ஆங்கிலத்தில் அசத்தும் பாட்டி!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 26 Second

சமீபத்தில் ஆங்கிலம் பேசும் மூதாட்டி பற்றிய வீடியோ ஒன்று வெளியானது. 36 செகண்ட்கள் ஓடும் அந்த வீடியோவில் மூதாட்டி ஒருவர் தேசத்தந்தை காந்தியை பற்றி அச்சரம் பிசகாமல் ஆங்கிலத்தில் உரையாற்றுகிறார். உலகின் தலைசிறந்த மனிதர்களில் ஒருவர் மகாத்மா காந்தி. இந்தியாவின் தந்தை என அழைக்கப்படும் அவர் மிக எளிமையான மனிதராக வாழ்ந்தார். அவரது அகிம்சை இந்தியாவை ஆங்கிலேயரிடம் இருந்து விடுதலை பெற்றுத் தந்தது’’ என அந்த உரை நீள்கிறது. ஐ.பி.எஸ் அதிகாரி அருண் போத்ரா என்பவர் வெளியிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகியுள்ளது. மிக சரளமாக ஆங்கிலம் பேசும் காங்கிரஸ் எம்.பியான சசி தரூருக்கு சவால் விடுவதாக அமைந்துள்ள அந்த வீடியோவை இதுவரை 3 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.

நூற்றுக்கணக்கில் அவரை ஊக்கப்படுத்தி கருத்துக்களும் பதிவிடப்பட்டுள்ளன. அந்த குரலுக்கு சொந்தக்காரர் ராஜஸ்தான் மாநிலம், ஜுன்குனு மாவட்டத்தை சேர்ந்த பக்வானி தேவி என்ற மூதாட்டி. வெள்ளை சட்டையும் சிவப்பு மேலாடையும் அணிந்துள்ள அந்த பாட்டி தனது பொக்கை வாயால் பேசும் ஆங்கிலம் நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மகளிருக்கு சவால் விடுவதாக அமைந்துள்ளது. அந்த வீடியோவின் கீழே பாட்டிக்கு எத்தனை மதிப்பெண்கள் போடலாம் என கேட்டுள்ளார். அத்துடன் தன் பங்குக்கு 10க்கு 10 மதிப்பெண்கள் போட்டு ஐ.பி.எஸ் அதிகாரி போத்ரா அந்த மூதாட்டியை ஊக்கப்படுத்தியுள்ளார். இத்தனைக்கும் அந்த பாட்டி பள்ளி படிப்பை மட்டும் முடித்தவராம். பாலைவனத்தில் ஒரு ரோஜாவாக மிளிர்கிறார் பக்வானி தேவி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழ்வென்பது… பெருங்கனவு!! (மகளிர் பக்கம்)
Next post ஆதலினால் காதல் செய்வீர்! (அவ்வப்போது கிளாமர்)