நின்றுகொண்டு நீர் குடித்தால் குடலிறக்கம் !! (கட்டுரை)

Read Time:13 Minute, 39 Second

குடலிறக்கம் எனப்படும் ‘ஹெர்னியா’ நோய் ஆண், பெண், குழந்தைகள், சிறுவர்கள் என வயது வேறுபாடின்றி வரக்கூடிய பொதுவான நோயாகும். குடலின் ஒரு பகுதியோ வயிற்றின் உள்ளுறுப்புகளைச் சுற்றி இருக்கும் சவ்வோ (பெரிட்டோனுயம்) வயிற்றுச் சுவரின் (பிரிமென் தகடு) இடைவெளி வழியே வெளித்தள்ளுவதால் இந்நோய் ஏற்படுகின்றது. இந்நோய் ஏற்படுவதற்கான காரணம், பாதிப்புகள், ஏற்படாமல் பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்து, மட்டக்களப்பு, புதுக்குடியிருப்பு, சித்த ஆயுர்வேத ஆதார வைத்தியசாலையைச் சேர்ந்த ‘சர்வாங்கம்’ (பொது வைத்தியர்) வைத்தியர் எஸ்.எம்.தௌஹ்த்தார் உடனான உரையாடலை கேள்வி-பதில் வடிவத்தில் தருகின்றோம்.

கேள்வி: குடலிறக்கம் நோயின் வகைகள் எவை?

பதில்: இது இன்குயினல் குடலிறக்கம், இன்ஸிஸனல் குடலிறக்கம், ஹயட்டஸ் குடலிறக்கம், பெமோரல் குடலிறக்கம், தொப்புள் குடலிறக்கம் என வகைப்படும்.

இன்குயினல் குடலிறக்கம் என்றால், பெரும்பாலும் ஆண்களுக்கு ஏற்படும். ஹெர்னியாவில் 70 சதவீதம் இன்குயினல் ஹெர்னியாவேதான் இருக்கும். இந்தப் பாதிப்பு ஏற்பட்டால், உடலின் பலவீனமான கவட்டு கால்வாய் பகுதிக்கு குடல் தள்ளப்பட்டு, அடி வயிற்றில் நோ காணப்படும்.

இன்ஸிஸனல் குடலிறக்கம் என்றால், வயிற்றில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்ட பகுதியில், தையல் அல்லது பலவீனமான இடத்தில் குடல் இறங்கிவிடும்.

ஹயட்டஸ் குடலிறக்கம் என்றால், மார்பிலிருந்து அடிவயிற்றை நோக்கிச் செல்லும் ஓர் உணவுக் குழாயின் பெயராகும். வயிற்றின் ஒரு பகுதி உணவுக் குழாயின் (ஹயட்டஸ்) வழியாக வெளியே தள்ளினால், அதை ‘ஹயட்டஸ் ஹெர்னியா’ என்பர். இது பெரும்பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது.

பெமோரல் ஹெர்னியா என்றால், குடற் திசுக்கள் தொடைச்சிறையின் சுவற்றை நோக்கித் தள்ளப்படுவதாகும். இது எடை அதிகமான பெண்களுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்குமே அதிகமாக ஏற்படுகிறது.

தொப்புள் குடலிறக்கம் என்றால், பொதுவாக தொப்புள், அதன் அருகில் உள்ள பகுதிகள் வெளித்தள்ளித் தெரிவதைக் குறிக்கும். இவ்வகையான பாதிப்புகள் ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும்.

கேள்வி: ஹெர்னியா ஏற்படக் காரணங்கள் எவை?

பதில்: நீர் அருந்தும் போது உட்கார்ந்து குடிக்க வேண்டும். ஏனென்றால் நின்று கொண்டு நீரை அருந்தும் போது, அந்த நீர் வயிற்றிற்குள் அதிவேகமாக நேரடியாகச் சென்று, ஹேனியா எனும் நோய் ஏற்படுகிறது. குடலுக்குள் நீர் நேராகச் செல்வதால், குடல் சுவற்றை வேகமாக தாக்குகிறது. அதனால் குடல் சுவர் மட்டுமல்ல, இரைப்பை, குடல் பாதை முழுவதும் பாதிக்கப்படுகின்றது.

இச் செயலை நீண்ட நாள்கள் நாம் செய்வோமாக இருந்தால், இரைப்பை, குடல் பாதையின் மீள்தன்மை அதிகரித்து, செரிமான பாதையில் செயல் பிறழ்ச்சி ஏற்படக்கூடும். மேலும், உடல் எடை அதிகரிப்பு, தொடர்ச்சியான மலச்சிக்கல், புகைபிடித்தல் போன்ற காரணங்களால் குடலிறக்கம் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்கின்றது. தொடர்ச்சியான இருமல், அறுவை சிகிச்சையால் ஏற்பட்ட பாதிப்புகளால் தசைகள் பலவீனமாகுவதாலும், அதிக எடையை தூக்குவதாலும் ஏற்படுகிறது.

கேள்வி: ஹெர்னியா ஏற்பட்டதற்கான அறிகுறிகள் என்ன?

பதில்: குடலிறக்கம் ஏற்பட்டதற்கான முதல் அறிகுறி என்றால், பாதிக்கப்பட்ட பகுதியில் கட்டிகள் ஏற்படும். வேறு அறிகுறிகள் என்றால், பதிக்கப்பட்ட இடத்தில் வலி, அது தொடர்பான அசௌகரியங்கள், சோர்வு, அடி வயிற்றில் பலவீனமான உணர்வு போன்றவை காணப்படும்.

மேலும், மார்புப் பகுதியில் வலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்றவையும் குடலிறக்கத்தின் அறிகுறிகளாகக் கூட இருக்கலாம். ஹயாட்டல் ஹெர்னியாவில், மேற்புற வயிற்றில் கடுமையான வலி தோன்றும், முக்கியமாக வெறும் வயிற்றில் ஏற்படக் கூடும். சில நேரங்களில் ஹெர்னியா பிரச்சினைகள் ஏதுமற்ற நிலையிலும் இது காணப்படலாம்.

கேள்வி: குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஹெர்னியா ஏற்படும் என்று குறிப்பிட்டீர்கள் அதுபற்றி தெளிவுபடுத்த முடியுமா?

பதில்: குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஹெர்னியா ஏற்படலாம். சில சமயங்களில் குழந்தைகள் ஹெர்னியாவோடு பிறக்கும் வாய்ப்புகள் உள்ளன. சிறிய வயதில் ஏற்படும் ஹெர்னியாவுக்கு சிகிச்சை அளிக்க முடியும். ஆனால், முதலில் அதற்கான சரியான அறிகுறிகளை கண்டறிவதே மிக முக்கியமான விடயமாகும். சிறார்களுக்கும் குழந்தைகளுக்கும் இரண்டு விதமான ஹெர்னியாக்கள் ஏற்படும். ஒன்று, இங்குவினால் ஹெர்னியா; இரண்டாவது, தொப்புளில் ஏற்படும் அம்பலிக்கல் ஹெர்னியா ஆகியவவையாகும்.

குழந்தைக்கு ஏற்படும் எந்தவொரு பிரச்சினையையும் தாய் நன்கறிவார். தொப்புள் கொடியில் ஹெர்னியா இருக்கும் என்றால், தொப்புளில் அதிகமாக வீக்கம் காணப்படும். மேலும், குழந்தை மலம் கழிக்கும் போதும், சிறுநீர் கழிக்கும்போதும் தொப்புள் கொடியின் வீக்கம் பல்கிப் பெருகுவதையும் குழந்தை அழுவதையும் தாய் கண்டிப்பாக அவதானிப்பார். அதன் மூலமாக கண்டறியப்படுகிறது.

இங்குவினால் ஹெர்னியாவை பொறுத்தவரை குழந்தைகள் மலம் கழிக்கும் போதும், சிறுநீர் கழிக்கும்போதும் முக்குவார்கள். அதேநேரம் ஆண் குழந்தைகளாக இருந்தால் அவர்களின் விதைப்பை வீங்கி பெருத்துக் காணப்படும். இதன் மூலமும் கண்டறிந்து கொள்ளலாம்.

கேள்வி: இதனால் ஏற்படும் பாதிப்புக்கள் என்ன?

பதில்: சிறுநீரகப் பாதிப்பு, ஆத்திரட்டிஸ், நரம்புகள் பதைபதைப்பு, அண்ணாந்து நீர் குடிப்பதால் காது நோய் ஏற்படும்.

சிறுநீரகப் பாதிப்பு: நீரை நின்றவாறோ, நடந்தவாறோ குடித்தால், சிறுநீரகங்கள் வடிகட்டும் செயல்முறை குறைந்துவிடும். சிறுநீரகத்தின் செயல்முறை பாதிக்கப்பட்டால், சிறுநீரங்கள், சிறுநீர்ப்பை, இரத்தத்தில் நச்சுக்கள் தங்கி, அதனால் சிறுநீரகம், சிறுநீர்ப்பை தொடர்பான நோய்களின் தாக்கம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமுள்ளன.

உட்கார்ந்து நீரை குடிப்பதால், உடலின் அனைத்து இடங்களிலும் நீர் உள் நுழைந்து, நச்சுத் தன்மையை சிறுநீரகங்களுக்கு கொண்டு சென்று, நச்சுகளை உடலில் இருந்து முறையாக வெளியேற்றிவிடும்.

ஆத்திரட்டிஸ்: ஆத்திரட்டிஸ் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றது. அதுவும் நீரை நின்றவாறு குடிப்பதால், உடலின் மூட்டுப் பகுதிகளில் உள்ள நீர்மங்களின் சமநிலைக்கு இடையூறை ஏற்படுத்துகிறது. இதனால் நாளடைவில் மூட்டு வலிக்கு ஆளாகி, ஆத்திரட்டிஸ் ஏற்பட வழிவகுத்துவிடும்.

நரம்புகள் பதைபதைப்பு: பொதுவாக நின்று கொண்டிருக்கும் போது சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயற்பட ஆரம்பிக்கும். சிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயற்பட ஆரம்பித்தால், இதயத் துடிப்பு அதிகமாகும், இரத்த நாளங்கள் விரியும், நரம்புகள் அதிகமாக டென்சனாகும், கல்லீரலில் இருந்து சர்க்கரை வெளியேற்றப்பட்டு உடல் சுறுசுறுப்புடன் வேகமாக இயங்கும்.

அந்நேரம் நின்றுகொண்டு நீரைக் குடித்தால், நேரடியாக சிறுநீர்ப்பையை அடைந்து விடும். உட்கார்ந்து இருக்கும் போது பாராசிம்பதெடிக் நரம்பு மண்டலம் செயற்பட ஆரம்பித்து, உடல் ரிலாக்ஸ் ஆகி, செயற்பாடுகளின் வேகம் குறைந்து, நரம்புகள் அமைதியாகி, உண்ணும் உணவுகள், குடிக்கும் நீர் அனைத்தும் மெதுவாக செரிமான மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்படும்.

அண்ணாந்து நீர் குடிப்பதால் காது நோய்: அண்ணாந்து நீர் அருந்துவதால் காது நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புக்கள் உள்ளன. ஏனென்றால், எமது உடம்பில் காது, மூக்கு, தொண்டை வழிகள் ஒரே பாதையில் அடுத்தடுத்து உள்ளன. அதனாலேயே இது ஏற்படுகிறது.

தம்ளரில் வாய்வைத்துக் நீரை அருந்தினால், காதில் ஏற்படுகின்ற நோய்கள் இல்லாது போகும்.

கேள்வி: இதிலிருந்து விடுபட என்ன வழிமுறைகளை கையாள வேண்டும்?

பதில்: உடலின் மெட்டபாலிசம் சீராக நடைபெற, போதியளவு நீர் தேவைப்படுகிறது. அவ்வாறு நீரை நாம் அருந்தும்போது உட்கார்ந்து அருந்த வேண்டும். குறிப்பாக கீழே குறிப்பிட்டுள்ளவாறு நீர் அருந்தி வருவோமாக இருந்தால் எமக்கு வருகின்ற பல நோய்களில் இருந்து நாம் தப்பித்துக்குக் கொள்ளலாம்.

காலையில் எழுந்தவுடன் 1-3 தம்ளர் நீரை அருந்தவும், மதிய உணவுக்கு முன் ஒரு மணி நேரத்துக்கு முன் 2-3 கப் குடிக்கவும், இரவு உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் 2-3 கப் குடிக்கவும்; தம்ளரில் நன்றாக வாய் வைத்துக் குடிக்க வேண்டும்; அவசரமின்றி மெதுவாகக் குடிக்க வேண்டும்.

வாய் நிறைய நீரை வைத்திருந்து கொஞ்சம், கொஞ்சமாக வயிற்றுக்குள் இறக்குதல் வேண்டும். அப்போது எச்சிலுடன் குதப்பி தண்ணீரை வயிற்றில் இறக்குவதால் சாப்பிட்ட உணவு ஜீரணமாகும்.

கேள்வி: குடல் இறக்கம் நோய்கான ஆலோசனை என்ன?

பதில்: சிலர் குடல் இறக்கத்தின் ஆரம்பத்தில் அலட்சியமாக இருந்து விடுவார்கள். இன்னும் சிலர் அறுவை சிகிச்சைக்குப் பயந்து, குடல் இறக்கத்தைப் புறக்கணிப்பார்கள். இதனால் குடல் இறக்கத்தில் அடைப்பு ஏற்பட்டு, அதன் விளைவாக குடல் வயிற்றுக்குள் போகாமல் இரத்த ஓட்டம் தடைப்பட்டு, குடல் அழுகி மிக ஆபத்தான நிலைமைக்கு ஆளாகலாம். ஹெர்னியா என்பது குணமாக்கக் கூடிய நோயாகும். இதில் பயப்பட வேண்டிய அவசியம் ஒன்றுமில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கதவை தட்டினேன்… வாழ்க்கைக்கான பாதை விரிந்தது! (மகளிர் பக்கம்)
Next post கர்ப்ப கால சிறுநீர்த்தொற்று !! (மருத்துவம்)