தேயிலை மர எண்ணெய் பற்றி தெரிந்துகொள்வோம்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 37 Second

மருத்துவ உலகில் தேயிலை மர எண்ணெய்க்கு முக்கிய இடம் உண்டு. ஆஸ்திரேலியாவின் பூர்வீகத் தாவரமான Tea tree oil அங்கு பல நூற்றாண்டுகளாக மருத்துவ காரணங்களுக்காக உபயோகிக்கப்பட்டு வருகிறது.

* Tea tree என்றதுமே உடனே ஒரு சந்தேகம் வரலாம். நாம் வழக்கமாக சாப்பிடும்/அருந்தும் தேநீருக்கான தேயிலையிலிருந்து Tea tree oil தயாராகிறதா என்று கேள்வி எழும். ஆனால், மருத்துவ உலகில் பயன் படுத்தப்படும் Tea Tree என்பதும், தேநீருக்காகப் பயன்படுத்தப்படும் Tea plant என்பதும் வேறுவேறு.

* இரண்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தேயிலை என்பது நாம் உட்கொள்ளக் கூடியது. ஆனால், Tea tree என்பது நச்சுத்தன்மை கொண்டது என்பதால் உட்கொள்ளக் கூடாது. மேற்புறமாக மட்டுமே பயன்படுத்த வேண்டியதாகும்..

* பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை உள்ளிட்ட சருமத் தொற்றுநோய்கள், புரோட்டோசோல் தொற்றுநோய்கள் மற்றும் சளிச்சுரப்பியல் தொடர்பான பிரச்னைகளுக்கு எதிரான ஆன்டிமைக்ரோபியல் செயல்பாடுகளை Tea tree oil கொண்டுள்ளது.

* காயங்களை விரைந்து குணப்படுத்துதல், சருமப் புற்றுநோயைப் பரவ விடாமல் கட்டுப்படுத்துதல் முதலான சிறப்பு தன்மைகள் இந்த எண்ணெய்க்கு உண்டு.

* Terpinen – 4 என்ற வேதிப்பொருள் தேயிலை மர எண்ணெயின் முக்கியக் கூறாகும். இந்த Terpinen – 4 பாக்டீரியா, வைரஸ், பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படக் கூடியது.

* தேயிலை மர எண்ணெயினை மரத்திலிருந்து எடுத்து அப்படியே பயன்படுத்துவது இல்லை. அதை குறிப்பிட்ட சதவிகிதத்துக்கு நீர்த்துப் போக செய்த பிறகே பயன்படுத்துகிறார்கள். சராசரியாக 5 சதவிகிதம் முதல் 50 சதவிகிதம் வரையிலும் வேறு வேறு முறைகளில் நீர்த்துப் போக வைத்தே(Dilute) பயன்படுத்துகிறார்கள்.

* 5 சதவீத தேயிலை மர எண்ணெயைக் கொண்ட ஜெல் முகப்பருவைக் குறைக்க பயன்படுகிறது. இந்த ஜெல்லை முகப்பரு மீது தடவும்போது தோலில் உள்ள பாக்டீரியாக்கள், வீக்கம், அழற்சி மற்றும் அழற்சி அல்லாத பண்புகளைக் கட்டுப்படுத்தி முகப்பருக்களை மறைய செய்கிறது.

* பொடுகைப் போக்கவும் தேயிலை மர எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக சின்னச்சின்ன பொடுகை போக்குவதற்கு ஷாம்பூக்களில் தேயிலை மர எண்ணெய் 5 சதவீதம் சேர்க்கப்படுகிறது.

* தேயிலை மர எண்ணெய் அதிகம் செறிவூட்டப்பட்ட தாவரவியல் சாறு என்பதால், தோல் அழற்சியை ஏற் படுத்தும். எனவே சரும நல மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துவதே பாதுகாப்பானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நலம் பல தரும் பிரண்டை!! (மருத்துவம்)
Next post உறவில் உச்சகட்டம் எதற்காக?தெரியுமா உங்களுக்கு…!! (அவ்வப்போது கிளாமர்)