சீனாவின் செல்நெறியில் திபெத்தை விளங்கிக் கொள்ளல் !! (கட்டுரை)

Read Time:23 Minute, 39 Second

புனைகதைகளின் மூலம் ஏமாற்றி, காரியங்களைச் சாதிக்கும் முயற்சிகளில் ‘அழுங்குப்பிடி’யாகத் தொடர்வதையே, திபெத்தில் சீனாவின் செல்நெறியாகக் காணப்படுகின்றது. ஆனால், அந்தப்போக்கை எவரும் கேள்விக்கு உட்படுத்தக் கூடாது என்பதிலும் கவனமாகக் காரியமாற்றுகின்றது.

திபெத் ஒருபோதும் சீனப்பேரரசின் கீழ் இருந்ததில்லை என்பது, சீனாவுக்குத் தேவையான மறைக்கப்பட வேண்டிய உண்மை என்பதால், எவரையும் நம்பவைக்கும் விதத்திலும் மிக நேர்த்தியாகவும் ஆனால் தந்திரமாகவும் திபெத் குறித்து பல புனைகதைகள் கட்டியெழுப்பப்பட்டு இருக்கின்றன. வரலாற்றுக் காலம் முதற்கொண்டு, ஆதாரபூர்வமான பல உண்மைகள், தான்தோன்றித்தனமான முறையில், மறைத்தழிக்கும் வகையிலேயே இந்தப் புனைகதைகள் புனையப்பட்டுள்ளன.

2021 மே 21ஆம் திகதி, சீனாவின் அரசசபை, ‘1951இல் இருந்து திபெத்: விடுதலை, அபிவிருத்தி, செழுமை’ என்ற தலைப்பில், வௌ்ளை அறிக்கையை வெளியிட்டது. இதில், திபெத்தில் சீனாவால் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளப்பட்டுவந்த செயற்றிட்டங்கள் குறித்து அலசப்பட்டுள்ளன. இதிலிருந்து திபெத்தில் இடம்பெறும் சம்பவங்கள் யாவும், நன்கு திட்டமிடப்பட்டதும் நீண்டகால நோக்கம் கொண்டதுமான ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் என்பது புலனாகும்.

வௌ்ளை அறிக்கை குறித்து பருப்பொருள் காணும்போது, திபெத் பற்றிய பொய்களைக் கவர்ச்சிகரமாகப் புனைந்து, ‘பீஜிங்கின் வேட்டை ஓநாய்’ என்ற வகை இராஜதந்திரத்தைப் பயன்படுத்தி, ஏற்கெனவே வகுக்கப்பட்ட இலக்குகளை அடைய முயற்சி எடுக்கப்படுவதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.

வரலாற்றைப் பின்னோக்கிப் பார்த்தால், 1951 மே மாதம் 23ஆம் திகதி, ‘சமாதான விடுதலை’ என்ற ’17-புள்ளி ஒப்பந்தம்’ கைச்சாத்திடப்பட்டது. திபெத்திய மக்களுக்கு மீட்பளிக்கக்கூடிய வல்லமை பொருந்திய ஒப்பந்தம் என வர்ணிக்கப்படும் இந்த ஒப்பந்தம் குறித்து, பல்வேறான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக, சீன கம்யூனிஸ்ட் கட்சி, தனக்குச் சாதகமாகச் சூழ்ச்சித் திட்டங்களை வகுத்து, ஏமாற்றியும் வற்புறுத்தியும், தவறான பிரதிநிதித்துவத்தைக் கொண்டும் இந்த ஒப்பந்தம் ​செய்துகொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விடயம், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 70ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி, வெளியிடப்பட்ட ‘வௌ்ளை அறிக்கை’, ’17-புள்ளி ஒப்பந்தத்தை நியாயப்படுத்துவதாக அமைந்துள்ளது. ‘சீனாவிடமிருந்து பிரிக்கமுடியாத பகுதியே திபெத்’ என்ற பிரசார யுக்திக்கு, 17-புள்ளி ஒப்பந்தம் துடுப்புப் போல் அமைந்துள்ளது.

அடுத்த முக்கியமான அம்சம் யாதெனில், வறுமை ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் திபெத்தில் இடம்பெறும் சுரண்டல் நடவடிக்கைகள் ஆகும். 17-புள்ளி ஒப்பந்தத்தின் ஊடாக, திபெத்திலும் துர்கிஸ்தானிலும் இந்தக் கைங்கரியங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.

எதுஎவ்வாறிருந்த போதிலும், 14ஆவது தலாய் லாமாமாவைத் தெரிவுசெய்யும் அதிகாரம் எவர் கையில் உள்ளது? யார் தெரிவுசெய்யப்படப் போகின்றார்? போன்ற கேள்விகள் துருத்திக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, சீன கம்யூனிஸ்ட் கட்சியால் விரும்பப்படும் ஒருவரே, 14ஆவது தலாய் லாமாவாக இருக்கவேண்டும் என்பது போலவே, திபெத் மீது சீனா ஊக்குவிக்கும் சம்பவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. உலகுக்கு தனது விருப்பத்தைத் திணிக்கும் வகையிலேயே, திபெத் மீது பலமுனை அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. இதற்கான முக்கிய துடுப்பாக, 17-புள்ளி அறிக்கை விளங்குகின்றது.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வௌ்ளை அறிக்கை, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே, சீனாவுக்கும் திபெத்துக்கும் இடையில் திருமணத்தொடர்பு இருந்ததாக நிறுவ முற்படுகின்றது. அதில், திபெத்தின் 33ஆவது அரசனான சொல்சென் ஹெம்போவை சீன இளவரசி திருமணம் செய்து கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்தான, ஆதி, நவீன காலங்களைச் சேர்ந்த சான்றுகள், அரசாணை ஆவணங்கள், சர்வதேச ஆவணங்கள் போன்ற எவற்றையும் முன்வைத்து தெளிவுபடுத்தப்படவில்லை.

கி.பி 821ஆம் ஆண்டில், சீனாவுக்கும் திபெத்துக்கும் ​இடையில் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமொன்றில், சீன-திபெத் எல்லை குறித்து வரையறுக்கப்பட்டுள்ளது. ஜோக்னாங் மாகாணத்தில் உள்ள லஹ்ஷாவில் உள்ள கோவிலில் உள்ள தூண்களில் காணப்படும் கல்வெட்டுகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன. திபெத்- சீன எல்லையைத் தீர்மானிப்பவையாகக் காணப்படும் இந்த தூண் கல்வெட்டுகளை இன்றும் காணமுடியும். ‘சீனாவின் கிழக்குப் பக்கம் முழுவதும் பெரும் சீனமும் மற்றும் மேற்குப் பக்கம் முழுவதும் கேள்விக்கு இடமில்லாமல் திபெத்துக்குச் சொந்தமானது. போர் நடத்துதல் குறித்த எல்லைகள் ஊடறுத்துக் கைப்பற்றுதல் தடுக்கப்பட்டுள்ளன’ எனக் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு திபெத்திய வரலாறு மேற்குறிப்பிட்டது போன்று பல ஏற்றுக்கொள்ளக் கூடிய ஆதாரங்களுடன் காணப்படுகின்றது.

1916ஆம் ஆண்டு முதற்கொண்டு, திபெத் தனக்கான ​தேசிய கொடியைக் கொண்டு விளங்குகின்றது. அக்கொடி, 1934ஆம் ஆண்டு சர்வதேசத்தின் முன் பிரசன்னப்படுத்தப்பட்டது. அத்துடன், உலகநாடுகளின் தேசிய கொடிகளில் ஒன்றாக அங்கிகரிக்கப்பட்டு இருந்ததுடன், இந்த அங்கிகாரம் தொடர்பான தொகுப்பொன்றும் ‘தேசிய ஜோகிரபிக் சஞ்சிகை’யில் பிரசுரமாகி இருந்தது, அத்துடன், புதுடெல்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மாநாட்டின் போதும், திபெத்தின் தேசிய கொடி பறக்கவிடப்பட்டிருந்தமை, திபெத்துக்கான தன்னாட்சி உரிமையை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.

எனவே, சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வௌ்ளை அறிக்கை, திபெத்தியர்களின் தனித்துவமான வரலாற்றுப் பின்னணியை தந்திரமாக இல்லாமல் செய்ய முயல்வதுடன், அவர்களின் சுதந்திரம், இறையாண்மை, நிலஉரித்து, பாரம்பரியங்கள் என அனைத்தையும் இல்லாமல் செய்வதற்கான எத்தனங்களை மேற்கொள்கின்றது என்பது உறுதிப்படுத்தப்படுகின்றது.

வௌ்ளை அறிக்கையை அமைதியான விடுதலைக்கானது என்று வர்ணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சி, 17-புள்ளி ஒப்பந்தத்தை திபெத்தின் மீது உரிமைகோருவதற்கு ஒரு கூர்மையான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றது என விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. முக்கியமாக, திபெத்தின் தன்னாட்சி உரிமை, முறுகல் நிறைந்த சிக்கல் நிலைக்குள் நிலைமைக்குள் வைத்திருக்கவே அக்கட்சி விரும்புகின்றது.

அமரர் என்காபோ என்காங் வாங்கின் தலைமையிலான தூதுக்குழுவுக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என சீனா உறுதிபடக் கூறியிருந்தது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஒப்பந்தத்தை முழுமைப்படுத்தும் அளவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கவில்லை. அதேவேளை சகல முக்கிய விடயங்களிலும் சுயமாக முடிவெடுக்க முடியாத வகையில் அறிவுறுத்தல்கள் வழங்கியமையும் திபெத்திய அ​ரசாங்கத்தின் சார்பில் அரச நடைமுறைகளுக்கு மாறாக, கைச்சாத்திட வைக்கப்பட்டமையும் பாரதூரமான விடயமாகக் கருதப்படுகின்றது. ஷாம்போ மாகாணத்தின் ஆளுநரான ஜிக்மியிடம் ஒப்பந்தத்துக்கான கையெழுத்து வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டிருந்ததுடன் அவ்வாறாக ஒப்பந்தமொன்றில் ஒப்பமிடுவது அவரது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டதுடன் திபெத்தின் அதிகாரபூர்வ பிரதிநிதித்துவம் அற்றநிலையில், குறித்த ஒப்பந்தமும் செல்லுபடித்தன்மை அற்றதாகும். முதலாவதாக, ஒப்பந்தத்தின் நோக்கத்துக்கு எதிரான போக்கையே சீனா பின்பற்றி வருகின்றது.

முக்கியமாக, ‘திபெத் மக்கள் ஒன்றிணைந்து, ஆக்ரோசத்தைக் கைவிட்டு, ஏகாதிபத்தியப் படைகளுடன் கைகோர்த்துப் பயணிக்க வேண்டும். அவர்கள் சீன மக்கள் குடியரசில் உள்ள தங்கள், குடும்பங்களிடத்தில் திரும்பிச் செல்வார்கள்’ என்பது திபெத்தின் உண்மையான அடிப்படைகளுக்கு மாறான புனைகதையாகும். ஏனெனில், வரலாற்றுக் காலம் முதற்கொண்டு, திபெத் சீனாவின் ஒரு பகுதியெனக் கூறும் சீனாவின் ​புனைகதையை உடைப்பதற்கு சிறந்த சான்றாதாரமாக, வரலாற்றுக்காலப் பகுதி முதற்கொண்டு, திபெத் சீனாவின் ஒரு பகுதியாக இருந்திருக்குமானால், திரும்பிப் போதல் என்ற பேச்சுக்கே இடமில்லை. போலி முத்திரை பதிக்கப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி, திபெத்தின் மீது உள்நோக்கம் கொண்ட திட்டங்களை செயற்படுத்தல் சீன ​அரசாங்கத்தால் முன்​னெடுக்கப்பட்டு வருகின்றது.

​ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டப்படும் முதலாவது விடயம் யாதெனில், ‘தேசிய பிராந்தியங்களுக்கான தன்னாட்சியின்கீழ், ஒருங்கிணைந்த தலைமைத்துவத்தை மத்திய அரசாங்கம் மூலம் அனுபவிப்பதற்கு திபெத்திய மக்களுக்கு பூரண உரிமையுண்டு.

இங்கு கேள்வி ஒன்று எழுகின்றது. அதாவது, திபெத் மக்களுக்கு அவர்களின் சமூக உரிமைகள், தேசிய பிராந்திய தன்னாட்சி உரிமைகள் இருக்குமானால், எதற்காக திபெத்தினுடைய தன்னாட்சிப் பிராந்தியங்களை முகத்திரை போட்டு மறைக்க வேண்டும்?

அத்துடன், 1965இல் சீன அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, மூன்று பாரம்பரிய மாகாணங்கள், எவ்வாறு ஐந்து மாகாணங்களாக மாறின?

ஒப்பந்தத்தின் நான்காவது விடயம், வெளிப்படையாகச் சுட்டிக்காட்டுவது யாதெனில், திபெத்தின் மத்தியில் கட்டமைக்கப்பட்டவற்றில் மாற்றம் செய்யப்படாது, திபெத்தின் அரசியல் கட்டமைப்புகள் எங்கும் வியாபித்து இருக்கின்றன. அது தலாய் லாமாவின் அந்தஸ்து, அதிகாரம், ஸ்தானம் குறித்து கேள்விக்குட்படுத்தியிருந்தது.

ஆனால், 1959இல், திபெத்தின் தேசிய எழுச்சிக்கு வித்திட்டு, வழிநடத்திய 14ஆவது தலாய் லாமாவின் புனிதத் தன்மைக்கு, மாசு கற்பிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அத்துடன் 10ஆவது பான்சென் லாமாவின் முறைப்பாட்டின் பேரில் சிறைவைக்கப்பட்டதன் பின்னர், சீன கம்யூனிஸ்ட் கட்சி, தனது திபெத் மீதான முழுக்கட்டுப்பாடுகளையும் இறுக்கியிருந்தது. தமது எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள, எல்லைமீறிய அடக்குமுறை வடிவங்களைப் பிரயோகித்தது. இதனால் ஏராளமான மக்களின் வாழ்வியல், பண்பாட்டு அம்சங்கள் சீரழிக்கப்படுவதுடன் ஏராளமான சீன இராணுவம் மற்றும் சீனக் குடியேறிகள் இந்த நாசகார வேலைகளுக்குத் துணைபோயினர்.

ஒப்பந்தத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயம் யாதெனில், ​திபெத் சமூகத்தின் பொக்கிசமாகக் கருதப்படும் மதநம்பிக்கைகள், பண்பாடுகள், பாரம்பரியங்கள், கலைகலாசாரங்கள் போன்றவற்றை, லாமா மடாலயங்கள் பாதுகாத்து வந்தன. சீன கம்யூனிஸ்ட் கட்சி அநேக மடாலயங்களை அழித்ததுடன் அநேக திபெத்திய மக்கள், பிக்குகள், பிக்குனிகள் ஆகியோர் ஈவிரக்கமின்றி விரட்டியடிக்கப்பட்டனர். இதுபோன்றதொரு சம்பவம் கடைசியாக, ஹன்ஸ் மாகாணத்தில் லான்ஸூ என்ற இடத்தில் அமைந்துள்ள ஹொங்-செங் மடாலயத்தில் இடம்பெற்றது. இந்த மடாலயம் தாக்குதலுக்கு உள்ளாகியதை அடுத்து, அங்குள்ள உள்ளூராட்சி நிர்வாகம், மடாலயத்தை அச்சுறுத்தி மூடவைத்திருந்தது. அத்துடன் மடாலயத்தில் இருந்த பிக்குகள், எதிர்ப்பினைத் தெரிவித்தும் இந்தக் கைங்கரியம் அரங்கேறியிருந்தது.

அதேபோல், மீறப்பட்டுக் கொண்டிருக்கும் 17-புள்ளி ஒப்பந்தத்துக்கு எந்த செல்லுபடித் தன்மையும் கிடையாது. உடன்படிக்கைகளும் ஒப்பந்தங்களும் அதை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும். இல்லாவிடின், ஒப்பந்த மீறலாகவும் சட்டத்துக்கு விரோதமானதாகவும் வியன்னா உடன்படிக்கையின் பிரிவு 521இன் பிரகாரம், சர்வதேச ஒப்பந்தச் சட்டடங்களை மீறுவதாக அமையும். இத்தகைய உடன்படிக்கை மீறல்போக்கு, ஆரம்பம் முதலே காணப்படுகின்றது.

முக்கியமாக, 17-புள்ளி ஒப்பந்தத்தில், குறித்துரைக்கப்பட்ட அம்சங்கள் எவையும் ஒருபோதும் அதனுடைய தாற்பரியங்கள், பெறுமானங்கள், முக்கியத்துவம் உணர்ந்து, திபெத்தியர்களுக்கு உதவும் உண்மையான நோக்கம் கொண்டு அமையாமல் போலியானதும் மடைமாற்றும் செயற்பாடுகளாகவே முன்னெடுக்கப்பட்டன.

திபெத்தின் கிழக்குப் பகுதியிலும் துர்கிஸ்தானிலும் சட்டவிரோத நடவடிக்கைகள் நியாயப்படுத்தப்பட்டு வருகின்றன.

திபெத்தின் கி​ழக்குப் பகுதியில் பெரும் புரளிகள் கூறப்பட்டு, கொந்தளிப்புகள் தணியவைக்கும் வகையில் அடக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, ‘வறுமையை ஒழித்தலும் திபெத்தை மறுபிற​வி எடுக்க வைத்தலும்’ என்ற கோசத்துடன் இரண்டு புனைவுகளைப் புனைந்து, சிலபல கைங்கரியங்கள் அரங்கேறுகின்றன.

குறிப்பாக வறுமை ஒழிப்பு நாடகத்தில், கிராமப் புறங்களில் வாழும் மக்களை, நகர்ப்புறங்களில் குடியேற்றி, திபெத்தியர்களின் கண்ணியமான கலாசார பாரம்பரிய வாழ்க்கைமுறை அழித்தொழிக்கப்படுகின்றது. இவையெல்லாம் வெளிப்படையாகத் தெரிவதற்கு அப்பால், பெரும்பித்தலாட்டம் இடம்பெறுகின்றது என்ப​து ஆய்ந்தறிந்து உணர்ந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். உண்மையில் வறுமை ஒழிப்பு என்ற பெயரில் இடம்பெறும் இந்தப் ​பித்தலாட்டத்தின் நோக்கம், திபெத்தியர்களின் பாரம்பரிய இருப்பைப் பந்தாடுவதாகும். இதை வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதைப் போல், மெதுமெதுவாக முன்னெடுத்துச் செல்வதுடன், அவர்கள் மத்தியில் சீனாவின் விசுவாசத்தை அதிகரிக்கச் செய்தல் ஆகும். மடாலயங்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டு வருவதால், திபெத்தியர்களின் வாழ்வியலுக்குள் சீனா தன்னுடைய நோக்கங்களைத் திணித்து வருகின்றது

வௌ்ளை அறிக்கையில் கூறப்பட்டதன் பிரகாரம், வறுமையை முழுமையாக வெற்றி கொள்ளுதல் என்ற தலைப்பில் காணப்படும் முக்கிய பிரிவில் குறிப்பிட்டுள்ளதன் பிரகாரம், அநேக புள்ளிவிவரங்கள் வறுமையை வெற்றிகரமாக ஒழித்ததாகவும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வறுமை ஒழிப்புக் கொள்கை வெற்றி அளித்துள்ளதாகவும் நிறுவப்பட்டுள்ளது. ஆனால், இவற்றின் பெரும்பாலான தகவல்கள் உண்மைத்தன்மை அற்றவையாகவும் உறுதிப்படுத்தப்படாதவையாகவும் காணப்படுகின்றன.

குறித்த வௌ்ளை அறிக்கை மேலும் வற்புறுத்தியுள்ளது யாதெனில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றைத் திரிபுபடுத்தும் பிரிவு, தலாய் லாமாவின் மறுபிறவி என்று திபெத்தியர் அல்லாத, பௌத்தம் தொடர்பாக எந்த அறிவும் இல்லாத திபெத்தின் உண்மை வரலாறு குறித்து எந்தத் தெளிவும் இல்லாத ஒருவரை அடுத்த தலாய் லாமாவாகத் தெரிவு செய்வதில் ஆர்வமாக இருக்கின்றது. நாடு கடந்த திபெத்திய அரசாங்கத்தின் தலைவராக பென்பா செரிப் தெரிவுசெய்யப்பட்டமையை அடுத்து, அடுத்த தலாய் லாமாவைக் கண்டடைவதில் பீஜிங் மிக ஆர்வமாக இருக்கிறது.

இதன்மூலம், திபெத்தியர்களின் இயங்குநிலை, நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் முகமாக பொம்மை தலாய் லாமாவை ஏற்பாடு செய்வதற்கு ஆர்வமாக இருக்கின்றார்கள். தூய நடம்பிக்கை, பொதுமக்களின் நேர்மையான நம்பகத்தன்மை, இறைஆணை ஆகியவற்றின் அடிப்படைகளிலும் வரையறைகளின் பேரிலும் தலாய் லாமா ஒருவரை, சீனா தெரிவு செய்வது என்பது கடினமானதாகும். எனவே, இதுகுறித்து உத்வேகப்படுத்திய பிரசாரத்தை உலகம் முழுவதும் அரங்கேற்றப்பட்டு வருகின்றது. இதன் முழுமையான நோக்கம் இரத்தத்திலும் கண்ணீரிலும் ​தோய்ந்த திபெத்தியர்களின் குரலை அடக்குவதற்கானது என்பது வெளிப்படையாகும்.

வௌ்ளை அறிக்கை கூறிப்பிடுவது போன்று, திபெத்தின் அடிப்படை உண்மைகளை அடி​யோடு வேரறுத்து, சீனர்களால் புத்திசாதுரியமாகப் புனையப்பட்ட கட்டுக்கதைகளுக்குள் திபெத்தின் தன்னாட்சி இறைமை அபகரிக்கப்படுகின்றது. இவ்வாறான சட்டவிரோத ஆக்கிரமித்தல் செயற்பாடு அதிகரித்துச் செல்வதால், அந்த உண்மையை உலகத்துக்குத் தெரியாமல் மூடிமறைக்க, இந்த ஆத்மிக பூமியில் மிருகத்தனமான அடக்கு முறைகள் அரங்கேற்றப்படுகின்றன. சமாதானத்தை விரும்பும் மக்கள் மீதும் மண் மீதும், சுரண்டல்கள் மூலம் தலையீடு இடம்பெறுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதய சிகிச்சையில் முப்பரிமாண முறை!! (மருத்துவம்)
Next post கர்ப்பகால நீரிழிவு நோயும் தீர்வுகளும்!! (மகளிர் பக்கம்)