நியூஸ் பைட்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:5 Minute, 10 Second

இத்தாலியில் ஒரு யூரோவுக்கு அதாவது இந்திய மதிப்பில் 87 ரூபாய்க்கு வீடுகளை அந்நாட்டு அரசு ஏலம் விட திட்டமிட்டுள்ளது. 1968 நிலநடுக்கத்திற்குப் பின் சலேமி என்ற நகரத்தில் ஏற்பட்ட பாதிப்பில் பல வீடுகள் அழிந்து மக்கள் அந்நகரங்களை விட்டு வெளியேறிவிட்டனர். இதனால் மீண்டும் அந்த நகரங்களில் மக்களை கொண்டுவரும் முயற்சியில் குறைந்த விலையில் வீடுகளை விற்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ஆனால் இந்த பழைய வீடுகள் மிகவும் சேதமடைந்த நிலையில் பலத்த சீரமைப்பு பணிகளுக்குப் பின்பே குடியேற முடியும் எனக் கூறப்படுகிறது.

உலகைச் சுற்றும் இளம் பெண்

19 வயதாகும் ஜாரா ரூதர்ஃபோர்ட் என்ற பெண் தனது சிறிய விமானத்தில் உலகையே சுற்றி வரும் பயணத்தை தொடங்கியுள்ளார். பெல்ஜியத்தில் தன் பயணத்தை தொடங்கி, தற்போது பல ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் ஜாரா, நவம்பர் 3க்குள் 52 நாடுகளுக்கு மேல் பறந்து மீண்டும் பெல்ஜியத்திற்கு திரும்பும் திட்டத்தில் இருக்கிறார். இந்த பயணத்தை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில், உலகத்தை சுற்றி வந்த மிகவும் இளைய பெண் என்ற பெருமை இவரைச் சேரும்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டால் கருக்கலைப்பு செய்யலாம்!

மும்பை உயர் நீதிமன்றம் 23 வாரங்கள் ஆரோக்கியமான கருவை கலைக்க அனுமதி அளித்துள்ளது. குடும்ப வன்முறை காரணமாக, தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்திருக்கும் பெண், தனக்கு உருவான கருவை கலைக்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். அதனை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள், கர்ப்பம் 20 வாரங்களை கடந்திருந்தாலும், சம்பந்தப்பட்ட பெண் குடும்ப வன்முறையால் இப்போது மன ரீதியாக பாதிக்கப்பட்டிருப்பதால், அவரது விருப்பத்தை ஏற்று கருக்கலைக்க அனுமதி அளித்துள்ளது.

திறமை இருந்தால் ஜாமீன்

அசாம் மாநிலம் கவுகாத்தியில், ஐ.ஐ.டி மாணவன் சக மாணவியை பாலியல் வன்முறை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மாணவன் மிகவும் திறமைசாலி, நம் மாநிலத்தின் எதிர்கால சொத்து. இவர் ஆதாரங்களை கலைக்க மாட்டார் எனக் கூறி ஜாமீன் வழங்கியுள்ளனர். நீதிபதி பாலியல் குற்றம் சாட்டப்பட்டவரை திறமைசாலி எனக்கூறி ஜாமீன் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி?

இந்திய அரசுக்கு அனுப்பப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 9 பேரின் பெயர்களை அங்கீகரித்துள்ளது. அதில் மூவர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், அந்த மூவரில் நீதிபதி நாகரத்னா 2027ம்ஆண்டில் இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இது நம் இந்திய நீதித் துறையில் புதிய மைல்கல்லாக அமையும்.

யூஸ் அண்ட் த்ரோ நெகிழிக்கு தடை

சமீபத்தில் காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழலுக்குப் பயங்கர ஆபத்துக்கள் காத்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருந்தனர். இதையடுத்து சர்வதேச அமைப்புகள் பல, உலக நாடுகள் விரைந்து செயல்பட்டு இதனைத் தடுக்குமாறு கூறிவருகின்றனர். எனவே இந்தியாவில் 2022 முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழி பொருட்களான பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், ஸ்ட்ராக்கள், பிளாஸ்டிக் குச்சிகளை கொண்ட இயர்பட்ஸ், பளூன், ஐஸ்க்ரீம், சாக்லெட், பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருட்களுக்கு தடை விதிப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்க்கரை நோயை கட்டுபடுத்தும் வெந்தயம்!! (மருத்துவம்)
Next post வெளித்தெரியா வேர்கள்!! (மகளிர் பக்கம்)