பச்சிளங்குழந்தை நோய் பராமரிப்பு!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 20 Second

சில குழந்தைகளுக்கு பால் அலர்ஜி இருக்கும். அப்போது குழந்தைக்கு தேவையான உணவை மருத்துவரின் ஆலோசனையின் படி தேர்ந்தெடுத்துக் கொடுக்க வேண்டும். சில குழந்தை களுக்கு சோயா பாலும் அலர்ஜி ஏற்படுத்தும். அலர்ஜி ஏற்படுத்தாத பச்சிளங் குழந்தைக்கான பால் பொருட்கள் கிடைக்கின்றன. அதை மருத்துவரின் பரிந்துரைப்படி பார்த்து வாங்க வேண்டும்.

குழந்தைக்கு காய்ச்சல் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நலம். இதுமட்டுமின்றி குழந்தை இயல்பாக இல்லை என்று தோன்றும் பொழுது கட்டாயம் மருத்துவரிடம் குழந்தையை எடுத்துச் சென்று காண்பிக்க வேண்டும். உதாரணத்திற்கு குழந்தைகள் பால் மட்டும் அருந்துவதால் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள்.

நிறைய முறை கொஞ்சம் தண்ணீராக (Semi Solid) மலம் கழிப்பார்கள். சில நேரம் அது இளம் பச்சை நிறத்தில் கூட இருக்கும். அது பற்றி பிரச்னையில்லை. ஆனால், குழந்தைக்கு நிற்காமல் வாந்தி மற்றும் பேதியாகும்போது மருத்துவரிடம் கொண்டு செல்ல வேண்டியது மிக அவசியம். மேலும், பால் குடிக்க மறுக்கிறது. தூங்காமல் கதறி அழுது கொண்டே இருக்கிறது.

வயிற்று உப்புசமாக இருக்கிறது. தோலில் தடித்துப்போதல், அதிகம் சிவந்து போதல், வீக்கம் போன்ற தோல் அலர்ஜி.தொப்புள் கொடி சிவந்து புண்ணாகி இருத்தல் அல்லது வீங்கி இருத்தல். இயல்பான நேரத்தை விடவும் அதிகமாக எழுந்து கொள்ளாமல் தூங்கிக் கொண்டே இருக்கிறது. குழந்தை ஆக்டிவ்வாக இல்லை… இதுபோன்ற சமயங்களில் மருத்துவரின் உதவியை நாடலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஹேப்பியா இருக்க… யோகா செய்யலாம்! (மகளிர் பக்கம்)
Next post செல்லப்பிராணிகள் மன அழுத்தத்துக்கு மாமருந்து!! (மருத்துவம்)