கரிசலாங்கண்ணியின் வியப்பூட்டும் மருத்துவ குணங்கள்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 44 Second

‘‘நம்முடைய பாரம்பரிய உணவுகளில் கரிசலாங்கண்ணி கீரை குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ளது. தலைமுடிக்கு நன்மை செய்யும் என்று பரவலாக நாம் அறிந்திருக்கிற இந்த மூலிகைச்செடி, உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்குமே உகந்தது’’ என்கிற ஆயுர்வேத மருத்துவர் ராதிகா, அதன் மருத்துவ குணங்கள் பற்றித் தொடர்ந்து விளக்குகிறார்.

Eclipta Alba என்பது இதனுடைய தாவரவியல் பெயராகும். இத்தாவரம் சூரியகாந்தி குடும்பத்தைச் சேர்ந்தது.* கரிசலாங்கண்ணியில் இரண்டு வகைகள் உண்டு.மஞ்சள் நிறத்தில் பூக்கள் இருந்தால் அதனை மஞ்சள் கரிசலாங்கண்ணி எனவும், வெள்ளை நிறத்தில் மலர்கள் காணப்பட்டால், அதனை வெள்ளை கரிசலாங்கண்ணி எனவும் குறிப்பிடுவோம். ஆயுர்வேத மருத்துவத்தில் வெள்ளை கரிசலாங்கண்ணி Eclipta Prostata எனவும், மஞ்சள் கரிசலாங்கண்ணி Wedelia Calecdulacea எனவும் குறிப்பிடப்படுகிறது.

கரிசலாங்கண்ணியானது ஆயுர்வேத மருத்துவத்தில் ‘பிருங்க ராஜா’ என்ற சமஸ்கிருத பெயரால் குறிப்பிடப்படுகிறது.

பொதுவாகவே மஞ்சள் மற்றும் வெள்ளை கரிசலாங்கண்ணிக் கீரையானது தலைமுடிக்கு உகந்தது ஆகும். மேலும் உடலுக்கும் குளிர்ச்சியைத் தரக்கூடியது.

மார்க்கவா, ரவிபிரியா, மகாநிலா, சூரியவர்தா மற்றும் கேச ரஞ்சனா(தலை முடிக்கு நிறத்தைக் கொடுப்பது) எனவும் பலவிதமான பெயர்கள் கொண்டது கரிசலாங்கண்ணி.

வெள்ளை கரிசலாங்கண்ணி உடலின் வெளிப்புற பராமரிப்புக்கு நல்லது. மஞ்சள் கரிசலாங்கண்ணி உணவுக்கு மிகவும் ஏற்றது. முக்கியமாக கல்லீரலுக்கு நல்லது.

கசப்பு மற்றும் காரத்தன்மை உடைய இலைகளைக் கொண்ட கரிசலாங்கண்ணி, தெளிவான பார்வையை அளிக்கும். சுவாச, காச நோய்களுக்கு ஏற்றது. சுவாசப் பிரச்னைகளுக்காக இதன் சாறை மூக்கில் விடும் நடைமுறை நாட்டு வைத்தியத்தில் உண்டு.

கரிசலாங்கண்ணியில் இருந்து தயாரிக்கப்படும் பிருங்க ராஜாவசம் என்ற மருந்து இருமல், சளி, கபக்கட்டு போன்ற பிரச்னைகளைக் குணப்படுத்த வல்லது. அது மட்டுமில்லாமல், நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய்களை பலப்படுத்தும்.

கரிசலாங்கண்ணி இலையைச் சாறாக்கி, காதில் விட்டுவர, நாள்பட்ட வலி விரைவில் குணமாகும். கரிசலாங்கண்ணியின் 4 அல்லது 6 இலைகளை நன்றாக மென்று, அதில் வரும் பசையால் பற்களைத் தேய்க்க ஈறும், பற்களும் வலிமை அடையும்.

சுவையுணர்வை அதிகரிக்கும் இந்தக் கீரை, இதயத்தை எந்தவித பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

பெருங்குடல் மற்றும் சிறுகுடலைப் பாதுகாத்து மலச்சிக்கல் ஏற்படாமல் கரிசலாங்கண்ணி பார்த்து கொள்கிறது. இதன் மூலம் செரிமானப் பிரச்னைகள் உண்டாவது தடுக்கப்படும்.

கரிசலாங்கண்ணி கீரையை மருந்தாகவும், உணவாகவும் பயன்படுத்தலாம். இதனுடைய 4 இலையை தினமும் சாப்பிட்டு வந்தால் காயகல்பம் மருந்தாக செயல்படும்.

சர்க்கரை நோயாளிகள் இக்கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நீரிழிவு கட்டுப்படுத்தப்படும். கரிசலாங்கண்ணி பித்த உற்பத்தியைக் கட்டுக்குள் வைக்கும். மஞ்சள் காமாலைக்கு சிறந்த மருந்தாகவும், உணவாகவும் பயன்படுகிறது.

கரிசலாங்கண்ணியைத் தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் உடல் பொன்னிறம் அடையும். கர்ப்பப்பை பலப்படும். பெண்களுக்கு வெள்ளைப்படுதலைத் தடுப்பது போல, ஆண்களுக்கு விந்தணுக்களையும் அதிகரிக்கும்.

அரை கப் கரிசலாங்கண்ணி சாறுடன் இரண்டு டீஸ்பூன் திரிபலா சூரணம் சேர்த்து 6 மணிநேரம் இரும்பு பாத்திரத்தில் ஊறவைத்து குளித்தால் தலைமுடி நரைக்காது. வாரத்தில் ஒரு தடவை இக்கீரையை பொரியல், துவையல், கூட்டு எனச் சாப்பிடலாம்.

பக்க விளைவுகள் இல்லை என்பதால் குழந்தைகளும் சாப்பிடலாம். அதே நேரத்தில், 100 கிராம், 200 கிராம் என அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. பொதுவாகவே கீரைகளில் நார்ச்சத்து அதிகம் என்பதால் இரவில் கரிசலாங்கண்ணி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பலே கீரை பசலை!! (மருத்துவம்)
Next post செம்மையா செதுக்கி இருக்காங்கய்யா இந்த மூவி!! (வீடியோ)