கோடைக்கு இதம் தரும் மோர்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 32 Second

கோடைக்கு இதம் தரும் விஷயங்களில் ஒன்று குளிர்ந்த மோர் அருந்துவது. இதன் அருமை அறிந்துதான் அந்நாள் முதல் வெயிலில் வீடு தேடி வருபவர்களுக்கு மோர் தந்து உபசரிக்கிறோம்.

* கோடையில் தாகம் தணிப்பது மட்டுமின்றி, நாவறட்சிக்கும் இதமானது. புரோட்டீன் மற்றும் தாது உப்புகள் மோரில் ஏராளமாக இருப்பதால், வியர்வை மூலம் வெளியேறும் உப்பை மோர் மூலமாக சுலபமாகப் பெறலாம். இதில் உள்ள லாக்டோ பாசிலஸ், உடலில் வியர்வையால் வரும் கெட்ட வாடையை தடுக்கும்.

* உடல் குளிர்ச்சியாகவும், வேர்க்குரு வராமல் பாதுகாக்கும்.

* ஒரு கப் பாலில் உள்ள கால்சியத்தைவிட ஒரு கப் மோரில் அதிக கால்சியம் உள்ளது.

* உடலுக்கு புது தெம்பையும், தாகத்தையும் தீர்க்கும் சக்தியையும் கொண்டது மோர்.

* மோரில் உள்ள லெசிதீன் சத்து கல்லீரல், சிறுகுடல் முதலியவைகளை பலப்படுத்தும்.

* மூளைச்சூடு உள்ளவர்கள், ரத்தநாள துடிப்பு உள்ளவர்கள் மோரை அதிகமாக பருக வேண்டும்.

* வெயிலில் அலைபவர்கள் தினமும் மோர் குடித்தால் சிறுநீர் பிரச்னை ஏற்படாது.

* பசு மோருடன் தோல் நீக்கிய இஞ்சியை துண்டு துண்டுகளாக வெட்டிப்போட்டு அதனுடன் எலுமிச்சம்பழச் சாறையும் சேர்த்து பருகினால் உடலுக்கு நல்லது.

* மோரின் புளிப்புத்தன்மை ரத்தக் குழாய்களில் இருக்கும் அழுக்கை கரைக்கும் சக்தி உடையது. நரம்புத் தளர்ச்சியை போக்கும் வைட்டமின் ‘பி’ சத்து மோரில் உள்ளது.

* மோரில் உள்ள லாக்டிக் அமிலம் செரிமான சக்தியை அதிகரிக்கும். வயதானவர்கள் கோடையில் மோர் குடிப்பது நல்லது.

* தினமும் இரண்டு கப் மோர் சாப்பிடுபவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பெருகுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

* குடலில் உருவாகும் நச்சு பாக்டீரியாக்களை அழித்து, வாய்ப்புண், தொண்டைப்புண் வருவதை தவிர்க்கிறது.

* மோரில் வெந்தயப்பொடி ஒரு டீஸ்பூன் கலந்து குடித்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.

* கஞ்சி வைத்து அதில் மோரைக் கலந்து குடித்தால் வெயிலால் ஏற்படும் உடல் சூடு தணியும்.

* மோரில் பெருங்காயம் சேர்த்து குடித்தால் வாய்வு குறையும். வயிற்றுவலி நீங்கும். வயிற்று உப்புசம் நீங்கும்.

* மோரில் கொஞ்சம் கொத்தமல்லி பொடியாக நறுக்கி தூவி அதில் ஒரு தக்காளியை நசுக்கிப்போட்டு ஒரு டீஸ்பூன் உப்பு சேர்த்து குடித்தால் வியர்வையால் ஏற்படும் நீர் இழப்பு சரியாகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சுவையான கோதுமை உணவுகள்!! (மகளிர் பக்கம்)
Next post உலகை உலுக்கும் #Me Too…உளவியல் காரணங்களும் உடனடித் தீர்வுகளும்!!! (அவ்வப்போது கிளாமர்)