இது வளர்ப்பு விஷயம்!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 48 Second

ஆபீஸ்ல ஒரே பிரச்னை சார்…’என்று புலம்புகிறீர்களா? இதற்கு உங்கள் பெற்றோரே காரணம் என்று பழி போடுகிறார்கள் வாஷிங்டனின் அலபாமா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இது என்ன அபாண்டமா இருக்கு… அப்பா, அம்மாவுக்கும் ஆபீஸுக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா? அதே சந்தேகம்தான் நமக்கும். Journal Human Relations இதழில் வெளியாகி இருக்கும் இந்த ஆராய்ச்சி பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்…

இந்த உண்மையைக் கண்டுபிடிப்பதற்காகப் பல்வேறு அலுவலகங்களில் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக, மேலதிகாரிகளுக்கும் அலுவலர்களுக்கும் இடையில் நிலவும் உறவு பற்றிக் கணக்கில் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் ஒருவர் மேலதிகாரியிடம் நடந்துகொள்ளும் விதம், அவருடன் பராமரித்து வரும் சுமுகமான உறவு அவருடைய குழந்தை வளர்ப்புடன் தொடர்பு உடையது என்று தெரிய வந்தது.

‘குழந்தை அழுதவுடன் சமாதானப்படுத்த ஏதாவது செய்வது பெற்றோரின் வழக்கம். இதனால் கஷ்டமோ, பிரச்னையோ வந்தால் நம் பெற்றோர் வந்து காப்பாற்றுவார்கள் என்று புரிந்துகொள்கிறார்கள். கேட்டது கிடைக்காதபட்சத்தில், பெற்றோருடன் பிரச்னைக்குரிய உறவு உருவாகிவிடுகிறது. இதே மனநிலையோடு வளர்கிறவர்கள் அலுவலகத்திலும் அப்படியே நடந்துகொள்கிறார்கள்.

அலுவலகத்தில் தங்களுக்குத் தேவையானது கிடைக்காத பட்சத்தில் மேலதி காரிகளுக்கும் அலுவலர்களுக்கும் பிரச்னை உருவாகிவிடுகிறது. இதனால் சுமுகமான உறவு கெட்டு வேலைத்திறனும் குறைகிறது. கடும் மன அழுத்தத்துக்கும் ஆளாகிறார்கள். அரவணைத்துப் போகிற மேலதிகாரியாக இருக்கும் பட்சத்திலேயே அவர்கள் தங்களின் முழுத்திறனையும் வெளிப்படுத்துகிறார்கள். பெற்றோர் இதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக, குழந்தைகள் வளர்ப்பில் அதிக நேரம் செலவிடும் அம்மாக்களுக்கு பொறுப்பு அதிகம்’என்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதை சொல்லுங்க மம்மி!! (மருத்துவம்)
Next post ஆண்களுக்கு விருப்ப இடமாகும் சமையலறை!! (அவ்வப்போது கிளாமர்)