கொரோனாவுக்கு ஆண்கள்னா ரொம்ப இஷ்டம்! (மருத்துவம்)

Read Time:5 Minute, 4 Second

உலகையே தலைசுற்ற வைத்துள்ள கொரோனா குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இதில் உயிரிழப்புகள் தொடர்பாக நடத்தப்பட்ட சில ஆய்வுகளில் பெண்களைவிட ஆண்கள் அதிகளவு பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ள தரவுகள்படி 4ல் 3 பங்கு ஆண்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாவதும், மரணிப்பதையுமே காட்டுகிறது. இதேபோல் மற்ற நாடுகளின் தரவுகளும் ஆண்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், அதன்காரணமாக இறப்பதாகவும் காட்டுகின்றன.

சில நாடுகளில், கொரோனா பாதிப்பால் ஆண்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதும், இன்னும் சில நாடுகளில், ஆண்கள் பாதிக்கப்படுவதைவிட, இறப்பவர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதாகவும் தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. ஆண்களிடம் உள்ள , புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற நடத்தைக் காரணிகள், நீரிழிவு, புற்று நோய் போன்று உடலில் ஏற்கனவே இருக்கும் நோய்கள் மற்றும் மரபணு மாற்றங்களில் நிபுணர்கள் ஆழமான ஆய்வுகள் மேற்கொண்டனர். இதற்கான காரணம்தான் என்ன?

நடத்தை காரணிகள்

பொதுவாகவே கொரோனா வைரஸ் மட்டுமல்லாது அனைத்துவிதமான தொற்று நோய்களுக்குமே ஆண்களே அதிகம் பாதிப்படைகிறார்கள். குறிப்பாக கொரோனா வைரஸ் சுவாசப்பாதையை தாக்குகிறது என்று சொல்லப்படும்போது, ஏற்கனவே, நுரையீரல் பிரச்னை இருப்பவர்களிடத்தில் புகைப்பழக்கமும் சேர்ந்து கொள்வதால் நிலைமை இன்னும் மோசமாகும்.

மதுப்பழக்கமும் கொரோனாவிற்கு எதிரி. இவற்றை ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இதையே உலக சுகாதார அமைப்பும் வலியுறுத்துகிறது.
சீனாவில், பெண்களைவிட இரு மடங்கு ஆண்கள் Covid-19-க்கு பலியானதையும், அதில் 52 சதவீத ஆண்கள் புகைப்பழக்கம் உடையவர்களாக இருந்ததையும் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். அதே போல் தென்கொரியாவில் 2 1 என்ற விகிதத்தில் ஆண்கள், பெண்கள் இறப்பு விகிதம் இருப்பதையும் அந்நாடு வெளியிட்டுள்ள தரவுகள் எடுத்துரைக்கின்றன.

நோயெதிர்ப்பு அமைப்பு

நோயெதிர்ப்பு ஆற்றலிலும் ஆண்களைவிட, பெண்களே வலுவாக உள்ளனர். இதனால் ஹெப்படைடிஸ் பி, சி மற்றும் பிற வகை வைரஸ்களுக்கு எதிரான போரிலும் பெண்களே வலிமையான இடத்தில் இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மரபணுக்களும் ஒரு காரணம்

ஆச்சர்யமான மற்றொரு விஷயம் பெண்களின் மரபணுக்கள். மனிதனின் மூளைத்திறன் மற்றும் நோயெதிர்ப்பு ஆற்றல் அதிகரிப்பதில் ஓ குரோமோசோம்கள் அதிக பங்களிப்பவை. இதில் பெண்களிடத்தில் இரண்டு ஓ குரோமோசோம்கள் இருப்பது கூடுதல் சிறப்பு. தாய்,தந்தை இருவரிடத்தில் இருந்தும் பெண்கள் ஓ குரோமோசோம்களைப் பெறுகின்றனர். ஆனால், ஆண்களுக்கோ, தான் தாயிடமிருந்து மட்டும் ஒரேயொரு ஓ குரோமோசோம் கிடைக்கிறது. பெண்களின் ஆற்றல்மிக்க நோயெதிர்ப்பு சக்திக்கு இதுவே காரணம்.

வாழ்வியல் முறை

இதுமட்டுமல்ல பெண்கள் சுகாதார விஷயத்தில், அதிக அக்கறை எடுத்துக் கொள்வதையும், ஆண்களில் பெரும்பாலோனோர் கழிவறை பயன்படுத்திய பின்னர் கைகழுவும் அடிப்படை சுகாதாரத்தைக்கூட பின்பற்றாதவர்களாக இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், ஆண்கள், பெண்களைவிட சமூகத்தோடு அதிக தொடர்புள்ளவர்களாகவும், விதிகள், கட்டுப்பாடுகளை மீறுபவர்களாக இருப்பதும் சொல்லப்பட்டுள்ளது. இதுவே ஆண்கள் நோய்த் தொற்றுக்கு அதிகம் பாதிக்கப்படுபவர்களாக இருக்கிறார்கள் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கூடையில் பூக்கள்…சூப்பர் பிசினஸ்!! (மகளிர் பக்கம்)
Next post சிறுநீரகக் கற்கள் எதனால் உருவாகிறது? (மருத்துவம்)