்கள்னு சில ஜீவராசிகள் இருக்கு. வாழ்க்கையிலே லவ்வே பண்ணாம கூட ஒருத்தன்/ஒருத்தி இருந்திடலாம். காதலர்களுக்கு நண்பர்களா சிக்காம இருக்கவே முடியாது.லவ் குருவா இருந்து ஊர்க்காதலை வளர்த்து லவ் அட்வைஸ் கொடுக்கிற பயபுள்ளைக என்னவோ கடைசி வரைக்கும் சிங்கிளாவே இருந்து வீட்டுல பார்த்து கட்டி வச்சாதான் உண்டு.

பொதுவா காதலர்களோட நண்பர்கள்னா லவ்வுக்கு ஐடியா கொடுக்கிற பேர்ல அவன்/அவ காசை ஆட்டையை போடறவனாதானே பார்க்குது இந்த சமூகம்? ஆனா, அவ மிஸ்ட்கால் கொடுத்ததும் இவன் கால் பண்றது உண்மைல இந்த மாதிரி நண்பர்கள் உபயத்தில்தான்!

உண்மையிலே லவ்வர்சுக்கு ஃப்ரெண்டா இருக்கிறதுக்கு ஸ்பெஷல் சில்ட்ரன்க்கு பேரன்டா இருக்கிற மாதிரி அவ்வளவு பக்குவமும் பொறுமையும் வேணும். லவ்னு ஒண்ணு லைஃப்ல வராத வரைக்கும், ‘நேத்து நெயில்பாலீஷ் வைக்கும்போது நெயில் உடைஞ்சுடுச்சுடி’ன்னு காலைல எழுந்து கொட்டாவி விட்டதுல ஆரம்பிச்சு, நைட் குட்நைட் கொளுத்திட்டு தூங்கற வரைக்கும் சொல்லுவா. லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா சப்ஸ்க்ரைபர் நாட் ரீச்சபிள்!

லவ் மட்டும் ஓகே ஆயிடுச்சுனு வச்சுக்கோங்க… அவளுக்கு ப்ராக்சி போடறதுல ஆரம்பிச்சு அசைன்மென்ட் ரிகார்ட் சப்மிட் பண்றவரை நமக்குதானே டபுள் வொர்க்!மேடம் என்னவோ லவ் பண்றதை மட்டும்தான் முழுநேர தொழிலா பார்ப்பா. சில நேரம் அவ ஏதோ சிக்கல்ல இருந்தா, ‘ரிப்ளை அனுப்பலனா கோச்சுப்பான்டி… நா அனுப்புற மாதிரி நீயே அனுப்பிக்கிட்டு இரு’ன்னு மொபைல கொடுத்துட்டு போவா. அவன் இவதான்னு நினைச்சு மெஸேஜ்ல வழியறதை கருமமேன்னு பார்க்கணும். நம்ம உணர்ச்சியே இல்லாம ரிப்ளை பண்ணனும், அவளோட உணர்வுகளோட.

இதுல திரும்பி வந்து, ‘மெஸேஜ்லாம் பார்த்து டிஸ்டர்ப் ஆயிட மாட்டல’ன்னு ‘உன் மனம் சஞ்சலம் அடைகிறதா
சஞ்சயா’ ரேஞ்சுல கேப்பா பாருங்க… ‘உங்க அண்ணன் நான் இல்லன்னு கண்டுபிடிக்கலையே’ன்னு கேப்பா பாருங்க… அந்த கொலைவெறித் தருணத்தை விவரிக்க வார்த்தையே இல்ல.லவ் பண்ற பொண்ணுக்கு ஃப்ரெண்டா இருக்கிற பொண்ணுங்க நிலைமை பாவமோ பாவம். எப்ப அவங்க பேரை யூஸ் பண்ணுவாங்கன்னே தெரியாது.

தெரியாம சும்மா அவங்க வீட்டுப்பக்கம் எட்டிப் பார்த்து, ‘எங்க ஆன்டி ரொம்ப நாளாச்சு அவளை பார்த்து’ன்னு கேட்ட பிறகுதான் தெரியும், வீக்லி நம்ம பெயரை யூஸ் பண்ணி அவ பாய் ஃப்ரெண்ட் கூட சுத்திட்டு இருக்காங்கிற விஷயம்! அவ்வளவு ஏன்… பாய் ஃப்ரெண்ட் பெயரைக் கூட மொபைல்ல லவ் பண்ற பொண்ணுங்க இப்படி க்ளோஸான பொண்ணுங்க பேர்லதான் சேவ் பண்ணி வச்சிருப்பாங்க. வீட்டுல விஷயம் தெரியும் போது என்னவோ, ‘என் பொண்ணுக்கு ஒண்ணுமே தெரியாது உங்க பொண்ணுதான் கெடுத்துட்டா’ன்னு நம்ம தலை உருளும்.

சந்தோஷமா இருக்கிறதை ஷேர் பண்ணவே மாட்டாங்க. சின்ன சண்டை நடந்துச்சுனா அன்னிக்கு நம்ம ஜோலி முடிஞ்சதுன்னு அர்த்தம். 20 செகண்ட்ஸ்க்கு மேல நம்மகிட்ட மொபைல்ல பேசியே இருக்காதவ 2 மணிநேரமா புலம்புவா நடுராத்திரி 12 மணிக்கு.அதுலயும், ‘அவன நான் எவ்ளோ லவ் பண்ணேன்னு உனக்கு தெரியும்ல…’ – இது மட்டும் அட்லீஸ்ட் ஒரு 50 தடவை ரிபீட் ஆயிருக்கும் நிச்சயமா.

10 எல்கேஜி பாப்பாக்களை அழாம பாத்துக்கணுமா ஸோ ஈசி. ஆனா, ரீலறுந்த ரெக்கார்ட் ப்ளேயர் மாதிரி இவங்க திரும்ப திரும்பப் பேசறதை கேட்டுப் பாருங்க. அப்போ தெரியும் எங்க மகிமை.கமிட் ஆனா பொண்ணுக்கு ஃப்ரெண்டா இருக்கிறது இன்னும் கஷ்டம்…சிங்கிளா இருந்தா பாய்ஸ் டிஸ்டர்ப் பண்றாங்களோ இல்லையோ, இந்த கமிட் ஆனா ஃப்ரெண்ட்ஸ் தொல்லை தாங்காது. ‘வீக்கெண்ட் வெட்டி தானேடி… நானும் அவனும் மட்டும் போனா யாராச்சும் தெரிஞ்சவங்க பார்த்தா நல்லா இருக்காதுடி’ன்னு தியேட்டரோ மாலோ நம்மளையும் சேர்த்துக் கூட்டிட்டுப் போவா.

இவங்க ரொமான்ஸ்ங்கிற பேர்ல பண்ற கொடுமையெல்லாம் பார்த்துட்டும் விஜிபி மஹாராஜா மாதிரி உணர்ச்சியே இல்லாத முகத்தோட கூட வரணும்.சில நேரத்துல இன்னும் கொடுமையா அவளோட ஆளே ‘பரட்டை என்கிற அழகுசுந்தர’மாத்தான் இருப்பான். எதனால இவ அவனை லவ் பண்ணான்னு அவளுக்கே புரியாது. கூட அவனோட ஃப்ரெண்டா சுத்தற ஜந்துகளைப் பத்தி சொல்லவே வேணாம்.

காரக்குழம்பை தலைல ஊத்தின மாதிரி ஹேர்ஸ்டைலோட எல்லோர்கிட்டயும் லவ் லெட்டர் நீட்டி எல்லோர்கிட்டயும் செருப்படி வாங்கின ஜீவனாத்தான் இருக்கும். இவ நம்மளை எஸ்கார்டா கூட்டிட்டு வந்த மாதிரியே சாரும் ரோமியோ கூட வந்திருப்பார். இவங்க ரெண்டு பேரும் எதிர்காலத்தைப் பத்தின தொலைநோக்குத் திட்டத்துல இறங்க, அந்த ஃப்ரெண்ட் வழிசலை வேற சமாளிச்சாகணும். ஷப்பா… இந்த லவ் பண்றவங்களுக்கு ஃப்ரெண்டா இருக்க வேண்டிய கொடுமையை தாங்க முடியாமலேதாங்க பாதிப்பேர் நமக்கு நாமே திட்டத்துல லவர்ஸா மாறிடுறாங்க போல!Post a Comment

Protected by WP Anti Spam