நீரிழிவுக்கு தீர்வு காணலாம்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 51 Second

நீரிழிவு என்பது ஒரு குறைபாடு அது ஒரு நோயல்ல. நீரிழிவுக்கு காரணமானது வயிற்றுக்கு பின்புறம் இருக்கும் கணையம் என்ற உறுப்பு தான் என்று கான்லே அறிவித்தார். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதை தான் டயாபிடிஸ் என்று அழைக்கிறோம். இதை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உணவு கட்டுப்பாடு அவசியம். இன்சுலின் என்பது உடலுக்கு தேவையான ரத்தத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றதை உள்ளே அனுப்பும் கருவியாக செயல்படுவதே இன்சுலின்.

சில காரணங்களால் கணையத்தில் இன்சுலின் சுரக்க முடியாமல் போவதால் அதிகப்படியான இன்சூலின் தேவைப்படுகிறது. இவ்வாறு கணையத்தின் செயல்பாடுகளை இழந்தவர்களைத்தான் “டயாபிடிஸ்” என்று அழைக்கிறோம். டயாபிடிஸ் ஏற்படுவதற்கு பாராம்பரிய குறைபாடு ஒரு காரணம் என்றாலும், அதிகளவு உணவு உட்கொள்ளுதல், போதியளவு உடற்பயிற்சி இல்லாமை, உணவில் அதிகளவு சர்க்கரையை சேர்த்துக்கொள்ளுதல் போன்ற பல காரணங்களால் “டயாபிடிஸ்” ஏற்படுகிறது. மருத்துவரிடம் போவதற்கு முன்பாக நாமே தெரிந்து கொள்ளலாம்.

அதாவது அதிக தாகம் எடுத்தல், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்க உணர்வு ஏற்படுதல், அடிக்கடி பசி எடுத்தல், சீக்கிரம் களைப்படைந்து போதல் போன்ற உணர்வு, எடை குறைதல், கால் மரத்து போதல் போன்றவை நீரிழிவின் பொதுவான அடையாளங்களாகும். இன்சுலின் தேவைப்படும் நீரிழிவு, இன்சுலின் தேவைப்படாத நீரிழிவு என 2 வகை படுவதற்கு காரணம் இன்சுலின் சுரக்கிறதா, இல்லையா என்பதை பொறுத்தே வகைப்படுத்தபடுகிறது.

இன்சுலின் சக்திக்கு ஈடு செய்ய ஊசி முலம் தினசரி 2 அல்லது 3 முறை இன்சுலினை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால் நீரிழிவுக்கு மாத்திரைகள், இன்சுலின் என எது தேவைப்படுகிறதோ அதை பின்பற்றினால் பின் விளைவுகளை தவிர்க்க முடியும். கட்டுபாட்டுக்குள் இருக்கும் நீரிழிவுகளால் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை. கவனமின்மை காரணமாக கட்டுபாட்டுக்குள் இல்லாதவர்களுக்கு பல பிரச்சனைகள் ஏற்படும். சர்க்கரை அளவு அதிகமானால் பார்வை தரும் ரெடினா பழுதாகிவிடும் நிலமை ஏற்படும்.

நீண்ட நாள் நீரிழிவு உள்ளவர்களின் சீறுநீரகம் பழுதடையலாம்.. தோலில் புண்கள், அல்சர் போன்றவை ஏற்படலாம். முக்கியமாக ரத்த குழாய்களில் பாதிப்பு ஏற்பட்டு இதயம், மூளை பாதிக்கப்படலாம். அடிக்கடி சிறுநீரில் இருக்கும் சர்க்கரையின் அளவை சோதித்துக்கொள்ள வேண்டும். மருத்துசர்கள் தரும் மாத்திரைகளை உபயோகப்படுத்த வேண்டும். உடற்பயிற்சி, உணவு கட்டுபாட்டை பராமரிக்க வேண்டும். இதுவே நீரிழிவை போக்க சிறந்த வழி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அடுத்து நடந்த சம்பவம் உலகையே உலுக்கி போட்டது ! (வீடியோ)
Next post சர்க்கரை அளவை கட்டுப்படுத்த வாழைப்பூ சாப்பிடுங்க!! (மருத்துவம்)