நமது அடையாளமே விருந்தோம்பல்தான்! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 19 Second

விருந்தோம்பலில் தலை சிறந்த நிலைப்பாடு உள்ளவர்கள் விதை நெல்லையும் பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள் என்பது கிராமத்துச் சொல். சைவம், அசைவம் என இரண்டையுமே சிரத்தை எடுத்துச் சமைப்பதில் செட்டிநாட்டுக்காரர்கள் கெட்டிக்காரர்கள். செட்டிநாட்டு உணவு என்றாலே உணவுப் பிரியர்களுக்கு நாக்கு சப்பக் கொட்டத் தொடங்கிவிடும். பட்டை, ஏலக்காய், கசகசா உட்பட 26 வகையான மசாலாக்களை முறையாகப் பயன்படுத்துவது, வறுத்து கையால் அரைத்து சமைப்பது என அனைத்துமே முழுமை பெற்ற உணவாக இருக்கும். அந்த வகையில் தி.நகர் பாண்டிபஜாரிலும், அண்ணா நகர், வேளச்சேரி, மேடவாக்கம் என்று சென்னையின் மையப்பகுதியிலும் புதுச்சேரி, வேலூர் என தனக்கென்று ஓர் அடையாளத்தை நிறுவியுள்ளனர் ‘பட்டுக்கோட்டை காமாட்சி மெஸ்’.

“சென்னையில் ஆங்கில கலாச்சாரம் அதிகம் இருப்பதால் நம் பாரம்பரியத்தை கொண்டு வர ஆசைப்பட்டு நண்பர்களோடு இணைந்து நானும் என் கணவரும் சேர்ந்து ஆரம்பித்தோம்” என்கிறார் சுகன்யா செல்வக்குமார். “எங்க தாத்தா பாட்டி எப்படி கிராமிய முறையில் விறகு அடுப்பு, அம்மிக்கல், ஆட்டுக்கல் வைத்துச் சொல்லிக் கொடுத்தார்களோ அதேதான் இங்கும் பின்பற்றுகிறோம். ஊரில் எப்படி மிளகாய், மல்லி எல்லாம் காய வைத்து அரைக்கிறோமோ அதேமுறைதான். மட்டன், சிக்கன், காடை, நண்டு, நாட்டுக் கோழி, இறால் என்று ஏழு வகையான மசாலாவின் வித்தியாசத்தையும் வருகிறவர்கள் உணர்கிறார்கள். இவை அனைத்தையும் ஒரு தொக்கு போலவே கொடுக்கிறோம்.

வீட்டிற்கு உறவினர்கள் வந்தால் எப்படிப் பார்ப்போமோ அதே மாதிரிதான் விருந்தோம்பல் நம் கடையில். ஒரு சில கடைகளில் காசுக்கு ஏற்ற மாதிரி கப்களில் வைத்து கொடுப்பார்கள். ஆனால் இங்கு ஒவ்வொரு குழம்பும் டேஸ்ட் பார்க்கச் சொல்லி அதில் எது பிடித்திருக்கிறதோ அதைப் பக்கத்தில் நின்று அன்போடு பரிமாறுவோம். அந்த வகையில் எல்லா குழம்பும் டேஸ்ட்டிற்காக கொடுப்போம். இங்கு கிரேவியெல்லாம் அன்லிமிட்டட் தான்” என்று கூறும் சுகன்யா, ‘‘ஸ்பெஷலாக கருப்பு கவுனி அரிசியில் அல்வா தருகிறோம்” என்கிறார்.

“இப்படி ஒரு அரிசி இருக்கிறது என்பது பலருக்கும் தெரியாது. மாப்பிளை சம்பா அரிசி, கருப்பு கவுனி அரிசி ஆகியவற்றில் கருப்பட்டி வச்சு அல்வா செய்கிறோம். கருப்பு கவுனி கேன்சருக்கு நல்ல மருந்து என்று ஆய்வில் சொல்கிறார்கள். கருப்பட்டியில் அயர்ன் இருக்கிறது. இது போன்ற மருத்துவ குணம் நிறைந்த உணவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். கடையில் மதியம் மட்டுமே பரிமாறுகிறோம். எங்களிடம் ஒரு தனி சிறப்பு என்னவென்றால் ஒரு முறை பயன்படுத்தப்படும் பொருட்களை மற்றொருமுறை பயன்படுத்துவது கிடையாது. எங்களுக்கு ஒரு பெரிய ஆசை வெள்ளைக் காரங்களுக்கு சம்மணம் போட்டு உட்கார வைத்து சாப்பிட வைக்கணும்” என்றார்.

“ஊறுகாய்க்குப் பதில் கருவாட்டுத் தொக்குதான் எங்கள் ஸ்பெஷல்” என்று கூறும் சுகன்யா, சாப்பாட்டில் எந்த விதமான சுவையூட்டிகளையும் பயன்படுத்து இல்லை என்று குறிப்பிட்டார். “கொரோனா காலம் என்பதால் கிச்சன் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதில் ரொம்பவே கவனமாக இருக்கிறோம். கொரோனாவுக்கு மருந்து மாதிரி இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம் எல்லாம் இடித்துப் போட்டு ரசம் மாதிரி கொடுக்கிறோம். மாங்காய் போட்டு தான் மீன் குழம்பு வைப்போம். மேலும் இங்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் பெண்கள் என்பதால், அவர்களின் கைப்பக்குவம்தான் வீட்டு சாப்பாடு நிறைவைக் கொடுக்கிறது’’ என்றார் சுகன்யா.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஃபேஷன் A-Z!! (மகளிர் பக்கம்)
Next post செர்ரி… நினைத்தாலே இனிக்கும்! (மருத்துவம்)