சிறுநீரக கற்களுக்கு தவிர்க்க வேண்டிய உணவுகள்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 31 Second

காய்கறிகள்: தக்காளி விதைகள் (விதை நீக்கப்பட்ட தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்.) பாலக் கீரை, பசலைக் கீரை இவற்றில் ஆக்சலேட் சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்காய், காளான், காலிஃப்ளவர் இவற்றில் சிறுநீரக கற்களின் மற்றொரு அங்கமான யூரிக் அமிலம் (Uric Acid) அதிகம் உள்ளது. பரங்கிக்காய் இதில் யூரிக் அமிலமும் அதன் மூலப் பொருளான ப்யூரின்களும் அதிகம் (Purines) உள்ளன. இந்தக் காய்கறிகளைத் தவிர்க்கவும்.

பழங்கள்: சப்போட்டா, திராட்சை இவற்றில் ஆக்சலேட் அதிகம்.

எள்: இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும்.

அசைவ உணவுகள்: ஆட்டிறைச்சி (Mutton), மாட்டிறைச்சி (Beef), கோழிக் கறி (Chicken), முட்டை (Egg), மீன் (Fish) இவை அனைத்திலும் ப்யூரின்களும், யூரிக் அமில மும் அதிகம். யூரிக் அமில வகைக் கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.

முந்திரிப்பருப்பு: இதில் அதிக ஆக்சலேட் உள்ளது. சிறுநீரகக் கற்கள் பெரும்பாலும் கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்தவை ஆகும். இதனைத் தவிர்க்கவும். சாக்லேட், சாக்லேட் கலந்த தின்பண்டங்கள், காபி, டீ ஆகியவற்றிலும் ஆக்சலேட் உள்ளது. எச்சரிக்கை தேவை. தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும், கடினத்தன்மை உள்ள நீராய் இருந்தால் காய்ச்சி வடிகட்டி குடிக்கவும்.

கற்களின் வகைகளுக்கேற்ற சிறப்பு உணவு முறைகள்

கால்சியம் மற்றும் ஆக்சலேட் கலந்த வகை கற்கள் : தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். அதிக கால்சியம் உள்ள பால், பால் பொருட்கள் மற்றும் வேர்க்கடலை, ஆக்சலேட் அதிகம் உள்ள சாக்லேட், கோலா கலந்த பானங்கள் மேற்கூறிய மற்ற உணவுகளை குறைத்துக் கொள் ளவும். வயிறு அல்சருக்கு சில சமயம் எடுத்துக் கொள்ளும் ஜெலுசில் போன்ற கால்சியம் கலந்த ஆன்டா சிட் மருந்துகளைத் தவிர்க்கவும். உணவில் உப்பையும் குறைத்துக் கொள்ளவும்.

யூரிக் அமில வகை கற்கள் : தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும். ப்யூரின்கள் அதிக உள்ள மட்டன், சிக்கன், முட்டை, மீன், பால் போன்ற உணவு வகைகளைத் தவிர்க்கவும்.

ஸ்ட்ரூவைட் வகை கற்கள் : இந்த வகை கற்கள் சிறுநீரகங்களில் கிருமி தாக்கத்தால் வருகின்றன. மருத்துவர் பரிந்துரைக்கும் கிருமிக் கொல்லி மருந்துகள் (ஆன்டி பையாடிக்ஸ் -Antibiotics) மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளவும் தினம் குறைந்தது 12 டம்ளர் நீர் அருந்தவும்.

சிஸ்டின் வகைக் கற்கள் :இவை மிக அபூர்வமானவை. மீன் உணவை தவிர்க்கவும். தினமும் 12 டம்ளர் நீர் அருந்தவும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்க்கரை நோயை குணப்படுத்தும் ‘வில்வம்’!! (மருத்துவம்)
Next post காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)