உழைப்பை முதலீடு செய்தால் வெற்றி! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 10 Second

‘அதிக முதலீடு தேவையில்லை. கடின உழைப்பை காணிக்கையாக்கினால் எளிதாக வெற்றிபெறலாம்’’ என்கிறார், வால்ரஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் டாக்டர் அனிதா டேவிட்.

‘‘நாங்க 30 வருடங்களுக்கு மேலாக ‘வால்ரஸ்’ பனியன் துணிகளை மொத்தம் மற்றும் சில்லறை முறையில் வியாபாரம் செய்கிறோம். எங்களின் முக்கிய அம்சமே லாபத்தில் அனைவருக்கும் பங்கு என்பதுதான். அதாவது நியாயமான விலை, தரமான பொருள். அந்தக் கொள்கையின் அடிப்படையில் ‘அதிக விற்பனை, குறைந்த லாபம்’ என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்்’’ என்றவர் பெண்களுக்கான வேலை வாய்ப்பினை ஏற்படுத்தி வருகிறார்.

‘‘எங்க நிறுவன உடைகளை உற்பத்தி விலையில் பெற்று லாபத்திற்கு விற்பனை செய்வதால், வீட்டில் பொழுதை கழித்துக் கொண்டிருந்த பெண்கள் இன்று தொழில் முனைவோராக மாறியுள்ளனர். கொரோனா காலத்திலும் ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்கிறார்கள். திருப்பூர் நிறுவனங்கள் மட்டுமல்லாமல், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளுக்கும் ஆர்டரின் பேரில் சப்ளை செய்கிறோம். இனி வரும் காலங்களில் கடினமாக உழைத்தால் தான் வெற்றிபெற முடியும்’’ என்றவர் சிறு தொழில்முனைவோருக்கும் ஒரு வழிகாட்டியாக உள்ளார்.

‘‘எங்களிடம் துணி கொள்முதல் செய்து, ஆடை தயாரித்து, எங்களிடமே விற்பனை செய்யலாம். உழைப்பையும், நேரத்தையும் வீணாக்காமல் வாழ்வில் வளம் பெற இது ஒரு நல்ல வாய்ப்பு’’ என்றார் அனிதா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ட்வின்ஸ்!! (மருத்துவம்)
Next post அக்கா கடை-தரமும் சுவையும் இருந்தா கண்டிப்பா ஜெயிக்கலாம்! (மகளிர் பக்கம்)