மாவு அரைக்கும் சைக்கிள்! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 36 Second

இப்போது எல்லாமே இயந்திரமயமாகிவிட்டது. அம்மிக்கல்லால் மசால் அரைத்த காலம் மலையேறிவிட்டது. ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டியது காற்றோடு காற்றாக மறைந்துவிட்டது. பட்டனைத் தட்டினால் போதும், எல்லா வேலையும் செய்ய இயந்திரங்கள் வந்துவிட்டன. அதுவும் நமக்கு பழக்கப்பட்டு விட்டதால், நமக்குள் சின்னதாக சோம்பேறித்தனம் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டது. அந்தக் காலத்தில் அரிசி, மிளகாய், தனியா எல்லாவற்றையும் வீட்டில் உள்ள உரலில் அரைப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது அதையும் மாவு மெஷினில் கொடுத்து அரைக்க ஆரம்பித்துவிட்டோம். இனி மாவு மெஷினில் அரைக்க தேவையில்லை. வீட்டிலேயே அரைக்கலாம். மேலும் நம் உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் என்கிறார் வடமாநில பெண்மணி ஒருவர். அவரின் கண்டுபிடிப்புதான் இந்த மாவு அரைக்கும் சைக்கிள்.

உடற்பயிற்சிக் கூடங்களில் உடல் எடையை குறைக்க பயன்படுத்தும் சைக்கிளைக் கொண்டு மாவு அரைக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார் இவர். சைக்கிளை மிதித்து உடற்பயிற்சி செய்து கொண்டே, வீட்டுக்கு தேவையான மாவினையும் அரைத்து முடித்துவிடலாம் என்கிறார் அந்தப் பெண். சமீபத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரி அவானிஷ் சரண் என்பவர் சமூக வலைத் தளத்தில் ஷேர் செய்த மாவு அரைக்கும் சைக்கிள்தான் இப்போது வைரலாகி பரவி வருகிறது. சைக்களின் முன்பகுதியில் கோதுமையை போட்டதும் பெடலை அழுத்தி மிதித்தால் போதும் தானாகவே அந்த இயந்திரம் கோதுமையை மாவாக்க தொடங்கி விடுகிறது. இதற்காக சைக்கிளில் மாவு அரைக்கும் இயந்திரத்தை இணைத்து புதிய முயற்சி எடுத்துள்ளார்.

இப்போதெல்லாம் கணவருக்கோ, பிள்ளைக்கோ சப்பாத்தி வேண்டும் என்றால் அவர் அரைப்பதற்கு கோதுமையை எடுத்துக்கொண்டு மாவு மில்லுக்கு போவதில்லை. தனது சைக்கிள் இயந்திரத்தில் போட்டதும் மேலே ஏறி மிதிக்க ஆரம்பிக்கிறார். அருகேயுள்ள மாவு அரைக்கும் இயந்திரத்தில் இருந்து கோதுமை உலர்ந்த மாவாக அரைக்கப்பட்டு வெளியேறுகிறது. இப்போது அவர் உடம்பு குறைந்ததற்கு சப்பாத்தி மட்டும் காரணம் இல்லை. சைக்கிள் இயந்திரத்தை மிதிப்பதாலும் எடை குறைந்து விட்டார். மேலும் மற்றவர்களுக்கு மாவை அரைத்து கொடுப்பதன் மூலம் தினசரி 200 ரூபாய் வரை வீட்டில் இருந்தபடி சம்பாதிக்க முடிகிறதாக கூறுகிறார் அந்தப் பெண்மணி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கப்பல் அரசியல் ‘பிழைப்பு’ !! (கட்டுரை)
Next post நல்ல வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்! (மகளிர் பக்கம்)