விளையாட்டு விளையாட்டா இருக்கணும்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 20 Second

இளைய தலைமுறையினரிடம் விஷத்தை விதைக்கும் வீடியோ கேம்ஸ் பற்றி ‘வினையாகும் விளையாட்டுகள்’ என்று கடந்த இதழில் எழுதியிருந்தோம். அதற்கு சற்றும் குறைவில்லாத ஆபத்துகளைக் கொண்ட Free style wrestling, Kick boxing போன்ற விளையாட்டுகள் பற்றியும் எழுத வேண்டும் என்று சில வாசகர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். தற்காப்புக் கலையாக இல்லாமல் வன்முறையைத் தூண்டும் இந்த விளையாட்டுகள் பற்றி குழந்தைகள் மனநல மருத்துவரான ஜெயந்தினியிடம் பேசினோம்…

வன்முறைகள் நிறைந்த விளையாட்டுகளைப் பதின்பருவத்தினர் விரும்புவது எதனால்?‘‘மரபியல் காரணமாக ஏற்படும் ஈர்ப்பு இதற்கு முதல் காரணம். ஆக்ரோஷ மனப்பான்மை கொண்ட முந்தைய தலைமுறையினரின் தொடர்ச்சியாக சில குழந்தைகள் எளிதில் இதற்கு ஆட்படுவார்கள். அடுத்தது, குழந்தைகள் வளர்கிற சூழல். வீட்டிலோ, பள்ளியிலோ மற்றவர்களை அடக்கி ஆளும் மனப்பான்மையுடன் யாரேனும் நடந்து கொள்வதைப் பார்த்து, அவர்களைப் போன்று நாமும் மாற வேண்டும் என்றும் சில குழந்தைகள் முயற்சிப்பார்கள். வன்முறைகள் நிறைந்த திரைப்படங்களைப் பார்க்கும்போதும் அந்த எண்ணம் தூண்டப்படலாம். இன்று தொலைக்காட்சிகள் நம் வீட்டில் ஓர் உறுப்பினராகவே மாறிவிட்டன.

அதனால், இதுபோன்ற விளையாட்டுகள் எளிதில் அவர்களின் பார்வைக்குக் கிடைப்பதும் ஒரு காரணம். அதனால், குழந்தைகளின் வளர்ச்சியில் அவர்களது சுற்றுப்புறச் சூழ்நிலை மிகவும் முக்கியமானது. பெற்றோர் இந்த விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும்.’’வன்முறை மனப்பான்மை குழந்தை களிடம் உருவாகிக் கொண்டிருப்பதை கண்டுபிடிக்க முடியுமா?‘‘ஒரு குழந்தையின் பேச்சும், செயலுமே அதை காட்டிக் கொடுத்துவிடும். உதாரணத்துக்கு, வன்முறை மனோபாவம் கொண்ட டீன் ஏஜ் பருவத்தினர் குழுவாகச் சேர்ந்து கொண்டு பலவீனமானவர்களைத் துன்புறுத்துவார்கள். தினசரி வாழ்க்கையில் குரூரமான வார்த்தைகளைப் பிரயோகிப்பார்கள். வாகனத்தில் செல்லும்போது, முந்தி செல்பவர்களைப் பார்த்துத் திட்டுவதும் கூட இதில் ஒருவகைதான்.

இதுபோல, பல அறிகுறிகளை அவர்களது நடவடிக்கைகளிலேயே கண்டுபிடித்துவிட முடியும். அதனால், ஃப்ரீ ஸ்டைல் மல்யுத்தம் போலவே வன்முறைக் காட்சிகள் நிறைந்த படங்கள், விலங்குகளுடன் ஆயுதம் வைத்துக்கொண்டு சண்டை போடும் விளையாட்டுகளை பார்க்க அனுமதிக்கக் கூடாது. ஒரு குழந்தை ஆரோக்கியமாக வளர்வதில் பெற்றோர்களும் பெரியவர்களும் பெரிய முன்னுதாரணமாக இருக்கிறார்கள். அதனால், குழந்தைகள் முன்பு கடுமையான வார்த்தைகளைப் பேசுவதையும் தவிர்க்க வேண்டும். நல்ல பண்புகளை வளர்க்கும் Sorry, Please, Thank You போன்ற வார்த்தைகளை தினசரி வாழ்வில் பயன்படுத்த சொல்லித் தர வேண்டும்.’’மன நல ஆலோசனை எப்போது தேவைப்படும்?\

‘‘அளவுக்கு அதிகமான, மற்றவர்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அளவுக்கு வன்முறை மனப்பான்மை இருப்பதை உணர்ந்தால் உடனடியாக மனநல மருத்துவர், உளவியலாளர் ஆலோசனைப்படி சிகிச்சைகள் மேற்கொள்ள வேண்டும். சில நேரம் மருந்துகளும் தேவைப்படலாம். வரும் முன் பாதுகாப்பது எப்போதும் நல்லது. அதனால், எந்த மாதிரியான விளையாட்டுகளை விளையாடலாம், எந்த விளையாட்டுகளைப் பார்க்கலாம் எதைப் பார்க்கக்கூடாது அவற்றின் சாதக, பாதகங்கள் பற்றி குழந்தைகளுக்குக் கற்றுத்தர வேண்டும். வெறுமனே ஒரு செயலைச் செய்யக் கூடாது என்று கடுமையான உத்தரவு போடுவதைவிட, குழந்தைகளுடன் கலந்தாலோசித்து அவர்களுடன் சேர்ந்து முடிவெடுப்பது இன்னும் அதிக பலனைத் தரும்.’’

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உயிர் காக்கும் உன்னதம்!! (மருத்துவம்)
Next post கொரோனா உறுதியானால் முதலில் என்ன செய்ய வேண்டும்..? (வீடியோ)