மாலை நேரத்தில் குழந்தை தொடர்ந்து அழுகிறதா? (மருத்துவம்)

Read Time:4 Minute, 47 Second

தொடர்ந்து சயங்கால வேளையில் குழந்தை அழுதால், அது ‘ஈவினிங் கோலிக்’ என்ற குடல் பிரச்னையாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது” என்கிறார் சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர்.

”பயப்படும் அளவுக்கு இது பெரிய நோய் இல்லை. சாதாரண செரிமானப் பிரச்னைதான். குழந்தைகள் பால் குடித்து செரிமானம் ஆகாதபோது அழ ஆரம்பிக்கும். பெரும்பாலும் இது மாலை நேரங்களில் நடக்கும் என்பதால் இதை, ‘ஈவ்னிங் கோலிக்’ என்கிறோம்.

தாய் பாலைத் தவிர்த்து, பசும் பால், பவுடர் பாலை குழந்தைக்குப் புகட்டும்போது, அது சரியாகச் செரிமானம் ஆகாமல், வயிறு மந்தமாகிவிடும். காலையில்குழந்தைகள் தாய் பாலைக் குடித்துவிட்டு, அது சரியாகச் செரிமானம் ஆகாமல் போனாலும், மாலையில் குழந்தை அழ ஆரம்பித்துவிடலாம். பொதுவாக, தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை குறைவுதான். இருப்பினும், குழந்தை, தாய் பாலை அதிகமாகவோ, குறைவாகவோ குடித்தாலும்கூட இந்த பிரச்னை வரும். பால் குடித்தவுடன் ஏப்பம் வரவில்லை என்றாலும் இந்தப் பாதிப்பு ஏற்படும்.

உலகளவில் 40 சதவிகித குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. குறிப்பாக பிறந்த முதல் வாரத்தில் இருந்து நான்கு மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை ஏற்பட வாய்ப்பு அதிகம்!

குழந்தைக்குப் போதிய அளவு தாய்ப்பால் கொடுத்திருக்கிறோமா என்ற சந்தேகம் பெரும்பாலான தாய்மார்களுக்கு வரும். தாய் பால் குடிக்கும் குழந்தை ஒரு நாளைக்கு ஆறு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். அப்படிப் போகவில்லை என்றால் குழந்தைக்குப் பால் போதவில்லை என்று அர்த்தம்.

மதியத்துக்கு மேல் குழந்தை கை விரல்களை இறுக்கமாக வைத்துக் கொண்டு கால்களை மடக்கிக் கொண்டும் அழ ஆரம்பிக்கும். அது போன்ற நேரங்களில் குழந்தையை தரையில் தவழ்ந்து படுக்கவைத்தால் உடனே ஏப்பம் வரும். அழுகையை நிறுத்திவிடும். அப்படியும் அழுகையை நிறுத்தவில்லை என்றால் மிதமான சுடு தண்ணிரில் டவலை நனைத்து, குழந்தையின் வயிற்றில் ஒத்தடம் தந்தால் சரியாகிவிடும்.

குழந்தை அழுகையை நிறுத்தவேயில்லை என்றால் உடனே குழந்தையை மருத்துவரிடம் காட்டுவது நல்லது. குழந்தையைத் தூங்க வைக்க மருந்து கொடுத்து பிறகு, மருத்துவர்கள் சிகிச்சை தருவார்கள்.” என்றார் டாக்டர் .

10 மாதத்துக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிறு தொடர்பாக வரும் பிரச்னைகளும்… தீர்வுகளும்…

குடல் பிறழ்ச்சி, தாய்பாலில் அதிகம் புரதச்சத்து இருப்பதால் ஏற்படுகிற அலர்ஜி, மற்றும் நோய் தொற்று. குழந்தைக்கு தேவையான புரத சத்துக்களும் நோய் எதிர்ப்பு சக்தியும் சீம்பாலில் அதிகம் இருப்பதால் பிறந்த உடன் புகட்டவேண்டியது அவசியம்.

சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு, பிறந்த ஒரு மணி நேரத்துக்குள் தாய்பால் புகட்டவேண்டும். ஆபரேஷன் செய்து பிறந்த குழந்தைக்கு மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்குள் தாய்பால் புகட்டவேண்டும். குழந்தைகளை தினம்தோறும் குளிப்பாட்டவேண்டும். வாரத்துக்கு இரண்டு முறை எண்ணெய்த் தேய்த்துக் குளிப்பாட்ட வேண்டும். வாரம் இரண்டு முறை தலைக்குக் குளிப்பாட்ட வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தட்டம்மை நோய் தடுப்பு தினம்!! (மருத்துவம்)
Next post எல்லா சாதிகளையும் MK Stalin திருப்திப்படுத்தியுள்ளார்!! (வீடியோ)