பைக் வைத்திருப்பவர்கள் கவனிக்க வேண்டியவை !! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 55 Second

இரண்டு சக்கரம் இல்லாத வீடுகள் கிடையாது. காரணம் பைக் நம்முடைய ஒரு அங்கமாக மாறிவிட்டது. இனி வரும் காலங்கள் மழைக்காலம் என்பதால் இதனை எவ்வாறு பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.

*மழை நேரங்களில் பைக்கில் சைடு ஸ்டாண்ட் போடாதீர்கள். காரணம் கார்பரேட்டரில் மழை நீர் சேர்ந்து, பைக்கை எவ்வளவு மிதித்தாலும் ஸ்டார்ட் ஆகாது. மேலும் பைக்கினுள் இருக்கும் பேட்டரிக்குள் ரசாயன மாற்றம் ஏற்பட்டு பேட்டரியின் ஆயுளும் குறையும்.

*பைக்கில் டேங்க் கவர் போடுவது அவசியம். காரணம் டேங்க் மூடிகள் வழியாக பெட்ரோல் டேங்கிற்குள் தண்ணீர் இறங்கும் அபாயம் உள்ளது.

*மழைநீர் வெள்ளம்போல தேங்கியிருந்தால் சைலன்ஸருக்குள் தண்ணீர் செல்ல வாய்ப்புள்ளது. பைக்கின் கியரிங் செட்-அப்புக்கு ஏற்ப முதல் அல்லது இரண்டாவது கியரிலேயே வண்டியை செலுத்த வேண்டும்.

*பைக்கின் ஸ்பார்க் ப்ளக் தேய்ந்திருந்தால், பைக் நிச்சயம் ஸ்டார்ட் ஆகாது. எனவே எக்ஸ்ட்ரா ஸ்பார்க் ப்ளக்கை கைவசம் வைத்திருப்பது சிக்கலான நேரத்தில் கை கொடுக்கும்.

*சிலர் பைக்குகளின் டயர் தேய்ந்து போகும் அளவுக்கு ஓட்டுவார்கள். டியூபை கழற்றினால் ஒவ்வொரு மில்லி மீட்டர் இடைவேளைக்கு பஞ்சர் போடப்பட்டு இருக்கும். மழை நேரம் வருகிறது என்று தெரிந்தவுடன் டயரை சோதனை செய்து பார்க்க வேண்டும். தேவைப்பட்டால் வேறு டயர் மாற்றுவது நல்லது. காரணம் சாலை எங்கும் தேங்கி இருக்கும் தண்ணீரில் சரியான பிடிப்பு இல்லாமல் வழுக்கி விழ வாய்ப்புள்ளது.

*பேட்டரியில் முழுமையான சார்ஜ் இல்லாமல் பைக் ஓட்டக்கூடாது. பேட்டரியில் சார்ஜ் இல்லையென்றால் வண்டி ஸ்டார்ட் ஆகாது. ஹார்ன் சரியாக வேலை செய்யாது. செல்ஃப் ஸ்டார்ட் எடுக்காது. சாலையில் சிக்னலில் நின்று கொண்டு இருக்கும் போது திடீரென்று நின்றுவிடும். அந்த சமயம் இறங்கி வண்டியை மிதித்து தான் ஸ்டார்ட் செய்ய வேண்டி இருக்கும். திடீரென்று பேட்டரியில் உள்ள சார்ஜ் முழுமையாக இறங்கிவிட்டால் மெக்கானிக்குமே கை விரித்துவிடுவார். புது பேட்டரி தான் மாற்ற வேண்டும்.

*மழைக் காலம் முடிந்ததும் சில பைக்குகளில் ‘கரகர’வென சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இது வண்டியின் செயின்களில் மண் மற்றும் சேறு சகதி சிக்கி இருந்தால் ஏற்படும். செயின் ஸ்ப்ரே கொண்டு சுத்தம் செய்தால் அந்த சத்தம் வராது. தற்போதுள்ள வண்டிகள் செயின் கார்டு இணைக்கப்பட்டு வருகிறது.

*இறுதியாக மழைக் காலம் முடிந்தபிறகு வண்டியை ஒரு தடவை ஆயில் சர்வீஸுக்கு விட்டுவிட வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டாவது ஹக்!! (மகளிர் பக்கம்)
Next post முத்தம் இல்லா காமம்… காமம் இல்லா முத்தம்…!! (அவ்வப்போது கிளாமர்)