காபி நல்லதும் கெட்டதும்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 46 Second

ஒரு நாளைக்கு எவ்வளவு காபி குடிக்கலாம்?

ஒரு வேளை அருந்தும் ஒரு கப் காபியில் எவ்வளவு கபைன்(Caffeine) அடங்கியுள்ளது என்பது முக்கியம். 100 கிராம் காபினை உள்ளடக்கிய ஒரு கப் காபியை ஒரு நாளைக்கு 2 முதல் 4 முறை வரை குடிக்கலாம். இதையே 6 முறை குடிப்பது அதிகம்.

* காபி குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்?

காபியும் இயற்கையில் இருந்து கிடைக்கும் ஒரு கொட்டை வகையே. எல்லா விதைகளைப் போலவும் இதுவும் ஒரு விதையே. காபி கொட்டையில் அதிகளவிலான ஆண்டி ஆக்ஸிடண்ட்கள் உள்ளன. இதனால் காபி குடிக்கும்போது சில நன்மைகள் உண்டாகிறது. மனச்சோர்வு, மன அழுத்தம், நடுக்குவாத நோய், கல்லீரல் நோய், ஈரல் மற்றும் கல்லீரல் புற்று நோய், இதர புற்றுநோய் பாதிப்புகளில் இருந்து பாதுகாத்து உடலுக்கு நன்மை அளிக்கிறது. காபியை அளவோடு குடிக்கும்போது இது போன்ற நன்மைகளைப் பெறலாம்.

* காபி அதிகம் குடித்தால் என்னவாகும்?

காபி கொட்டைக்கு மூளையைத் தூண்டும் தன்மை உள்ளது. காபியை அதிகளவில் குடிக்கும்போது அது நம்மை அடிமையாக்குகிறது. காபிக்கு அடிமையாகும் ஒருவர் படபடப்பு, தேவையற்ற அதீத உற்சாகம் மற்றும் தூக்கமின்மையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. அதிகளவில் காபி குடித்தால் இதய நோய்கள் தாக்கும் எனவும் சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. சிலருக்கு மரபணு காரணமாக காபியில் கலந்திருக்கும் கபைன் மெதுவான வளர்சிதை மாற்றத்தை ஏற்படுத்தும். இவர்கள் தொடர்ந்து காபி குடித்தால் இவர்களுக்கு இதய நோய்கள் வர அதிகளவு வாய்ப்புள்ளது. வடிகட்டப்படாத காபி கெட்ட கொழுப்பை அதிகப்படுத்தும். கபைன் ரத்த அழுத்தத்தை மெதுவாக அதிகரிக்கச் செய்யும்.

* காபி அடிமைத்தனத்திலிருந்து வெளியில் வருவது எப்படி?

நீங்கள் வழக்கமாகக் குடிக்கும் காபியைக் குடிக்காத போது உங்களுக்குத் தலைவலி, உடல் சோர்வு, கவனமின்மை ஆகியவை இருந்தால் நீங்கள் காபிக்கு அடிமை என்பதைப் புரிந்து கொள்ளலாம். நல்ல உணர்வைப் பெற நீங்கள் மேலும் மேலும் காபி குடித்தால் அது அடிமைக்கான மற்றொரு அறிகுறியாகும். இதனால் ஒரு நாளில் 4 முறைக்கு மேல் காபி குடிப்பதைத் தவிர்க்கவும்.

குறிப்பாக வேலை செய்யாமல் ஓய்வில் இருக்கும் போது ஒரு முறை பழச்சாறு, இளநீர் அல்லது காய்கறி ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் உடலமைப்பு எப்போதும் எல்லா நேரமும் காபியை சார்ந்து இருக்காது என்பதை உறுதி செய்யும். பொதுவாக அதிகாலை மற்றும் மாலை வேளைக்குப் பின்னர் காபி குடிப்பதைத் தவிர்க்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கிய நொறுக்குத்தீனி தாமரை விதை!! (மருத்துவம்)
Next post மெனோபாஸ் தாம்பத்யத்துக்கு தடையாகுமா?! (அவ்வப்போது கிளாமர்)